வியாழன், 27 ஜூலை, 2017

விநாயகர் தமிழ்க்கடவுள் ? விவாதம் உரையாடல் மெய்யியல் மதம் ஆசீவகம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
Manickam Mani .
விநாயகர் தமிழர்கள்
ஆதியில் ஆசிவகத்தில் வழிபட்ட தெய்வமா..?
அது தமிழ்க்கடவுள்னு
நம்ம ஆளுங்களே சொல்றாங்க உண்மையா உறவுகளே..? எனக்கு உடன்பாடில்லை..
9 ஏப்ரல், 07:54 AM

புதுவைத் தமிழன்
விநாயகர் என்பது தமிழரின் சித்த வாழ்வியலின் அடையாளமே...
அதாவது சிவலிங்கம் மற்றும் முருகனின் கையில் இருக்கும் வேலினைப் போன்றது ...
தமிழரின் ஆசிவக மதத்தின் அடையாளமே...
வள்ளுவமும் ஆசிவக நூலே...
சமணம் தமிழ் மதமே...
அமணம் - சமணம்
சமணம் போற்றும் தீர்த்தங்கரர் வரிசையில் மாகாவீரர் 24 வது தீர்த்தங்கரர்.
முதல் தீர்த்தங்கரர் நம் முப்பாட்டன் ஆதிநாதனே(சிவனே) .
தமிழரின் வரலாறு யாவும் மறைக்கப் பட்டது...
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 3 மணிநேரம் முன்பு
புதுவைத் தமிழன்
மகாபாரதமும் நம்மண்ணில்(தென்
னாட்டில்) நடந்ததே...!!!
அதனையே வடநாட்டில் நடந்ததாக குப்தப் பேரசு நமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்து

Paari Saalan
விநாயகர் ஒரு ஆசீவக அடையாளம், அதாவது சமண அடையாளம், அது ஒரு தத்துவ
உருவமே தவிர கடவுள் இல்லை , பிற்கால பக்திமார்க்க சைவர்களால் கடவுளாக
கட்டமைக்கப் பட்டது.
விநாயகரின் தோற்றம் தமிழ்நாட்டிலா ? விநாயகரை உருவாக்கியவர்கள் தமிழர்களா ?
ஆம் ,விநாயகரின் தோற்றம் தமிழ்நாடே , இந்தியாவின் மிக பழமையான விநாயகர்
புடைப்பு பிள்ளையார் பட்டி , 500 bc , தமிழ் நகரத்தார் சமுகத்தால்
இன்றளவும் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு சமணப்படுக்கை அது . சரி விநாயகரை
உருவாக்கியவர்கள் யார் ? விநாயகரை உருவாக்கியவர்கள் சமணர்களே ! அவர்களின்
தாய் மொழி தமிழே !
விநாயகர் ஒரு தத்துவம் , வெள்ளை யானை சமணத்தின் குறியீடு, அறிவின்
அடையாளம் ! பெருத்த உடல் செல்வத்தின் அடையாளம் ( pls note laughing
Buddha) அதாவது அறிவும் , பொருளும் ஒருசேர ஒரு மனிதனின் வாழ்வில் அமைய
வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் பொம்மை தான் விநாயகர் சிலை .
இது சமண சித்தர்களின் அடையாளமாகவே தமிழக மக்களால் மதிக்கப்பட்டது ,
சித்தர்களை சந்திக்கும் இடங்களில் எல்லாம் விநாயகர் உருவங்கள் தமிழகம்
முழுவதும் உள்ளது , மற்றும் சித்தர்களின் அறிவுரை படி தான் தோப்புக்கரணம்
விநாயகரின் முன் போடப் படுகிறது.தோப்பு
கரணத்தை தமிழர் அறிவியல் என பேசும் பலரும் அது எந்த உருவத்தின் முன்
போடப்படுகிறது ஏன் என்று சிந்திப்பதில்லை . வட இந்தியாவில் ஊருக்கு ஊர்
விநாயகர் கோவில்கள் இருப்பதில்லை .
ஆக விநாயகர் தமிழர்களால் உருவாக்கப்பட்ட , மதிக்கப்பட்ட ஒரு சமண சித்த அடையாளமே !
விநாயகரை தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தியவர்கள் தான் வந்தேறிகளே
தவிர விநாயகர் தமிழர் தத்துவமே!

Paari Saalan
அந்த வந்தேறிகள் ஏன் தமிழகத்தில் விநாயகரை தனியாக விட்டு விட்டு , வாட
இந்தியாவில் மட்டும் புத்தி , சித்தி என்று இரண்டு போண்டாடிகளை திருமணம்
செய்து வைத்தார்கள்? .. புத்திக்கும் சித்திக்கும் பொருள் அறிந்தால்
புரியும் ஆரியத்தின் திரிபு அவ்விரு மனைவிகளும் என்று ...

Jose Kissinger
https://m.facebook.com/story.php?story_
fbid=10209868085992948&id=1057193201

Agathiyadaasan Ram
முருகன், கணபதி, பிள்ளையார், விநாயகர், சிவன், பார்வதி, மீனாட்சி பற்றி
கூறுவது புராணக் கதையாக இருந்தாலும் அவற்றின் பெயர்களில் சமுதாய வரலாறு
உள்ளது, பாத்திரங்களாக கருதினால் அவற்றில் கொண்டு கூட்டல் இருக்கலாம்,
ஆனால் அதில் உள்ள செய்திகளை அறிய வேண்டும், அது சமுதாய வரலாறு ஆகும்,
வந்தேறி என்பது ஆட்சி ஆண்டவர்களோடு தொடர்பு உடைய சோல், எம் மக்களுக்காக
ஆண்டவர்களை வந்தேறி என்றும் அவர்கள் யார் என்று நாம் அறியாமல் ஆக்க
திராவிடம் மாயம் மயக்கம் செய்துவருகிறது,
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
நேற்று, 09:35 AM
Venkat Guru
உங்களுக்கு இந்த லிங்குல பதில் கிடைக்கும்னு நம்புகிறேன் http://
www.tamilhindu.com/2014/09/விநாயகர்-நினைவுகள்/
விநாயகர் நினைவுகள் | தமிழ்ஹிந்து
tamilhindu.com

Ganesh Natarajan
நூலாசிரியர் சவரிமுத்து விநாயகர் தமிழ் கடவுளே...வாதாபி கணபதி பரஞ்சோதி
அறிமுக படுத்தி இருக்கலாம். விநாயகாரை தோப்புகாராணம் போட்டு வழிபடும்
முறை தமிழ் நாட்டில் மட்டும் தான் உள்ளது. நீங்கள் சொன்ன ஐயனார்
வழிபாட்டில் குண்டலினி யோகம் முதன்மையானது, தமிழ் நாட்டில் மட்டும் தான்
விஞயாகரை குண்டலினி குறிஈடு உடன் வழிபடும் முறை உள்ளது. விநாயகர்
இலக்கியத்தில் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நாம் பண்பட்டில் உள்ளது.

Ganesh Natarajan
அதுமட்டும் இல்லாமல் பிள்ளையார் பட்டி கோவிலில் கிமு 3 ஆம் நூற்றாண்டு
எழுத்துகள் உள்ளன. இது தான் இந்தியாவிலே பழமையான விநாயகர் கோவில்.
இளங்குமரன் தா
வணக்கம்... கணேசு.. இலக்கிய இலக்கணத்திலிருந்து ஆதாரம் காட்டவும்...
ஓகக்கலையோடு சும்மா கண்டவங்களை இணைத்துவிட வேண்டாம்... தொல்காப்பியமே
நம்முடைய பழமையான நூல்... அதில் நிலங்களையும் நிலத்தில் உள்ள மக்கள் மரம்
செடி கொடி, பறவை, விலங்குகள்... அந்த மக்கள் வழிபட்ட தெய்வங்கள்...
பூக்கும் பூக்கள் அவற்றில் சிறப்பானவை என அக்குவேறு ஆணிவேறாகத் தொகுத்த
தொல்காப்பியர் கண்களுக்குத் தப்பி உங்கள் விநாயகர் அப்போது எங்கே ஓடி
ஒளிந்து கொண்டார்... தொல்காப்பியம் தெரியுமா? படித்ததுண்டா?... போய்
நன்றாகப் படித்துவிட்டு வாருங்கள்... ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான நூல்...
பிடித்திருக்கிறது · 4 · புகாரளி ·
ஞாயிறு, 06:05 PM
இளங்குமரன் தா
கார்த்திகை மார்கழி மாதங்களில் புள்ளையார் பாட்டு கோவில்களில் ஒலிபரப்பினார்கள
ா என்று உங்கள் அப்பாவையோ அல்லது தாத்தாவையோ கேளுங்கள்... 20-30
ஆண்டுகளுக்கு முன் கோவில்களில் முருகன் பாடல்கள் மட்டுமே...
புள்ளையாரும் கிடையாது ஒன்றும் கிடையாது... போய்க் கேட்டுப் பாருங்கள்.
பிடித்திருக்கிறது · 3 · புகாரளி ·
ஞாயிறு, 06:08 PM
Paari Saalan
இளங்குமரன் தா விநாயகர் ஒரு கடவுள் இல்லை அது ஒரு தத்துவ உருவம் மட்டுமே
! தத்துவ உருவத்துக்கு யாரும் பாட்டு பாட மாட்டார்கள்
பிடித்திருக்கிறது

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
Manju Manjunathan
கும்பம் ,ஸ்வஸ்திக்,கஜலெ
ட்சுமி,யானை, சாட்டை,குதிரை,ம
ுக்குடை,தாமரை என ஆசீவக மங்கலசின்னங்களை பல சமயத்தவரும் அபகரித்து கொண்டனர்.
பிடித்திருக்கிறது · 5 · பதிலளி ·
புகாரளி · ஞாயிறு, 09:29 AM
Nakkeeran Balasubramanyam
குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் போகப் பின்வந்த பாலை நிலக் கடவுளர்
தவிர்த்து, இனங்காக்க, ஆ காக்கத் தன்னுயிரீந்து நடுகல்லானோரில், இவ்
'வி'நாயகன் யாராம், இந்தப் பிள்ளை யாராம்?!!!

Jose Kissinger
ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர்
ancient romans sanatan dharm

Nakkeeran Balasubramanyam
அதாவது, இயற்கையை வணங்கிவந்த, அதைக் காப்போரை வணங்கிவந்த தமிழனுக்கு,
இயற்கைக்கொவ்வா வரலாறு / உருவம் படைத்த ஒருவர் எப்படி இறைவனாக
இருக்கமுடியும்! யானையின் தலையை அறுத்து மனிதவுடலிற் பொருத்துதல்
நடக்கக்கூடியதா?

தங்கராசு நாகேந்திரன்
கானபத்தியம் கணபதி வழிபாடு மகராட்டிரத்துக்கு சொந்தமானது பால கங்காதர
திலகருக்கு வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்ட பின்னர் அவரால் அரசியல்
கூட்டம் நடத்த முடியாத நிலை அதனால் விநாயக விசர்ஜன ஊர்வலம் மூலம்
கூட்டங்களை திரட்டினார் திலகருக்கு முன் விநியாகர் விசர்சன ஊர்வலங்கள்
தமிழகத்தில் இல்லை என்பது தெளிவு

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
நூலாசிரியர் சவரிமுத்து
விநாயகர் கடைச் சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் அறிமுகம் இல்லை.
ஐம்பெரும்காப்பியத்தில் சிலம்பில் மணிமேகலையில் சீவகச் சிந்தாமணியில்
அறிமகம் இல்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற்காலத்தில் எழுதி
சேர்க்கப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் விநாயகம் வணக்கம் சேர்க்கப்பது.
இந்த விநாயகம் வணக்கம் இரண்டாம் புலிகேசி ஆண்ட வாதாபியைக் கைப்பற்றி
அழித்த பரஞ்சோதியார் விநாயக ரை அறிமுகப் படுத்தினார். ஆசிவகம் சமயத்தின்
குறியீடு வெள்ளையானை. அதன் மேல்சாத்தனார் என்கிற சாஸ்தா அமர்ந்திருப்பதாக
கூறப்படூம். அவரை ஐயனார் என்றும் கூறுவர.ஆசிவகக் குறியீடு யானையும்
சாத்தனையும் ஒன்றுபடுத்தி அமைக்கப்பட்ட ஒர் உருவம் வினை+நாயகன்=விநாயகன்.
பரஞ்சோதி காலத்திற்கு முன்னர் இல்லை,

Jose Kissinger
தொல்காப்பியத்தில் விநாயகர் துதி கிடையாது.
ஆனால் திருமந்திரத்தில் உண்டு , பின்னர் சேர்க்கப்பட்டது என கேள்விப்பட்டுள்ளேன்.

Chandraseker M
விநாயகர் வந்தேறி கடவுள் வழிபாடு கிபி 7 நூற்றாண்டில் பல்லவர்கள் வாதபி
புலிகேசி யை வென்றதன் வெற்றியின் அடையாளம் War Trapy வாதபிகணபதி
....இன்றும் கிராமங்களில் திருட்டு பிள்ளையார் வரம் அதிகம் தருவாரென்று
திருடி வந்து வைத்து வணங்குவது வழமை என்பதை உற்றுநோக்குக

Manju Manjunathan
ஆசீவக முனிவர்கள் யானையை தங்களின் சொல்கேட்க வைத்தார்கள்.அதனால்
ஆசீவகமுனிகளின் செல்லபிள்ளைகள் போல யானைகள் இருந்ததால் ஆசீவத்தின் பல
குறியீடுகளில் யானை உருவமும் ஒன்றானது.
(சித்தன்னவாசல் ஒவியத்தில் யானை தாமரைமலர்களை பொய்கையில் இருந்து ஆசீவக
முனிவர்களுக்கு பறித்து கொடுக்கும்)
இதன் நீட்சி தான் மனித உரு யானை தலை விநாயகர்.
அதை சிவமதம் தனதாக்கி கொண்டது.
பிடித்திருக்கிறது · 6 · பதிலளி ·
புகாரளி · ஞாயிறு, 09:08 AM
Cuddalore DrShanthakumar
https://youtu.be/9gijDMTfJW4
Vinayaka Worship - A Great Mystery Solved Part-0
youtube.com

Ravikumar Stephen J
Asivagam is a religion closer to Jainism and Mahaveer denounced the
existence of God.

Chandraseker M
சிவனும் கொற்றவை,முருகனும் திருமாலும் ,இந்திரனுமே சூரியனுமே மற்றும்
இயற்கை முன்னோர் வழிபாடே நமது மரபு

விநாயகர் தமிழ்க்கடவுள் விவாதம் உரையாடல் மெய்யியல் மதம் ஆசீவகம் தொல்காப்பியல் சிறுதெய்வம் குலதெய்வம் 3

இன்பாக்ஸ்
x

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
இளங்குமரன் தா
முன்பே ஒரு நண்பர் எழுதியுள்ளபடி விநாயகர் வந்தேறி... வாதாபிப் போரின்
போது கருணாகரத் தொண்டைமான் மூலம் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்ட
து... அதற்கு முன் தமிழகத்தில் விநாயகர் குறித்து எந்தத் தகவலும்
கிடையாது... தொல்காப்பியத்தில் நான்கு நிலத்திற்கும் உரிய பெருந்தெய்வம்
சிறுதெய்வங்களைப் பட்டியலிட்டுள்ளார் தொல்காப்பியர். அதில் விநாயகன்
இல்லவேயில்லை. தொல்காப்பியத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு மேல்...

Paari Saalan
இளங்குமரன் தா தொல்காப்பியத்தில் கருப்பு , சுடலைமாடன், ஐயனார் போன்ற
வழிபாடுகள் இல்லை தான் அதற்காக அவற்றை எல்லாம் தமிழர் கடவுள் இல்லை என்ற
முடிவுக்கு வருவோமா ஐயா ?

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
இந்த பதிவை முதலிலிருந்தே கவனித்து வருகிறேன்.
இலக்கியத்தில் விநாயகர் இல்லைதான்.
அதேபோல பிள்ளையார்ப்பட்டி ஒரு குடவரைக்கோயில்.
அதாவது சமணர் படுக்கைக்காக அமைக்கப்பட்டது.
குடவரை குகைகள் ஆனைமலை, அழகர்மலை, நாகமலை, திருப்பரங்குன்றம், கொங்கர்
புளியங்குளம், கரடிப்பட்டி, முத்துப்பட்டி, பிள்ளையார்பட்டி,
குன்றக்குடி, சித்தன்னவாசல் ஆகிய இடங்களில் உள்ளன.
பாண்டியரின் குடைவரைக் குகைகளை நகலெடுத்துதான் பல்லவர்கள் குடைவரைக்
கோயில்கள் அமைத்தனர்.
ஆனாலும் எளிமையான கடவுளாக எல்லா ஆற்றங்கரை, குளத்தங்கரை, தெருமுக்கு என
பிள்ளையார் எளிய மக்களின் கடவுளாக சிறுசிறு கோவில்களில்
உட்கார்ந்திருக்கிறார்.
பிள்ளையார் கோவில் பூசாரிகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார்.
ஆக பிள்ளையார் கடவுளாக இல்லாமல் ஏதோ ஒரு புனிதமான அடையாளமாக இருந்திருக்கவேண
்டும்.
பல்லவர்கள் கொண்டுவந்த எதுவும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்ப
டவில்லை.
ஈழத்திலும் சரி தமிழக நகரத்தாரும் சரி பிள்ளையாருக்கு நோன்பிருக்கிறார்கள்.
பிள்ளையார் எங்கிருந்து வந்தார்?
அவர் ஏன் இவ்வளவு எளிமையாக இருக்கிறார்? அதுவும் நீர்நிலை பக்கமே ஏன்
இருக்கிறார்? அதுவும் கற்சிலையாகவே ஏன் இருக்கிறார்? தனியாக பெரிய
கோவில்கள் ஏன் இல்லை?
விடை தேடவேண்டும்.

Suresh D
வினைநாயகர், யானைப் படைத் தளபதி தான் அவர்… அவரும் சமர் கடவுளே முருகனைப் போல
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி ·
புகாரளி · ஞாயிறு, 11:39 PM
Aathimoola Perumal Prakash
சாணியில் ஒரு உருண்டையைப் பிடித்து அதில் அரும்புல் செருகினால் பிள்ளையார்.
உலகில் இவ்வளவு எளிமையான ஒரு கடவுள் உண்டோ?.
தன்னைவிட மூன்றுமடங்கு பெரிய அரசை, அதுவும் தென்னிந்தியாவின் நெப்போலியன்
புலிகேசியை தோற்கடித்து
வாதாபி மாநகரையே இடித்து எரித்து அதன் கோட்டைக் கதவிலிருந்த பெயர்த்து
பல்லவர் கொண்டுவந்த படுபயங்கர பின்னணி கொண்ட வாதாபி கணபதி கதையெல்லாம்
இங்கே எடுபடாமல் போகிறதுதானே?!


11/4/17 அன்று, aathi tamil <aathi1956@gmail.com> எழுதியது:

விநாயகர் கொங்கு பழமை தமிழ்ஹிந்து இந்துத்துவ சார்பு பதிவு

இன்பாக்ஸ்
x

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
விநாயகர் நினைவுகள்
September 2, 2014
- ந. சசிகுமார்
கொங்கதேச ஆவணங்களில் விநாயகர் பற்றிய குறிப்புகள் ஏராளமான இடத்தில்
காணலாம். அண்ணமார்சாமி கதையில் பிள்ளை வரம் நிறைவேற குளம் வெட்டி
விநாயகர் பிரதிஷ்டை செய்தார் கோளாத்தாக் கவுண்டர். அது மட்டுமின்றி
அண்ணமார் கதை முழுக்கவே விநாயகர் வழிபாடு இருப்பதை காண முடியும்.
தீரன் சின்னமலை காரையூர் மேலப்பாளையத்தில் ஐந்தடி விநாயகர் சிலையை
பிரதிஷ்டை செய்வித்தார். வெள்ளோட்டில் சாத்தந்தை கூட்டத்தில் பிறந்து
வீரபாண்டியன் அமைச்சராகி பின்னர் ஊத்துக்குளியில் நாடமைத்துப்போன
காளிங்கராயர் வாய்க்கால் வெட்டியபின், அது துவங்கும் இடத்தில் நெளிந்த
வாய்க்கால் அமைப்புக்கு யோசனை வர காரணமான நாகருக்கு கோயில் வைத்தார். அதே
கோயிலில் விநாயகரும் உண்டு. காளிங்கராயர் பிற்கால பாண்டியர் காலத்தவர்
என்பதால் விநாயகரும் அவர் பிரதிஷ்டை செய்ததே என்று நம்பலாம்.
கொங்கதேசவரலாற்றில் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு தலையநாடு கன்னிவாடி
கன்னகூட்ட மன்றாடியார்களுடையது. அவர்கள் கன்னிவாடியில் இருந்து மோரூர்
இடம்பெயர்ந்த போது அவர்கள் பூர்வீகத்தில் இருந்த வெள்ளைவிநாயகரை மோரூர்
நாட்டிலும் பிரதிஷ்டை செய்தனர். இவர்கள் குலகுரு ஒருமுறை சஞ்சாரம்
வந்தபோது கோயில் பண்டாரம் அவமரியாதை செய்யவே கோயில் வெள்ளைவிநாயகரிடம்
வேண்டி பாடவும் குபேர மூலையை பார்த்திருந்த விநாயகர் விக்ரகம் எம மூலை
பக்கம் திரும்பிவிட்டது. பயந்து போன மக்கள் பட்டக்காரரிடம் சொல்லவே அவர்
குலகுருவிடம் உண்மையை விளக்கி மன்றாடவே திரும்பவும் வெள்ளைவிநாயகரை
வேண்டிப்பாட சிலை பழைய நிலைக்கு திரும்பியது.
மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயிலில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள்
தேசத்தை பார்த்த நிலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். அவை இன்றும்
சேர விநாயகர், சோழ விநாயகர், பாண்டிய விநாயகர் என்று அழைக்கபடுகிறது.
கீழ்க்கரை பூந்துறை நாடு திருசெங்கோட்டு மலையில் வரடிக்கல்லில் இருக்கும்
உச்சிப்பிள்ளையார் பிரசித்தி பெற்றவர். ஒருவருடம் பவுர்ணமி தோறும்
மலைக்கு வந்து வரடிக்கல் பிள்ளையாரை வலம் வந்தால் குழந்தை பாக்கியம்
உண்டு என்பது ஐதீகம். திருசெங்கோட்டு மலையில் உள்ள தீர்த்தங்களில் முதல்
தீர்த்தமே கணபதி தீர்த்தம்தான். அதை கணபதியே உமையம்மையின் பூஜை
தேவைகளுக்காண நீருக்காக உருவாக்கினார் என்பது புராண வரலாற்றுச் செய்தி.
அதே கீழ்க்கரை பூந்துறை நாட்டில் மொளசி சமஸ்தானதிற்குட்பட்ட பட்லூர்
காணியின் நட்டாத்தீஸ்வரர் கோயிலில் கிழக்கு பார்த்த விநாயகர் விக்ரகம்
இருந்தது (தற்போது ‘திருப்பணி’ என்னும் பேரில் தெற்கு பார்த்து
திருப்பட்டுள்ளது; கொங்கதேசத்தில் தெற்கு பார்த்து எந்த விநாயகரும் இல்லை
என்பது பயப்பட வேண்டிய விஷயம்). ஒருமுறை காவிரியில் வெள்ளம் வந்தபோது
கோயில் குருக்களின் வேண்டுதலுக்கிறங்கி வெள்ளம தணிந்ததை கொங்குமண்டலச்
சதகம் சொல்கிறது.
சுந்தரருக்கு பொன் கொடுக்க சிவபெருமான் பிள்ளையாரை ஆய்மகளிடம் அடகு வைத்த
நிகழ்வு வெஞ்சமாங்கூடலூரில் நடந்தது. திருமுருகன்பூண்டியிலே சுந்தரரின்
களவுபோன பொருட்களை மீட்க விநாயகப்பெருமான் கூப்பிட்டு வழிகாட்டியதால்
கூப்பிடு பிள்ளையாரானார். பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கென கொண்டுவந்த
பிள்ளையார் வண்டி அச்சாணி முறியவே இறக்கி வைத்த இடத்தில்
ஸ்தாபிதமாகிவிட்டார். அந்த க்ஷேத்ரமே இன்றைய புகழ்பெற்ற ஈச்சனாரி
விநாயகர் ஆகும்.
கொங்கதேச குடிகளின் மங்கள சடங்குகள் அனைத்துமே விநாயகரை தொழுதே
செய்யப்படுகின்றன. கல்யாணத்திற்கு பெண் பார்க்க துவங்குவதில் தொடங்கி,
தாலிக்கு பொன் எடுத்து கொடுக்கும்போதும் (மங்கிளியத்துக்கு கொடுத்தல்),
முஹுர்த்தக்கால் போடையிலும், மாப்பிள்ளை அழைப்பு வேளை என பல முறை கணபதி
வழிபடப்படுவார். கல்யாணம் துவங்கும்போதும், முடிந்த பின்னரும்,
முடிந்தபின் வீடு புகுமுன் மணமகன்/மணமகள் ஊர் விநாயகர் கோயிலிலும்,
வீட்டிற்கு வந்து முதல் காரியமாகவும், தாலி நூல் மாற்றும்போதும் (தாலி
வில்லையை விட மஞ்சள் கயிரே முக்கியத்துவம் வாய்ந்தது என்பது வழக்கம்)
விநாயகர் வழிபாடு நடக்கும். பெண் வீட்டில் கல்யாணம் செய்வதே முறை
என்றாலும், தற்போது முறைகெட்டு மண்டபங்களில் பலர் கல்யாணம் செய்வதால்
அந்த கல்யாண சத்திரங்களிலேயே விநாயகர் சன்னதி கட்டிவைத்துவிட்டனர்.
கொங்கதேசத்தின் சிறப்பு வாய்ந்த கல்யாணப் பாடலான மங்கள வாழ்த்தே கணபதியை
தொழுதுதான் துவங்குகிறது.
கொங்கதேசத்தில் கிராமங்கள் நிர்மாணம் செய்யப்பட்டபோது மேற்கே அரசமரங்கள்
நடப்பட்டதோடு அங்கு விநாயகர் நிறுவி வழிபடப்பட்டார். அதுமட்டுமின்றி
கிராமத்தின் கன்னிமூலையில் விநாயகர் இருப்பது பொதுவான விதி.
கொங்கதேசத்தின் ஏராளமான சிற்றிலக்கியங்கள் ஆவணங்கள் விநாயகர்
வழிபாட்டோடுதான் துவங்குகின்றன.
நிலத்தை உழத்துவங்கையிலும், விதை விதைக்க துவங்கையிலும்,
கதிரருக்கும்போதும் விநாயகர் வழிபாடு உண்டு. அதற்கான நாட்டுப்புறப்
பாடல்கள் கூட கொங்கதேசப்பகுதிகளான தர்மபுரி மற்றும் அரூர் பகுதிகளில்
உள்ள கொங்கூர் மற்றும் கொங்கவேம்பு கிராமங்களில் சேகரிக்கப்பட்டுள்ளது.
கொங்கதேசத்தில் பட்டிப்பொங்கல் என்று சொல்லப்படும் மாட்டுப்பொங்கலிலும்
கணபதி வழிபாடு உண்டு.
பிள்ளையார் மிகவும் எளிமையான தெய்வம். சிறுவர்களின் விளையாட்டு பாடல்
முதல், இலக்கியப்பாடல்கள், வேத மந்திரங்கள், நவீன தமிழ் கவிகள், கிராமிய
பாடல்கள் என தொடர்ந்து களத்துமேட்டு பாடல்கள் வரை எல்லா தரப்பு
மக்களாலும் அணுகப்படுபவர். அந்த பாடல்கள் போற்றுதல் முதல் கேலி
கிண்டலாகப் பாடும் அளவு மக்கள் மனதுக்கும் நெருக்கமான உறவானவர்.
டாம்பீகமற்றவர். எளிமையாக ஒரு பிடி களிமண்ணையோ, நாட்டு பசுவின் சாணத்தையோ
அல்லது மஞ்சளையோ பிடித்துவைத்துவிட்டால் பிள்ளையார் வந்துவிடுவார்.
அருகம்புற்களை பிடுங்கிப் போட்டால் போதும்; மாலைகள் ஆபரணங்கள்
கேட்கமாட்டார். மரத்தடி, குளக்கரை என்று எளிமையாக இருப்பார்.
இவையனைத்துமே விநாயகரின் எளிமையை மட்டுமல்ல அனைவராலும் அனுகப்படுபவர்
என்பதற்கு உதாரணங்களாகும்.
கணபதியை வணங்காவிட்டால காரியங்கள் கெடுத்துவிடுவார். உருப்படவிடமாட்டார்
என்று அச்சுறுத்தி தாதாவுக்கு மாமூல் கொடுப்பதுபோல, சிலர் சொல்வார்கள்.
அது அப்படியல்ல, அவர் புத்தியின் அடையாளம். காரியங்கள் துவங்கும்
முன்னர், செக்குமாடு மாதிரி ஒரே கோணத்தில் போகாதே சிந்தித்து, விழிப்போடு
சாதுர்யமாகச் செய் என தூண்டுவதே அதன் சாராம்சம். நாம் சொல்வதைவிட
வெள்ளைக்காரன் வந்து தோப்புக் காரணத்தை சூப்பர் பிரைன் யோகா என்பர்
சொன்னால்தான் நமக்கு அதன் மகத்துவம் புரிகிறது.
சில கம்யூனிச, திராவிட, தமிழ்தேசியவாதிகள் விநாயகர் தமிழ் கடவுள் அல்ல
என்று பிழைப்புவாத மொழியரசியல் துவங்குவார்கள்; சரி யாரெல்லாம்
தமிழ்கடவுள், யாரெல்லாம் வேத கடவுளர்கள், நிலத்திணை தெய்வங்கள் எவை எவை
என்று கேட்டால் விடை இருக்காது. ஒருவர் விநாயகர் ஆரியக் கடவுள், ஏழாம்
நூற்றாண்டுக்கப்புரம்தான் இங்கே வந்தார் என்றார். “ஆரியமாவது சோளமாவது;
அதுதான் ஆரிய திராவிட கட்டுக்கதைகளை எப்பவோ பொய்னு நிரூபிச்சாச்சே!
முதல்ல, நீங்க சொல்றமாதிரி ஏழாம் நூற்றாண்டுதான் வந்தார்னே
வச்சிக்குவோம், ஆனா அதுக்கப்புறம் இங்க வந்து செட்டில் ஆனவன்லாம்
பூர்வகுடிங்கறான் மண்ணின் மைந்தன்ங்கறான், அப்படி பார்த்தா விநாயகர்
இம்மண்ணின் மரபுகளோடும் கலாசாரத்தோடும் கலந்த தெய்வந்தா. ரெண்டாவது,
ஏழாம் நூற்றாண்டுங்கரது பொய்னு ஏராளமான ஆதாரங்கள் நிரூபிச்சுருக்கு.
சிந்தாமணியில் காவிரி உருவானதற்கு காக்கை அகத்தியரின் கமண்டலம்
தட்டிவிட்டதையும், பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற
தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச்
சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின்
பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும்னு” என்று
பதிலளிக்கப்பட்டது..
இன்னொரு திராவிடர், “விநாயகரை விட நாய் உசத்தி, விநாயகர் தண்ணில போட்டா
முழுகி போறாரு, நாய் நீந்தி வந்துரும்; செலைய தூக்கி எறிஞ்சிட்டு ஒரு நாய
வளத்துங்க” னு கிண்டலா அறிவ காட்டுனாரு. “தங்கத்தை விட சொரப்புருடை
உசத்தி தெரியுமா..? தங்கம் தண்ணில முழுகிரும், சொரப்புருடை மெதந்துகிட்டு
வந்திடும்; என்கிட்டே சொரப்புருடை நெறைய இருக்கு, சீக்கிரம் உங்கூட்ல
இருக்கற தங்கத்த எடுத்தாங்க” னு நண்பன் மூக்கறுத்துவிட்டான்.
பாலும், தேனும், பாகும், பருப்பும் படைத்து சங்கத்தமிழ் மூன்றையும்
பிள்ளையாரிடம் வேண்டிக் கேட்ட ஔவையாருக்கு அறிவு குறைவு போலும்.
இத்தனை நாட்கள், திராவிட தடியர்களின் ஆபாச விமர்சனங்களையும் தாண்டி
கணபதியார் பாமரர் முதல் படித்த மேதைகள் வரை தேசங்கள் கடந்து இஷ்ட
தெய்வமாக பரிபாலனம் செய்வதே அவர்களுக்கான எளிமையான பதில்.
(ந.சசிகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

1 கருத்து:

  1. இன்று பல இடங்களில் பலர் தமிழரின் சமயம் சனாதன தர்மம் (இந்துமதம்) அல்ல எனவும் ! தமிழர்கள் வழிபாடு, கலாச்சாரம், பண்பாடுகள் எல்லாமே வேறு என கூற கேட்டுளோம். இது தவறானது !

    ஏனெனில், தமிழர்களின் இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் சிவன், விஷணுவை போற்றி பாடல்கள் உள்ளதே....?
    இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல் தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ முடியுமா....? அல்லது காப்பாற்றத்தான் முடியுமா......?
    உண்மையை சொன்னால், இதை மறுப்பவர்கள் தமிழை காப்பாற்றுபவர்கள் அல்ல. தமிழை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு தொன்மையான தமிழனின் வரலாற்றை அழிக்கும் தமிழின துரோகிகள்.

    இப்படியே விட்டு வைத்தால் தமிழ் நூல்கள் அனைத்தும் அழியும். தமிழ் நூல்கள் அழிந்தால் தமிழ் மொழியும் அழியும். தமிழ் மொழியே அழிந்தால் வரலாற்றில் இன்று நாம் அழிந்து போன சிந்து சமவெளி நாகரிகத்தை படிப்பது போல, அழிந்து போன தமிழனின் நாகரிகத்தை பிற்காலத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வரும்.

    தமிழர்கள் என்பது தமிழில் பேசுவது மட்டுமல்ல, மொழி,கலாச்சாரம்,பண்பாடு,வாழும் முறைகள், வழிபாடுகள் இவைகள் எல்லாமே சேர்ந்தது தான் தமிழர்கள் எனப்படுகிறார்கள். உண்மையில் இப்படி உள்ளவர்கள் சனாதன தர்மத்தை ( இந்துக்கள்) தமிழர்கள் மட்டுமே தான்.

    தொல்காப்பியம் கூறும் வேத கடவுள்கள் !

    தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு செல்வோம். எனக்கு தெரிந்து தொல்காப்பியத்திற்கும் மேலான ஒரு பழமையான நூல் தமிழ் இலக்கியத்தில் கிடையாது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது தொல்காப்பியத்தின் காலம். கி.மு. 5000 ல் இருந்து கி.மு. 8,000 வரையாக பல காலகட்டங்களை தமிழறிஞர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர்.

    தொல்காப்பியத்தில் தெய்வ வழிபாட்டை பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    "மாயோன் மேய காடுறை உலகமும்
    சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
    முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
    சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"
    - தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05

    இந்த பாடலில் வரும் மாயோன், சேயோன், வருணன் போன்ற வழிபாட்டு தெய்வங்கள் யார்...?

    வேத கால தெய்வங்களான விஷ்ணு (மாயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன், ஸ்கந்தன் சேயோன் (சிவப்பு நிறமானவன்)/ ஆகியோரே தமிழர்களின் தெய்வங்கள் என்று தொல்காப்பியர் தெளிவாக சொல்லிவிட்டார்.

    சங்க காலம் நிலப்பரப்பை குறிஞ்சி(மலை மற்றும் மலை சார்ந்த), முல்லை ,மருதம் , நெய்தல் மற்றும் பாலை எனப் பிரிப்பதை நாம் அறிவோம். தொல்காப்பியம் இந்நிலப்பரப்பிற்கு அதிபதியான கடவுளர்களாகக் குறிப்பவை: முல்லை – மாயோன் - திருமால் (விஷ்ணு), குறிஞ்சி – முருகன், (கார்த்திகேயன் அல்ல்து ஸ்கந்தன்), மருதம் – இந்திரன் , நெய்தல் – வருணன், பாலை – கொற்றவை (சக்தி) என தான் மேலே சொல்கிறார் ! இது வேத கடவுளை தானே சொல்கிறது !

    மாயோன் என்பது பகவான் கிருஷ்ணரே என்பது கலித்தொகை -103 இல் உறுதியாக அறியலாம். இதில் கம்சனால் அனுப்பப்பட்ட கேசி என்கிற அசுரனை அழித்த மாயோன் என்கிறார். எனவே, தொல்காப்பியர் கூறும் மாயோன் என்பது பகவான் கிருஷ்ணர் /விஷ்ணு குறிப்பிடுகிறது.

    பதிலளிநீக்கு