வியாழன், 27 ஜூலை, 2017

சொட்டுநீர்ப்பாசனம் பானை புதைத்து சொட்டுநீர் பாசனம் மரம் புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 6
பெறுநர்: எனக்கு
Thamizhar Tamil Nadu , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
மண் பானை வாய்க்கால் பாசனம் ., “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி
பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு
லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்துவிட வேண்டும்... பானையை
புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு
துளை போட வேண்டும்...
அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிட வேண்டும்.
வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் தண்ணீர்
நிறைந்துவிடும். நிலத்தில் ஈரம் காயக்காயப் பானையில இருக்கிறத் தண்ணீர்
சொட்டுச் சொட்டா இறங்கிட்டே இருக்கும். இதனால, செடியோட வேர்ப்பகுதி
எப்பவும் ஈரப்பதத்தோட இருக்கும்.
பானைத் தண்ணி முழுமையா இறங்க 15 நாட்கள் ஆகும். அதற்குள் அடுத்த
வாய்க்கால் பாசனம் கொடுத்துவிட வேண்டும்..
இதனால் வருஷம் முழுக்கச் செடிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்து,
செடிகளோட வளர்ச்சி செழிப்பாக இருக்கும்.
சொட்டுநீர் 
search இஸ்ரேல் பாலைவனம் விவசாயம் fbtamildata 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக