வியாழன், 27 ஜூலை, 2017

கருணாநிதி திருட்டு ரயில் குற்றச்சாட்டு மறுக்கவில்லை

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 4
பெறுநர்: எனக்கு
www.vikatan.com/news/tamilnadu/149.html
கருணாநிதி வெளியிட்ட சொத்துக் கணக்கு: ஜெ. விமர்சனம்
சென்னை, டிச.03,2010
சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், தனது சொத்துக்
கணக்கை வெளியிட்ட முதல்வர் கருணாநிதியே அதற்குத் தகுதியானவர் என்று
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். ##~~##
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கருணாநிதியிடம் கணக்கு
கேட்டு அதைத் தராததன் காரணமாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால்
உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் என்பதை மறந்து, "கணக்கு காட்டுகிறேன், கண்ணுடையோர் காண" என்ற
தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது,
நகைப்புக்குரியதாக இருக்கிறது.
நூற்றாண்டின் ஜோக்...
இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.
இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன்
உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில்
ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
Advertisement
இதிலிருந்து, தான் ஒரு "உலக மகா ஊழல் பேர்வழி" மட்டுமல்ல, "உலக மகா
பொய்யர்" என்பதையும் கருணாநிதி நிரூபித்திருக்கிறார்.
திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக
கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார் - இதுகுறித்து "வனவாசம்"
புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த
கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் - உண்மையை சொல்லப்
போனால், கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி - இவர்
கூட்டங்களில் பேச ஆரம்பித்தபோது, இவருக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள்
டீயும், இரண்டு வடையும் தான் என்பது மக்கள் அறிந்த விஷயம்.
இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று "கணக்கு காட்டுகிறேன்" என்ற
தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு
புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை என்கிற
தைரியத்தில், மனம்போன போக்கில், காலத்திற்கேற்றால்போல், புளுகு மூட்டைகளை
அவிழ்த்து விடுகிறார் கருணாநிதி.
Advertisement
வனவாசம் புத்தகத்திலிருந்து...
1946ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில்
பங்காளியாக சேர விண்ணப்பித்தபோது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு
நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும்
தெரிவித்து, தன் வசம் "நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூபாய் 1,000"
இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதி இருக்கிறார்.
இதுபோன்று, கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது
என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில்
குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு
ரயிலில் பயணம் செய்தபோது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை
இருந்தபோது, "தனக்கு பசி தாங்கவில்லை" என்று கவியரசர் கண்ணதாசன்
கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில்
இருந்த பழக் கூடையை காட்டி "திருடலாமா?" என்று கேட்டதாகவும், கவியரசர்
கண்ணதாசன் தன்னுடைய "வனவாசம்" புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் கருணாநிதி தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்த கதை,
கணையாழி பெற்ற கதை என கருணாநிதியின் பல கதைகளை புட்டுபுட்டு
வைத்திருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
வருமான வரி?
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய்
சம்பாதித்ததாக கூறி இருக்கிறார் - "மணமகள்" திரைப்படத்திற்கு கதை வசனம்
எழுதி 10 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும், "இருவர் உள்ளம்" திரைப்படத்திற்காக
20 ஆயிரம் ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார் -
அப்படியென்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை
தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? - முதன் முதலில் வருமான வரி தாக்கல்
செய்தபோது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? - அப்போது எவ்வளவு வருமான வரி
கட்டினார்? - ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில்
மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுடைய வீடுகளை விட வசதி
குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை
ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறி இருப்பது
கேலிக்கூத்தாக இருக்கிறது.
கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு; சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா;
கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை
போட்கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட்
கிளப்பில் பிரமாண்டமான மாளிகை; பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில்
மிகப் பெரிய பங்களா; மகளுக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்;
தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25-க்கும் மேற்பட்ட
தொலைக்காட்சி சேனல்கள்; நாளிதழ்கள்; வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ்
ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்; மு.க. அழகிரிக்கு மதுரையில் பல
ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; பலமாடி வர்த்தக கட்டடங்கள்; பொறியியல்
கல்லூரி; மு.க.தமிழரசு, மு.க.முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில்
வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.
பேரன்கள், பேத்திகள் உட்பட கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள்
ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும், ஏராளமான அசையா
சொத்துக்களும் உள்ளன.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத்
துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இடங்களை
கருணாநிதி குடும்பத்தினர் வளைத்து போட்டுள்ளனர். அனைத்து சட்டவிரோத
செயல்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினர் தான் காரணம். தன்னுடைய
கோபாலபுரம் வீட்டின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700
சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.
நீரா ராடியா...
டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு 300 கோடி ரூபாய் மதிப்பில்
மிகப்பெரிய மாளிகை கட்டித்தர இருப்பதாக நீரா ராடியா - ராசாத்தி
உரையாடல்களில் இருந்து தெரியவருகிறது. 600 கோடி ரூபாயை மற்றும் ஸ்டாலின்
மூலமாக தயாளு பெற்றுக் கொண்டுதான், தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை
கொடுத்ததாக, அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன. பேரனிடமே 600
கோடி ரூபாய் பெற்றார் என்றால், மற்றவர்களிடமிருந்து எவ்வளவு தொகை
பெறப்பட்டதோ?
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதுபோல், அமைச்சர் பதவிகளையும்,
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் கருணாநிதி விற்கிறார்
என்பது இந்த உரையாடல் பதிவின் மூலம் தெரிகிறது.
இதுபோன்ற கருணாநிதியின் ஊழல் சம்பவங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இதற்கு எல்லையே கிடையாது.
கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களால் சம்பாதிக்கப்படுகின்ற பணம்
அனைத்தும் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சம்பாதிக்கப்படுகின்ற பணமே
தவிர, உழைப்பினாலோ, திறமையினாலோ சம்பாதிக்கப்படுவது அல்ல என்பது ஊரறிந்த
உண்மை. தமிழ்நாட்டை லஞ்சக்காடாக்கிய பெருமை கருணாநிதியையே சாரும்!
உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர்போல சித்தரித்துக்
கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது. கோயிலில் நாதஸ்வரம் வாசித்த
கருணாநிதியின் தந்தை செய்த புண்ணியத்தில், அவருடைய வாழ்க்கை இதுவரை ஓடிக்
கொண்டிருக்கிறது. கருணாநிதி செய்த மற்றும் செய்கின்ற பாவத்தின் பலனை
அனுபவிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் திங்கள், சன்
தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் 100 கோடி ரூபாய் தரப்பட்டதாகவும்,
அதில் 22 கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு
இருக்கிறார்.
பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 2007ம் ஆண்டு இறுதியில் "முழு"
தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. அதனை
அடுத்து "கண்கள் பனித்தன, இதயம் இனித்தது" என்று கருணாநிதி அறிவித்தார்.
அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே? ஒருவேளை அந்தப்
பணம் சுவிஸ் வங்கிக்கு சென்றுவிட்டது போலும்!
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிக வருமானம் வரும்
அளவுக்கு குடும்ப பட்ஜெட்டை போடக்கூடிய மனிதர் கருணாநிதி - இதனால் தான்,
"தி நியூயார்க் டைம்ஸ்", "தி வாஷிங்டன் போஸ்ட்" போன்ற அமெரிக்க
பத்திரிகைகளில் செய்திகள் வரும் அளவுக்கு ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார
குடும்பமாக கருணாநிதியின் குடும்பம் விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஊழலுக்கு நெருப்பு...
இந்தியாவிலேயே இதுவரை ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின்
ஆட்சி - வீராணம் ஊழல், பூச்சிக்கொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல்,
மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என
அனைத்திற்கும் மூல காரணமானவர் கருணாநிதி - விஞ்ஞானப் பூர்வமாக ஊழல்
செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.
இப்படி "ஊழலின் ஊற்றுக்கண்ணாக" விளங்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல்
ஆகியவற்றைப் பொறுத்தவரை, தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது
நகைப்புரியதாக உள்ளது - பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி
தீப்பிடித்துக் கொள்ளுமோ அதுபோல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும்
பரப்புவதில், தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார்
போலும்!
பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல்
பரிசு கொடுக்கப்படுகிறது - சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு
கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதிதான். அந்த
அளவுக்கு "கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண" என்ற தலைப்பில்
வெளிவந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து, தமிழக மக்கள் விலா
எலும்பு வலிக்க சிரித்து அவர்களுக்கு உடல் வலி வந்ததுதான் மிச்சம்.
கனிமொழிக்கு பங்கு?
ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் நடைபெற்ற இமாலய ஊழலில், தனது மகள் கனிமொழிக்கு பங்கு
இருப்பது வெளியில் தெரிந்துவிடுமோ என்று அஞ்சி, அதை மூடி மறைக்கும்
முயற்சியில் ஈடுபட்டுள்ள கருணாநிதியை, "ஊழலின் ஊற்றுக்கண்" என்று
சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
இந்தியா மட்டுமல்ல, உலகமே கருணாநிதியின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்று
கைகொட்டி சிரிக்கின்றது. தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை
ஏமாற்றி, "தன்" குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி
முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப்
பார்க்கிறார். கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க
மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி : 'ஊழலுக்கு நான் நெருப்பு': சொத்து விவரம்
வெளியிட்டார் கருணாநிதி

---------- Forwarded message ----------
From: aathi tamil <aathi1956@gmail.com>
Date: Tue, 4 Apr 2017 17:55:09 +0530
Subject: கருணாநிதி திருட்டு ரயில் மறுக்கவில்லை திருவாரூர் இரயில் வித்தவுட்
To: aathi1956@gmail.com

நான் திருட்டு ரயில் ஏறி வந்தவன் என்றால் ஜெ. எதை மூலதனமாக வைத்து சென்னை
வந்தார்? - கருணாநிதி
Published : June 22 2009, 9:10 [IST]
சென்னை: என்னைப் பற்றி ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறும்போது,
"திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில் ஏறி சென்னைக்கு வந்த
கருணாநிதியின் குடும்பம்'' என்று எழுதியிருக்கிறார். இந்த தரத்திலான
வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றபோதிலும், திரும்பத்
திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி வருவதால், இவர் எதை "மூலதனமாக''
வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்? என்று கேட்கத் தோன்றுகிறது என்று
கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
கோடைவாசஸ்தலமான, கொடை நாடு எஸ்டேட்டில் போய் மாதக் கணக்கில்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்றாடம் அறிக்கை விட்டு, அதன்
மூலமாக தன் கட்சியின் அரசியலை நடத்தி விடலாம் என்று எண்ணிக் கொண்டு நாள்
தவறினாலும் தவறாமல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
தமிழ்நாட்டு மக்கள் அதைப்பற்றி யாரும் எந்தக் கவலையும் படுவதில்லை.
அவர்கள் கவலைப் படுகிறார்களா என்று அறிக்கை விடுபவரும் கவலைப்படுவதில்லை.
ஏதோ தன் பெயர் ஏட்டிலே வந்தாலே "ஜென்ம சாபல்யம்'' அடைந்து விட்டதாகக்
கருதிக் கொண்டு அறிக்கை விடுகிறார்.
அந்த அறிக்கைகள் குறித்து நாமும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்ற
போதிலும், ஜனநாயகத்தில் பிரதான எதிர் கட்சியின் தலைவர் சாற்றிய
குற்றச்சாட்டிற்கு ஒரு முதல்-அமைச்சர் பதில் கூற வேண்டாமா என்று ஒரு
சிலராவது எண்ணக் கூடுமல்லவா?. அதற்காகவே இந்தக் கடித வாயிலான விளக்கம்.
கச்சத் தீவுக்காக தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி பெரிய
அளவில் ஏன் போராட்டம் நடத்தவில்லை?. சட்டமன்ற பேரவையில் ஏன் தீர்மானம்
கொண்டு வரவில்லை? என்பதுதான் இன்றைய தினம் ஜெயலலிதா விடுத்துள்ள
அறிக்கையிலே முக்கியமான கேள்வி.
தி.மு.கழகம் ஏன் போராடவில்லை என்று கேட்கும் ஜெயலலிதாவை திரும்பக்
கேட்கிறேன். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு முதல்வராக வந்ததும்
15-8-1991 அன்று சென்னை கோட்டையிலே கொடியேற்றி வைத்துவிட்டு, கச்சத்தீவை
மீட்டே தீருவேன் என்று முழங்கி அனைத்து ஏடுகளிலும் கொட்டை எழுத்துக்களிலே
அது வெளி வந்ததே, அதற்கு பிறகு ஐந்தாண்டு காலமும், அதற்கு பின்னர்
2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலமுமாக பத்தாண்டு
காலம் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தாரே, அப்போது ஏன் அவர் கச்சை
கட்டிக் கொண்டு கச்சத் தீவுக்காக போராட்டம் நடத்தவில்லை?. அப்படி
போராட்டம் எதுவும் அவர் நடத்தாத நிலையில் நம்மைப் பார்த்து ஏன் போராட்டம்
நடத்தவில்லை என்று கேட்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?.
கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கப் போகிறது என்பது
கருணாநிதிக்கு முன் கூட்டியே தெரிந்திருந்தும் அதை ஏன் எதிர்க்கவில்லை
என்கிறார் ஜெயலலிதா!. கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா வழங்க போகின்ற
தகவல், அதற்கு முன்பு பல ஆண்டுகளாக செய்தி அளவிலேதான் இருந்தது.
இன்னும் ஆதாரத்தோடு சொல்ல வேண்டும் என்றால் தமிழக சட்டமன்றத்தில்
29-3-1972 அன்று கச்சத்தீவு பற்றிய ஒரு கேள்வியே இடம் பெற்று, அதற்கு
நான் பதிலும் கூறியிருக்கிறேன். அந்தப் பதிலில் "நாம் கச்சத்தீவு குறித்த
நியாயமான விவகாரங்களை மத்திய அரசுக்கு தெரிவித்திருக்கிறோம். கச்சத்தீவு
பிரச்சினை இந்திய அரசு தலையிட்டு சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஒரு
பிரச்சினை'' என்றும் தெரிவித்திருக்கிறேன்.
அதனைத் தொடர்ந்து மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது,
"கச்சத்தீவு தமிழ்நாட்டிற்கே சொந்தம், இந்தியாவிற்கே சொந்தம் என்ற
ஆதாரங்களை எல்லாம் (அன்றைய) பிரதமருக்கு எடுத்து வைத்தேன். எதையும்
லட்சியம் செய்யாமல் என்னை அழைத்து இதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல்,
கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்திருக்கிறார் பிரதமர்'' என்றும்,
தொடர்ந்து திருச்சியில் ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது, "கச்சத்தீவு
தமிழகத்தின் உரிமை. கச்சத்தீவு பிரச்சினையில் நாட்டில் இருக்கும் மக்கள்
அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அதைக் கேளாமல் இலங்கைக்கு தூக்கி
கொடுத்துவிட்டு, ஒப்பந்தம் ஆகிவிட்ட செய்தியை உலகுக்கு அறிவிக்கிறார்கள்.
நாம் பத்திரிகையைப் பார்த்து தெரிந்து கொள்கிறோம்'' என்றும்
பேசியிருக்கிறேன்.
சட்டசபையில் கருணாநிதி ஏன் தீர்மானம் கொண்டு வரவில்லை என்று ஜெயலலிதா
கேட்டிருக்கிறார். 21-8-1974 அன்று சட்டசபையில் நானே முன்மொழிந்த
தீர்மானம் - இந்தியாவுக்கு சொந்தமானதும், தமிழ்நாட்டுக்கு நெருங்கிய
உரிமைகள் கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள
முடிவு பற்றி, இந்தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்
கொள்வதோடு, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது
இந்தியாவிற்கு அரசுரிமை இருக்கும் வகையில் இலங்கை அரசுடன் செய்து
கொண்டுள்ள ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க முயற்சி எடுத்து, தமிழ்நாட்டு
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று
வலியுறுத்துகிறது'' என்பதாகும்.
ஆனால் இப்படி தீர்மானம் நிறைவேற்றியதை தெரிந்து கொண்டு, மத்திய அரசு
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்பே ஏன் தீர்மானம்
நிறைவேற்றவில்லை என்று இப்போது கேட்கிறார்.
அன்றைய தினம் கச்சத்தீவை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை ஆளுங்கட்சியான
தி.மு.க. கொண்டு வந்தபோது எதிர் கட்சியாக இருந்த அ.தி.மு.க. அதனை
ஆதரிக்காமல் வெளிநடப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல; 1974-ம் ஆண்டு ஜுன் 27-ந் தேதி திடீரென்று மத்திய அரசினால்
கச்சத்தீவு பற்றிய அறிவிப்பு வந்தது. உடனடியாக அதே ஆண்டு ஜுன் 29-ம்
தேதியன்றே சென்னை தலைமை செயலகத்திலே அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து
அவர்களோடு பேசி, அவர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், அன்றைய
பிரதமருக்கு நான் எழுதினேன்.
நல்ல வகை மீன் கிடைக்கும் என்று எண்ணுகின்ற சில பேராசை கொண்ட மீனவ
மக்களால், அவர்கள் தங்களுடைய உயிரை இழக்க நேரிடுகிறது என்று நான்
பேரவையில் கூறியதை எடுத்துக்காட்டி, மீனவ மக்களை பேராசை கொண்டவர்கள்
என்று நான் கூறிவிட்டேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையிலே கண்டனம்
தெரிவித்திருக்கிறார்.
நல்ல வகை மீன்கள் இந்திய கடல் எல்லைக்கு அப்பால் தான் கிடைக்கும்
என்றும், அதனால் மீனவர்கள் அந்த இடங்களுக்கு மீன் பிடிக்கச்
செல்கிறார்கள் என்றும் அந்தக் கருத்தை பேசியதே 20-4-1992 அன்று இதே
சட்டசபையில் ஜெயலலிதாதான். அவரே அதைப் பேசிவிட்டு, அதை நான்
எடுத்துக்காட்டியதற்காக எனக்கு கண்டனம் தெரிவிப்பேன் என்று அறிக்கை
விட்டிருப்பது நல்ல கோமாளித்தனம். அதே நாள் பேச்சில்தான் ஜெயலலிதா
"கச்சத் தீவை மீட்பது என்பது விரைவில் நடக்கக் கூடிய, நடைபெறக்கூடிய
ஒன்றாகத் தெரியவில்லை'' என்றும் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்.
ஒரு முன்னாள் முதல்-அமைச்சர், இந்நாள் முதல்-அமைச்சரைப் பற்றி தன்
அறிக்கையிலே அடுத்து கூறும்போது, "திருவாரூரில் இருந்து திருட்டு ரெயில்
ஏறி சென்னைக்கு வந்த கருணாநிதியின் குடும்பம்'' என்று எழுதியிருக்கிறார்
என்றால், அவருடைய தகுதியை பற்றி தமிழ்நாட்டு மக்கள் தான் எடை போட்டு
பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவரது இந்த தரத்திலான வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை
என்றபோதிலும், திரும்பத் திரும்ப அவர் இந்தத் தொடரை பயன்படுத்தி
வருவதால், இவர் எதை "மூலதனமாக'' வைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார்?.
எப்படி இன்று கொட நாட்டில் தங்கியிருக்கிறார்?. எங்கிருந்து வந்தது
இந்தச் சொத்து என்றெல்லாம் திருப்பி கேள்வி எழுப்ப நமக்குத் தெரியாதா?.
கச்சத் தீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் ஏற்பாடுகள் தற்போது
நடைபெற்று வருவதாகவும் ஏடுகளிலே செய்தி வந்துள்ளதாக ஜெயலலிதா அறிக்கையிலே
சுட்டிக் காட்டியிருக்கிறார். அந்தக் தகவலை இலங்கை தூதரகமே மறுத்து
அப்படி எந்த கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகளும் நடைபெறவில்லை என்று
திட்டவட்டமாக தெரிவித்து, அது ஏடுகளில் வெளி வந்ததை கூடப் படிக்காமல் -
ஜெயலலிதா அறிக்கை விடுத்திருப்பது அவருடைய அறியாமையை தான் எடுத்துக்
காட்டுகின்றது.
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது பிரதமருக்கு இரு நாடுகளுக்கு இடையே
உள்ள உறவு கெடக் கூடாது என்பதற்காகத்தான் கச்சத்தீவு இலங்கைக்கு மத்திய
அரசினால் தரப்பட்டுள்ளது என்று அவரே எழுதிய கடித வாசகங்களை சுட்டி
காட்டியதற்கு எந்த விளக்கத்தையும் ஜெயலலிதாவினால் அவரது அறிக்கையிலே தர
இயலவில்லை என்பதையும் மறந்துவிட முடியாது.
அது மாத்திரமல்ல, 23-7-2003 அன்று ஜெயலலிதா அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு
எழுதிய கடிதத்தில், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு
பேணவும், தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகளை
காப்பாற்றவும் உள்ள ஒரே வழி என்று குறிப்பிட்டு மேலும்
எழுதியிருக்கிறார்.
அதாவது கச்சத்தீவையும், அதற்கு அருகிலே உள்ள கடல் பகுதிகளையும் தமிழக
மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், வலைகளைக் காய வைப்பதற்கும், யாத்திரை
செல்வதற்கும் நிரந்தர குத்தகைக்கு பெறலாம்; அதே நேரத்தில் கச்சத்தீவில்
இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம். இப்படி எல்லாம்
அன்றைக்கு எழுதியவர்தான் இன்றைக்கு நம்மைப் பார்த்து கேள்விக் கணை
தொடுக்கிறார்.
நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் ஜெயலலிதா நேற்றைய தினம் நான் அவையிலே
கச்சத்தீவு பிரச்சினைக்காக தமிழக அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு
வந்தால், அதனை ஆதரிக்க அனைத்து எதிர்கட்சிகளும் தயாரா என்று கேட்டதற்கு
அக்கட்சியினர் எந்தப் பதிலும் சொல்லவில்லை என்பதில் இருந்தே, அவருக்கு
கச்சத்தீவு பிரச்சினை தீர வேண்டும் என்பதைவிட ஆளுங்கட்சியை எதிர்க்க
வேண்டும் என்பதிலேதான் அக்கறை என்பது புரிகிறதல்லவா?.
கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்று 15-8-1991 அன்று ஜெயலலிதா சூளூரைத்தது
- அதற்குப் பிறகு தற்போது பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் திடீரென்று
ராஜபக்சேவிற்கு எதிராக மாறி, தமிழ் ஈழத்தை மீட்டே தீருவேன் என்று
கர்ச்சனை செய்தது எல்லாமே வெறும் பிதற்றல், மாய்மாலம், மக்களை ஏமாற்ற
ஜெயலலிதா ஆடிய கபட நாடகம் என்பதை மனோகரா கதையிலே வருவது போல அவரது
மனச்சாட்சியே கேசரி வர்மனாக மாறி, வசந்த சேனையை கழுத்தை நெரிப்பது போன்ற
காட்சியாகவே தோன்றுகிறது.
தன்னை மறந்து ஜெயலலிதா தனது அறிக்கையிலே ஒன்றை சொல்லியிருக்கிறார்.
கச்சத்தீவு பிரச்சினை என்பது மற்றொரு நாட்டுடனான பிரச்சினை. அதை மீட்கக்
கூடிய அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. மாநில முதல்-அமைச்சருக்கு
அந்த அதிகாரம் இருந்திருந்தால் அன்றைக்கே கச்சத்தீவு
மீட்கப்பட்டிருக்கும் என்று அவரே தனது அறிக்கையில் தன்னையும் மறந்து ஒரு
உண்மையை வெளியிட்டிருக்கிறார்.
இப்படி தன்னை மறந்து பல நேரங்களில் உளறிக் கொட்டுவதும், அந்த நேரங்களில்
உண்மைகள் வெளிவந்து விடுவதும் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வாடிக்கையாக
நடைபெறுகின்ற ஒன்று.
எனவே, அவரது அறிக்கைக்கான பதிலை மேலும் வளர்க்காமல், திருட்டு ரெயில்
போன்ற அவரது தரக்குறைவான வார்த்தைகளால் உடன்பிறப்பே, உனக்கும் மற்ற
உடன்பிறப்புகளுக்கும் கொதிப்பு, கோபம் வருமேயானால், அதனை அடக்கிக் கொள்ள
ஏற்கனவே முன்னாள் பேரவை தலைவர், தம்பி காளிமுத்து தயாரித்து
வெளியிட்டுள்ள அம்மையாரை பற்றி அகராதி பட்டியல் ஒன்று இருக்கிறது. அதைப்
படித்துப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்
கருணாநிதி.
 திருவாரூர் இரயில் வித்தவுட் கண்ணதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக