வியாழன், 27 ஜூலை, 2017

அம்பேத்கர் மொழிவழி மாநிலம் அமைய எதிர்ப்பு குணா

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
நிலா. வேங்கடவன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
இந்து மகாசபையும் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்டமும்!
மொழிவழி மாநிலங்கள் எனும் கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தவர்
அம்பேத்கர். இந்து மகாசபையின் ‘ஒரே நாடு - ஒரே மொழி’ என்னும் கொள்கையே
அவருடைய கொள்கையாயிருந்த
து.!
அதனால் சம்மு-காசுமீரத்திற்குத் தன்னாட்சி வழங்கும் பிரிவு கூடாதுதெனக்
கருதிய அம்பேத்கர், நேருவின் வேண்டுகோளை ஏற்க மறுத்தார்; அதைப்பற்றிக்
கூறும் இந்தி(ய) அரசுச் சட்டத்தின் 370-ஆவது பிரிவைத் தாம் எழுத
முடியாதெனக் கூறிவிட்டார். இதனால் அந்த 370-ஆவது பிரிவைக் கோபாலசாமி
ஐயங்கார் எழுதவேண்டியதாயிற்று.
இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு தேசிய இனங்கள் இருப்பது கண்கூடான
உண்மை. முழுப்பூசுனைக் காயைச் சோற்றில் மறைப்பதைப் போல் அவற்றை மறைப்பது
வர்ண மனுவாதிகள் (பிராமணர்)நலனுக்கு நல்லது. இந்து மகாசபையின் போக்கும்
நோக்கும் அது.
ஆனால், ஒடுக்குண்ட மக்களின் தலைவர் எனச் சொல்லிக் கொண்ட அம்பேத்கர்,
அந்தக் கண்கூடான உண்மையை மறைப்பதற்காக இந்து மகாசபையுடன் கைகோர்த்ததுதான்
பெரிய புதிர். பல்வேறு தேசிய இனங்கள் இங்கு இருக்கும் மெய்மையை அவர்
தலைமையில் எழுதப்பட்ட இந்தி(ய) அரசியல் சட்டம் ஒப்புக்குக் கூடக்
குறிப்பிடவில்லை.
-வரலாற்றாய்வறிஞர் குணா.
# _அறிவோம்___அம்பேத்கர் தலித் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக