வியாழன், 27 ஜூலை, 2017

தம்+அப்பன் தம்+ஐயன் தம்+பின் தம்+இழ் தமிழ் வேர்ச்சொல் உறவுமுறை சொல்லாய்வு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 14
பெறுநர்: எனக்கு
Nadesapillai Sivendran
பண்பாட்டு அசைவுகள் என்னும் புகழ்பெற்ற தனது நூலில் தொ.பா பின்வருமாறு
குறிப்பிடுகிறார்.
தம்+அப்பன் = தமப்பன் என்ற சொல் "தகப்பன்" என்று புழக்கத்தில் உள்ளது.
தமப்பன் என்ற சொல் "தகப்பன்" என்று புழக்கத்தில் உள்ளது. தமப்பன் என்ற
சொல்லே பெரியாழ்வார் பாசுரத்திலும், கல்வெட்டுக்களில
ும் காணப்படுகிறது.
தமக்கை என்ற சொல்லையும் தம்+அக்கை என்றே பிரித்துக் கொள்ள வேண்டும்.
அண்ணனைக் குறிக்க இலக்கியங்களில் வழங்கிவரும் "தமையன்" என்ற சொல்லையும்
இவ்வாறே "தம்+ஐயன்" எனப் பிரிக்கலாம்.
மூத்தவனைக் குறிக்க "முன்" என்னும் சொல் இலக்கியங்களில் வழங்கி வருகிறது.
அதுபோல பின் பிறந்த இளையவனைக் குறிக்க "பின்" என்னும் சொல்
வழங்கியிருக்கலாம். "தம் பின் " என்ற சொல்லே "தம்பி" என மருவியிருத்தல்
கூடும் என்பர்.
*****
இவ்வாறே "தம்+மிழ்(மொழி)" என்பதே தமிழ் என்று மருவி இருக்கவேண்டும் என்கிறார்கள்.
இது தமிழ் மீது கொண்ட பற்றுக்கு ஒரு ஆதி எடுத்துக்காட்டாக
இருக்கக்கூடும்.உறவுகளை தம் அப்பன்,தம் ஐயன்,தம் அக்கை என்று உரிமையோடு
அழைத்தது போன்று தமிழையும் உறவாகக் கருதி தம் மொழி என்று
அழைத்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக