|
மார். 26
| |||
காதல் மறுப்பு
தலைவா ! இவளோ சிறுகுடியில் வாழும் - கடலில் மீன் வேட்டம் புரியும் பரதவருடைய மகள்….. நீயோ தேரையுடைய செல்வனுக்குச் செல்ல மகன்…..
இனப்புள் ஓப்பும் எமக்குநலன் எவனோ
புலவு நாறுதும் செலநின் றீமோ
பெருநீர் விளையுள் எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரில் செம்மலும் உடைத்தே
உலோச்சனார். நற்.45 : 7 – 11
மீன்களை உலர்த்தும் போது அவற்றைக் கவர்தற்கு வரும் பறவைகளை ஓட்டிக் காவல் புரியும் எம்பால் அமைந்த அழகு யாது ; எமது மேனி புலால் நாறுவது காண்பாய்; ஆதலால் சென்றுவிடு; கடல் பொருள் கொண்டு வாழும் எமது சிறிய வாழ்க்கை நும் உயரிய வாழ்க்கைக்கு ஒத்ததன்று; எமது குடிக்கும் பெருமையுண்டு; நிரல் அல்லோர்க்கு நேர்படாமை ஆகிய செம்மை இயல்பும் எமக்குண்டு.. அறிக.
சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் நற்றிணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக