|
மார். 26
| |||
அகநானூறு – அரிய செய்தி -88
பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇ கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ
-மாமூலனார், அகநா.265 : 4 – 6
பலவகைப் புகழும் போர் வெல்லும் ஆற்றலும் உடைய நந்தர் என்பாரது சிறப்பு மிக்க பாடலிபுரத்திலே, ஈட்டித் திரட்டிக் குவித்து வைத்திருந்து பின்னர் கங்கையாற்றின் நீர் அடியில் மறைத்து வைத்து மறைந்தொழிந்த நிதியம் போன்ற பெரும் பொருளோ ...
நந்தர் தலைநகர் பாடலிபுத்திரம். பகைவர் கவந்தெடுத்துச் செல்லாதவாறு அன்னோர், கங்கையாற்றின் அடியில் சுருங்கை செய்து மறைத்து வைக்க, அப்பொருள் மறைந்து ஒழிந்தது என்பது வரலாறாகும்.
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றுஅவண்
தங்கலர் ........................ அகம். 251: 5, 6 என்றும் மாமூலனார் முன்னர்க் கூறியுள்ளார்.
இச்செய்தியின் வரலாற்று உண்மையை ஆய்க..
அகநானூறு சங்ககால இலக்கியம்
களப்பாள் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக