வியாழன், 27 ஜூலை, 2017

இந்தியா விலேயே பெரிய கோவில் திருவாரூர் பறையர் கொலை கோயில் பலி பலியிடுதல்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 12
பெறுநர்: எனக்கு
சூச பார்ப்பனர்
நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா? ஏன் மறைக்கபட்டது தெரியுமா
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான்
நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்!
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள்
ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது
என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன்
சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு
மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர்
கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது. 9 ராஜ
கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய
மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள்,
365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக
சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள்,
24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது.
இக்கோயிலை பெரியகோயில் என்றும் சொல்வர். திருவாரூரில் தியாகராஜரின் முக
தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத
தரிசனம் காண்பது சிறப்பு. கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000
கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக
அமைக்கப்பட்டுள்
ளது. தியாகராஜ சுவாமிக்கு தினமும் அபிஷேகம் கிடையாது. இந்திரன் பூஜித்த,
சிறிய மரகதலிங்கத்திற்கு (வீதி விடங்க லிங்கம்) தான் காலை 8.30, 11மணி,
இரவு 7 மணிக்கு அபிஷேகம் நடக்கும்.
அபிஷேகத்திற்கு பின் சிறிய வெள்ளிப்பெட்டியில் மலர்களுக்கு நடுவே இந்த
லிங்கம் வைக்கப்படும். அதன் மேல் வெள்ளிக்குவளை சாற்றி, அதிகாரிகள்
முன்னிலையில் பெட்டி பூட்டப்படும். மற்ற நேரங்களில், பூட்டிய இந்த பெட்டி
தியாகராஜரின் வலதுபுறத்தில் இருக்கும்.
திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன்
ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846
அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும்
கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து
பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த
தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு
இத்தலத்திற்கு உண்டு. கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர்
ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி
என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்). இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை
முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டு மானால் ஒரு நாள் முழுவதும்
செலவிட்டால் தான் முடியும்.
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில்!!!!
இத்தகைய பெருமை வாய்ந்த கோவிலுக்கு ஏன் வரலாறு இல்லை ஏன் மறைக்கபட்டது?
இந்த கோவில் பறையர்கள் கோவில் பறையர் களிடையே நடந்த ஆலய அதிகார சண்டையில்
வடுக பிராமணர்கள் வரலாற்றை அழித்து சிதைத்து கைப்பற்றினர்
திருவாரூர் கோவில் பறையர்களின் கோவில் இதன் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது
இந்த கோவிலின் பறையர்களின் கட்டுபாட்டில் இருந்த கோவில்
இந்த கோவிலுக்கு கன்றுகுட்டிய அறுத்து வேள்வி செய்வது பறையர்களின்
தொன்மையான வழக்கம் ....
ஆனால் போலி வடுக பிராமணர்கள் இக்கோவிலை ஆக்கிரமித்து பயிர்வகைகளை போட்டு
வேள்வி செய்ய ஆரம்பித்தனர்
அதன் பிறகு மெல்ல மெல்லமாக போலி இதிகாசத்தாலும் பொய்பரப்புரையாலும்
மூலமறையர்கள் ( பறையர்கள் ) அங்கிருந்து விரட்டப்பட்டனர் ..
அதாவது தனது உரிமைக்காக மீண்டும் வேள்வி செய்ய கன்று மாமிசத்தோடு வந்த
பறையனை கொன்றுவிட்டு ..
பறையன் ரூபத்தில் சிவன் வந்தார் என்றும் அவர் கையிலே கன்று மாமிசம்
இருந்ததால் தீட்டு ஆகிவிட்டது என்றும் வந்தவனை பறையன் என்றும் இவர்கள்
திட்டியதால் பறையன் ரூபத்தில் இருந்த சிவன் யாரை பார்த்து பறையன்
என்கிறாய் என்று கோபபட்டதாகவும் அதனால் சிவன் இவர்களை பறையனாக
வாழ்வீர்கள் என்று சாபம் விட்டதாகவும் பிறகு சிவனிடம் மன்றாடி அந்த
சாபத்தை போக்க கேட்டதாகவும் மனம் இளகிய சிவன் இவர்களை மதியானம் மட்டும்
பறையனாக வாழ்வீர்களாக என்று சொன்னதாகவும் ஒரு கதைய கட்டிவிட்டார்கள் வடுக
வேட பிராமனர்கள்
இந்த கோவிலுக்கு யானையேரும் பெரும் பறையனார் மாலை எடுத்து கொடுத்த பிறகே
திருவிழா தொடங்கும் என்பது வரலாறு
கன்று என்பது எல்லா கன்றும் இல்ல இறைவனுக்காக அதை தனியாக வளர்ப்பார்கள்
இந்த திருவாரூர் கோவிலில் பறையர்களின் பிணங்கள் உள்ளே புதைந்து இருக்கிறது ....
இழந்த உரிமைய மீட்க கன்றோடு சென்ற பறையனை கொன்றுவிட்டு சிவன் மதியான
பறையர் என்று கதைவிட்டுவிட்டனர் ......
இறைவா எமது இனத்தின் வரலாற்ற மீட்க வழியே இல்லையா .... போலியான பரப்புரை
எமது இனத்தை கூறுபோட்டுவிட்டதே
எதிரிகள் பறையர்களின் அறிவுக்கு முன் நிர்க்கமுடியாமல் அவர்களை வீழ்த்த பல
போலி பரப்புரைய செய்தனர் வெற்றியும் கண்டனர்
பூமிய 8 அடியிலிருந்து 30 அடிக்குள் ஸ்கேன் செய்கிற டெக்னாலஜ் எதும் இருக்கா ?

1 கருத்து: