வியாழன், 27 ஜூலை, 2017

நிலக்கடலை குறைவான நீர் விளைச்சல் அதிகம் விவசாயம் வேளாண்மை

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
Thamizhar Tamil Nadu , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ
இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட
வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை விதையை முக்கால் அடி
இடைவெளியில் விதைக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 36 கிலோ விதை தேவைப்படும். விதைத்த 7-ம் நாள் 120
லிட்டர் தண்ணீரில் 12 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க
வேண்டும். 20-ம் நாள் களை எடுக்க வேண்டும். விதைத்த 25 மற்றும் 50-ம்
நாட்களில் பாசன நீரில் 200 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்துவிட வேண்டும்.
45-ம் நாள் களையெடுத்து செடியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.
விதைத்த 55-ம் நாளுக்கு மேல் பூ எடுக்கும். இத்தருணத்தில் 6 லிட்டர்
புளித்த மோர், 50 கிராம் மஞ்சள் தூள் ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில்
கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். பூக்கள் உதிராமல் இருக்கவும்,
காய்கள் திரட்சியாக இருக்கவும் இது உதவும். நிலக்கடலைக்கு அதிகத் தண்ணீர்
தேவையில்லை. செடிகள் வாடாத அளவுக்குப் பாசனம் செய்தால் போதுமானது. 102-ம்
நாளுக்கு மேல் கடலை முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக