|
மார். 26
| |||
படையல் – இறந்தவர் , நடுகல்
கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்லகத்து இட்டசில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல்மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய்ப் புக்க பின்னும்
பலர்வாய்த்து இராஅர் பருத்து உண்டோரே
நந்து மாறனைச் சங்க வருணர் என்னும் நாகரியர், புறநா. 360 : 16 - 21
பாழிடமாகிய சுடுகாட்டில் கள்ளி ஓங்கி வளர்ந்துள்ள களர் நிலத்தின் பக்கத்தே, பாடையை நிறுத்திய பின்னர், பிணத்தைப் புல் மீது கிடத்தி, கள்ளுடனே சில சோறாகிய உணவைப் புலையன் படைப்பான். புலையன் ஏவலுக்குப் புல்மேல் கிடத்திய பிணத்தைச் சுடலைத்தீயில் சுட்டெரித்தது கண்ட பின்னரும் உண்டு பருத்தோர் பலரும் புகழ் வாய்த்து இருந்தார் இலர். மேலும் காண்க : புறநா. 232
புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் வெட்டியான் சுடுகாடு ஈமக்கடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக