வியாழன், 27 ஜூலை, 2017

முட்டாள்கள்தினம் பழைய புத்தாண்டு ஏப்ரல்1

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் நவீனன் > உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
# முட்டாள்கள் தினம்
====================
முன்பு ஐரோப்பியர் புத்தாண்டும், இளவேனில் காலத்திலேயே கொண்டாடப்பட்டது.
பின்பு, ஏசுநாதருக்கு பொய்யாக ஒரு பிறந்த தேதி கொடுத்து, புத்தாண்டு
என்பது பனிக்காலத்திற்கு மாற்றப்பட்டது.... மாற்றியப்பின், வழக்கமாக
ஏப்ரலில் புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்கள் ஆக்கி, பண்டைய
புத்தாண்டு தினத்தை முட்டாள்கள் தினமாக்கினர் கிருத்தவர்கள்....
அதேக்கூத்துதான் தற்போது தமிழ் நாட்டிலும் நடக்கிறது... இளவேனிலில்
கொண்டாடி வரும் சூரிய புத்தாண்டை, மேழத்தில் இருந்து, முன்பனிக்காலமான
சுறவத்திற்கு மாற்றி, திருவள்ளுவருக்கு பொய்யாக ஒரு பிறப்பு சான்றிதழ்
கொடுத்து, கிமு 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரை பின்னுக்கு தள்ளி, நம்
அனைவரையும் முட்டாள்கள் ஆக்குகின்றனர் திராவிடர்கள்......
மானத்தமிழர்கள், இந்த திராவிடர்களின் வஞ்சக சூழ்ச்சிக்கு ஆளாகாமல்,
சோழர்கள் உருவாக்கிய சூரிய புத்தாண்டை, மேழம் 1ல் கொண்டாடுவோம்!!!
தமிழருக்கு வானியல் அடிப்படையிலான, போகர்,கோரக்கர் வழிக்காட்டிய
கலியாண்டு இருக்க, தொடராண்டு கவலை ஏன்??

ஏப்ரல்1 முட்டாள்கள்தினம் முட்டாள்கள்நாள் முட்டாள் வரலாறு புத்தாண்டு

இன்பாக்ஸ்
x

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா
ஏப்ரல் -1
உண்மையான வரலாற்றுப்பிண்ணனி
காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம். அதாவது
கி.பி. 1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல்
மாதமாகவும்,மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து
ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட் டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று
வந்தன.
“கிரிகோரி” என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக்
காலண்டரை உருவாக்கியவர். அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும்
டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக்
காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே
பின்பற்றி வந்தனர்.
புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி
நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர்.
இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக
அமைந்து விட்டது.
ஃபிரான்ஸிலிருந்து லண்டன், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஸ்காட்லாந்து,
இங்கிலாந்து, கரீபியன், ஜமைக்கா, கானா போன்ற நாடுகளுக்கும் பரவ
ஆரம்பித்து இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் பரவி
இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக