வியாழன், 27 ஜூலை, 2017

முலைவரி கொடுமை முலையறுத்த நாஞ்செலி நங்கெலி ஈழவர் குமரி தோள்சீலை

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 3
பெறுநர்: எனக்கு
ச. மாடசாமி
மார்ச்-8
இன்றென்னை எழுது என்கிறாள் நங்கேலி.
'தொழிலாளி கோபத்தின் ரூபமடா' என்பார் ஜீவா.
நங்கேலி ஞாபகம்தான் வருகிறது. கோபத்தின் ரூபம் அவள்.
நங்கேலி என்பது நங்கை என்ற தமிழ்ப்பெயரின் நீட்சிதான்.கேரள
ாவின் சேர்தலா பகுதியில்- கள் இறக்கும் ஈழவர் குடியில்- பிறந்தவள் நங்கேலி.
1800- கேரளப் பகுதியில் வர்ணாசிரமும் அதிகாரமும் கைகோர்த்திருந்த காலம்.
'சூத்திர சாதிப் பெண்கள் தங்கள் மார்பை மறைத்துத் துணி அணிய வேண்டுமானால்
அதற்கு வரி கட்ட வேண்டும்'என்றது வர்ணாசிரம அதிகாரம். அந்த வரிக்கு
முலக்காரம் என்பது பெயர்.
மார்பை மறைப்பேன். வரி செலுத்த மாட்டேன் என்றாள் முப்பது வயது நங்கேலி.
கெடுபிடியாய் வரி வாங்க வந்த அதிகாரத்தின் எடுபிடிகளிடம், தன்
மார்பிரண்டையும் அறுத்து வாழை இலையில் வைத்துத் தந்தாள் நங்கேலி.
'கொண்டு போ' என்றாள். ஓட்டம் பிடித்தது அதிகாரம்.
ரத்தத்தால் தன் வீட்டு வாசலை நனைத்து மாண்டாள் நங்கேலி.
'முலை வரி'க்கு எதிரான சிறு குமுறல்கள் இதன்பின் கொந்தளிப்புகள் ஆயின.
வரியும் விரைவில் ரத்தானது.
நங்கேலி மாண்டது 1803-இல்.
அந்தக் கோபக்காரி இன்றென்னை எழுது என்று சொன்னது நியாயம்தானே.
வர்ணாசிரமும் அதிகாரமும் கை கோர்த்து இருக்கும் காலம்தானே இதுவும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக