வியாழன், 27 ஜூலை, 2017

ஊர்முறை ஏரி பராமரிப்பு சோழன் ராசராச பாகூர் கல்வெட்டு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 3
பெறுநர்: எனக்கு
Sasi Dharan
பல்லவர் காலம் தொடங்கி ஒவ்வொரு ஊருக்கும் ஏரி வாரியம் என்று
ஒன்றிருந்தது. அந்த ஊர் விவசாயம் செழிக்க அந்த ஊர் மக்கள் தான் அவர்களின்
ஏரியை காப்பாற்ற வேண்டும் வேறு யாரும் வரமாட்டார்கள். உதாரணத்திற்கு
கடலூர் பாண்டி இடையே இருக்கும் "பாகூர்" என்னும் ஊரில் இராஜேந்திர
சோழனின் கல்வெட்டில் மிகத் தெளிவாக 12 வயது தொடங்கி 80 வயது வரை அந்த
ஊரில் வீட்டிற்கு ஒரு ஆண்மகன் கட்டாயம் அந்த ஊர் ஏரியை காப்பாற்ற
வேண்டும் என்கிறார் அப்படி செய்பவர்களின் பாதம் தன் தலை மேல் என்கிறார்!
மீறினால் தண்டனையும் குறிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளைப் போல் நாம்
புதிதாக நாகரித்தை கட்டமைக்க வேண்டிய சூழல் இல்லாமல் நம் முன்னோர்கள்
அவர்கள் கடந்து வந்த பாதையை அவர்கள் கற்ற பாடத்தை மிகத் தெளிவாக
கல்வெட்டுகளாக வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார
்கள். புதிதாக எதையும் செய்ய வேண்டாம் அவர்கள் உருவாக்கிய பாதையில்
பயணித்தால் போதும். சிலையை சுத்த படுத்தினா போதுமா? நாட்டில் எவ்வளவு
பிரச்சனை இருக்கிறது என்று ஒரு நண்பர் கோபப்பட்டார். இல்லை நாங்கள்
இதுபோன்ற கல்வெட்டுகளையும் காப்பாற்றி வருகிறோம். இன்றைய தலைமுறை தான்
செவி சாய்க்கவில்லை..அடுத்த தலைமுறையாவது சாய்க்கும் அவர்களுக்கு இவை
பயன்படலாம் என்ற ஏக்கத்தை தவிர வேறொன்றும் இல்லை!.
30 மார்ச், 10:32 PM · பொது
சோழராட்சி சோழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக