வியாழன், 27 ஜூலை, 2017

மீனவர் மீது இந்திய கடற்படை தாக்குதல்

aathi tamil aathi1956@gmail.com

மார். 31
பெறுநர்: எனக்கு
தமிழகம்
நமது மீனவர்களை நமது கடற்படையினரே தாக்கிய கொடூரம் : எங்கு சென்றாலும்
அடிப்பதாக மீனவர்கள் புலம்பல்
பதிவு செய்த நேரம்:2017-03-31 08:14:49
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் காரைக்கால்
மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடுக்கடலில் தாக்குதல் நடத்தியது
மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகதாபட்டினத்தில்
இருந்து 174 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 16
கடல்மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து
வந்த இந்திய கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும்
மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மீனவர்கள் மணல்மேல்குடி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் காரைக்கால்
மீனவர்கள் மீதும் இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 8
படகுகளில் சென்ற 80 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது
இந்திய கடறப்டையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் 17 மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். தமிழகம் மற்றும் காரைக்கால்
மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு
விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
m.dinakaran.com/Detail.asp?Nid=291295
 தினகரன் செய்தி ஹிந்தியா மீனவன்
search

ஹிந்திய கடற்படையும் மீனவரைத் தாக்குகிறது 

வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக