வியாழன், 27 ஜூலை, 2017

இந்தி முகலாயர் உருது ல் இருந்து வந்தது கரிபோலி ஈரான் அரபி கலப்பு துளசிதாசர் தேவநகரி வரிவடிவம் ஹிந்தி சொல் 100 ஆண்டு முன்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 7
பெறுநர்: எனக்கு
ElangoSubramanian SF
இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட
இல்லை என்றால் உங்களில் பலரால் நம்ப முடியாது; ஆனால் உண்மை அதுதான்.
துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று
உங்களால் கேட்க முடியும்.
துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை. மொகலாயர்கள் ஆண்ட அந்த
காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை.
மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட
பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி
போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் தேவநகரி எழுத்து
வடிவில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம்
என்பது வால்மிகி ராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே.
தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி
தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது. எனெனில் மொகலாயர்கள்
ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில்
கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய
வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருது மொழியாக
வடிவம் பெற்றது.
மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான் (அரபி எழுத்து
வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும்
பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள்,
அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு
இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது,
ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட
ஆகவில்லை.
மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு
தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ? அதற்கான
அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது. உருது
என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை
பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை
மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல்
இருந்ததால், உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப்
போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும்
என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள்
பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.
தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள்
ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக
மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும்
என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து
செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க
முற்படுகின்றனர்.
ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு
இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய
மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு
இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான்,
கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன்
நுழைந்துவிட்டான்.
உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில்
மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே
சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக்
கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப்
பிறவிகள்.
இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே
வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை
கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.
இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி
என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.
--- Narayanan apparasan.
Thanks to Logan K Nathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக