|
மார். 29
| |||
கத்திவாக்கம் நவீனன் .
நாளை சந்திரமான அமாந்த புத்தாண்டு
==============================
========
நாளை, அமாவாசையில் முடியும் மாத கணக்கை உடையவர்களுக்கு புத்தாண்டு...
தெலுங்கர்,கன்னடருக்கு உகாதி, மராட்டியருக்கு குடி பாத்வா, சிந்தி
மொழியினருக்கு சேட்டி சந்த், காஷ்மீரிகளுக்கு நவ்ரேஹ், மணிப்பூரிகளுக்கு
சஜிபு நொங்கமா ஆகியவை புத்தாண்டாக உள்ளன... இவர்களுக்கு நாளை
புத்தாண்டு.....
இங்கு நோக்கத்தக்கது என்னவென்றால், இவை அனைத்து ஹிந்தி பேசாத
மாநிலங்கள்... ஹிந்தி பேசும் மாநிலங்களான, உ.பி,மபி உள்ளிட்டவைகளில்,
ஹோலி அன்றே சைத்ர மாதம் தொடங்கிவிடும்.... அதன்படி, அவர்களுக்கு 15
நாட்களுக்கு முன்பே புத்தாண்டு பிறந்து விட்டது,, ஏனெனில், அவர்கள்
பெளர்ணமியில் முடியும் மாத கணக்கை கொண்டுள்ளனர்...
பண்டு தமிழர்கள், பெளர்ணமியில் தொடங்கும் மாதக்கணக்கை கொண்டிருந்தனர்...
பின்னாளில், சோழர்கள் ஆட்சி காலத்தில், சூரியனை அடிப்படையாகக் கொண்டு,
சூரியன் வருடை ஓரையில்(மேஷ ராசி) நுழையும் நிகழ்வை புத்தாண்டாகக் கொண்டு,
வருடைப்பிறப்பை கொண்டாடி வருகின்றனர்... தமிழர்களுடன் சேர்ந்து,
மலையாளிகள், ஒடியர்கள், வங்கர்கள், அசாமியர்கள், பர்மர்கள்,
கம்போடியர்கள் உள்ளிட்டோரும் சூரிய புத்தாண்டு கொண்டாடுகின்றனர்....
தமிழர்களின் வருடைப்பிறப்புக்கு இன்னும் 15 நாட்கள் உள்ளன......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக