|
ஏப். 14
| |||
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக் கார் அவையம்
நான்காம் பதிவு
தொடர் பதிவு எண்: 134 நாள்: 12.04. 2017
தொடர் நாள்: 102
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
பெருந்தச்சு நிழல் நாள்கா ட்டியின்படிஇவ்வாண்டின் 4-ஆவது முழுநிலவு
தோல்விஅடைந்தது. கடந்த 11.04.2017-ல் அமைய வேண்டிய முழுநிலவு
10.04.2017-இல் கடந்து விட்டது.
சரியாக நள்ளிரவை கடக்கும் போது முழுநிலவின் அறிகுறியைக்
காட்டிவிட்டது. முறை முற்றாமலும் நாள் முதிராமலும் முந்தி வந்து விட்ட
படியால் ஆண்டு நாட்களின் எண்ணிக்கையில் ஒரு நாள் குறைந்து விட்டது
என்பதும். இதுவரை இரண்டு முழுநிலவுகள் தொடர்ந்து தோற்றுள்ள படியால்
இரண்டு நாட்கள் சரிந்து விட்டன என்பதும் கவலையளிக்கிறது.
ஆயினும் ஒரு நல்ல அறிகுறியாக இந்த நான்காவது முழுநிலவாகிய சித்திரை
முழுநிலவானது மேழி வடிவிலான மீன் கூட்டத்தினனுள் சிக்காமல் சென்றது.
நாஞ்சில், மேழி, கலம்பை என்பன எல்லாம் முக்கோண புள்ளிகளாக வானில்
தோன்றும் மீன் கூட்டம். அதில் அழுத்தமான மீனாகத் தோன்றுவது இன்று நாம்
வியாழம் என்று குறிப்பிடும் வான வன்கையன் ஆவான். அந்த வியாழனுக்கு ஒரு
குறுங்கையும் இன்னொரு நெடுங்கையுமிருக்கும். இவை சரியாக செங்குத்துக்
கனைப்பில் இருக்கும். பங்குனி உத்தரம், சித்திரைத் சித்திரை, வைகாசி
வைகாசி இம்மூன்று முழுநிலவுகளும் இந்த முக்கூட்டு மீன்களை அணைந்தே
செல்லும்.
சித்திரை மேழி:-
தமிழர் மரபில் வானத்து மீன்களின் போக்கைப் புரிந்து கொள்ள இலக்கியப்
பதிவுகள் உதவி செய்கின்றன.
வடமீன் எனும் சிறுமீன் எனும் சாலி மீன் எனும் துருவ மீன் எவ்வாறு
வடக்கில் அசைவற்றுத் தோன்றுகிறதோ அவ்வாறே வியாழம் மற்றும் அதன்
கூட்டாளிகளாக குறுங்கை நெடுங்கைச் செங்குத்து ஒரு அளவையைக் காட்டி
நிற்கிறது.
பொதுவாக முழுநிலவுகள் ஆடுதலைப் பண்புடையன ஆயினும் பங்குனி,
சித்திரை, வைகாசி முழுநிலவுகள் இந்த மூன்று மீன்களுடன் எப்படி
நெருங்கியும் விலகியும் வரவேண்டும் என்ற செய்திகள் பயனுள்ளவையாக
இருக்கின்றன.
மற்றபடியான இணையான பாதைகளில் செல்கின்றன. அவற்றுக்கு 'இருக்கை'
என்று பெயர். கிரேக்க மரபில்தான் கோணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
இந்த இருக்கைகள் அனைத்தும் இராசி மண்டலங்களாகக் கதிரவனுக்குக்
குறிக்கப்பட்டுள்ளன. நிலவுக்கு இந்த இருக்கைகள் தேவையில்லை. ஆனால் மேழி
எனும் கலப்பை வடிவம் பேசப்பட்டுள்ளது.
நிலவின் வாய்ப்பாடு வேறு, கதிரவனின் வாய்ப்பாடு வேறு என்று கருதுவது
தவறானது. சித்திரை முழுநிலவு மேழியை நெருங்கும்போது கதிரவன் வருடை எனும்
ஆடு வடிவிலான இருக்கையைக் கடக்கிறான். இவ்வாறாக மகரத்தினுள் நுழையும்போது
தைப்பதம் எனும் முள் குத்துவது போன்ற செய்கை பேசப்படுகிறது.
இம்முறை அறிகுறி:-
இம்முறை சித்திரை முழுநிலவு ஒருநாள் தோல்வியடைந்திருந்தாலும், அது
மேழிக்குள் சிக்கிக் கோள்பட்ட வருடையாக ஆகாமல் தப்பியது ஆறுதலைத்
தருகிறது.
இதனால் தமிழர்களின் அரசுக்கு கேடில்லை என்று நம்பலாம். கடந்த
சித்திரை முழுநிலவும் சிக்காமல்தான் தப்பியது.
தமிழ்ப்புத்தாண்டு:-
இன்றைய நிலையில் தமிழக அரசின் தமிழ்ப்புத்தாண்டுச் சட்டம் ஏப்பிரல்
14-ல் விடுமுறையளிக்கிறது. பஞ்சாங்கத்தின்படி சித்திரை முதல் நாளை
வருடைப் பிறப்பாகவும் தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடுதற்கு உண்மையில்
ஏப்பிரல் 14 தேய்பிறை 4-ஆம் நாள்.
ஓர் ஆண்டு தேய்பிறையில் பிறக்கும் என்றால் என்ன வகையான அறிவை இந்தப்
பஞ்சாங்க நம்பிகள் காப்பாற்றி வந்துள்ளனர்?
தமிழர்கள் செய்ய வேண்டியது:-
கலங்கலான இன்றைய அரசியல் சூழலில் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு
பற்றிய புரிதலைக் கூர்மைப் படுத்திக்கொண்டு அரசியல் நகர்வுகளை அணிதிரட்ட
வேண்டும். இதனில் அயன்மை இன அரசியல் ஆளுமைகள், வந்தேறி பச்சோந்தியர்கள்,
மடைமாற்றிகள் மிகவும் மிகவும் விழிப்புடன் குழப்படி செய்வார்கள்.
குறுக்கே விழுந்து தடுப்பார்கள். இது வேண்டாமே என்பார்கள். அதென்ன
தமிழர்களுக்கு மட்டும் கொம்பா முளைத்திருக்கிறது? என்பார்கள். கொம்பு
முளைத்த கொல்லேறுகளையும் குறை கூறுவார்கள். எதிர்பார்த்ததுதான்.
மீறித்தான் தீர வேண்டும்.
முடிந்தது ஒரு பாட்டை
அது சித்திரைப் பாட்டை:
31.03.2017 முதல் 11.04.2017 வரை 12 நாட்களின் தொகுதியான பாட்டை
அதில் ஒருநாள் தோல்வி. போகட்டும். அடுத்த பாட்டை எப்போது தொடங்குகிறது
என்று கணித்துக் கொள்ள வேண்டும். இம்முறை முழுநிலவு தோற்றுவிட்ட படியால்
10.04.2017 நாளையே முழுநிலவு நாளாகக் கொண்டு அந்த நாளைத் தவிர்த்து
அடுத்த 15-வது நாளில் மறைநிலவைக் கணக்கிட வேண்டும். அது 25.04.2017
ஆகும். 18-ஆம் நாளில் மூன்றாம் பிறை. அந்த நாள் 28.04.2017 ஆகும்.
அப்படியாயின் 29.04.2017 அன்று அடுத்த வளர்பிறை பாட்டைத் தொடங்குகிறது.
வைகாசிப் பாட்டை:-
29.04.2017 முதல் 12 நாட்களை எண்ணினால் 10.05.2017-ல் முழுநிலவு
அமைய வேண்டும். அதுவரை ஒரு விழாத் தொகுதியைத் திட்டமிட்டு மீட்க
வேண்டும். தமிழ் மரபு அதன் வழியே நீளும்.
தமிழ்ப் புத்தாண்டு அரசியல்:-
தமிழர்களை இன வலிமையுடன் கூடிய அரசியல் ஆற்றலாக கட்டி, உருட்டி
எடுத்து நிறுத்தும் ஆற்றல் தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலுக்கு இருக்கிறது.
அது நுண்ணரசியல் உடையது.
படிப்பினை:-
அம்பலம் மளிகைக் கடையில் கண்ணன் என்பவர் வேலை செய்தார். நகரில்
மிகப் பெரிய கனவான் புளி வாங்க வந்தார். கண்ணன் ஓலைப் பெட்டியில் இருந்த
புளியைக் காட்டினார். அந்தக் கனவான் நயம் புளி வேண்டும் என்றார். உடனே
கடைக்காரர் அந்த வெள்ளிப் பெட்டியில் இருக்கும் புளியை எடுத்து வா
என்றார். அதாவது அந்தப்புளியே வெள்ளிப் பெட்டியில் வைத்து
விற்கப்பட்டது. இதெல்லாம் தொழில் ரகசியம். இந்தக் கருணாநிதி கனிமொழிக்காக
அவர் நடத்தும் சங்கமம் எனும் நாட்டுப்புற கூத்துக்காக தை முதல் நாளைத்
தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றியுள்ளார் என்று கூறினார் மறைந்த
அம்மையார். அது முடிந்த கதை. அனைத்தையும் மறந்து உண்மையைத் தேட வேண்டிய
நிலையில் தமிழர்கள் தமது வேர்க்கால்களை வலுப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு
அடித்தளம் அமைத்திட வேண்டும்.
காலம் கதவைத் திறக்கும் என்றும் சித்திரைப் முதல் நாளே தமிழ்ப்
புத்தாண்டு என்று நிலைநாட்டியவர் அம்மையார் என்றும் மடைமாற்றும் வேலையை
இன்றைய அரசு செய்து வருகிறது. அதைத் தவிர்த்து தமிழ்ப் புத்தாண்டு பற்றிய
புரிதலில் உள்ள சிக்கலைத் தீர்க்க தமிழறிஞர்கள் மற்றும் வல்லுநர்களைக்
கொண்ட குழுவை அமைத்து அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வற்புறுத்துவதே
பொருத்தமானது.
இதற்காக இந்த ஆட்சி மாறட்டும் என்று காத்திருப்பது தவறானது. அந்த
ஆட்சி வந்தால் அதைச் செய்வார், இந்த ஆட்சி வந்தால் இதைச் செய்வார் என்று
சூதாடுவதைத் தவிர்த்து எவர் வந்தாலும் இதைத் தான் செய்ய வேண்டும் என்று
வற்புறுத்துகிற அறிஞர்கள் குழுவை அமைத்திட வேண்டும்.
___---ooo000OOO000ooo---___
நான்காம் பதிவு
தொடர் பதிவு எண்: 134 நாள்: 12.04.
தொடர் நாள்: 102
------------------------------
பெருந்தச்சு நிழல் நாள்கா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக