|
ஏப். 5
| |||
தமிழ் செல்வன்
தமிழக அரசியல் வரலாற்றில் அய்யா மூக்கையாத்தேவர் ஓர் அதிசயம். ஆம் நண்பர்களே!
1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத்
தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற தலைவர் அய்யா
மூக்கையாத் தேவர்.
காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க
முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் அய்யா மூக்கையாத் தேவர்.
ஆம் நண்பர்களே!
ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவரு
க்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே!
பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர்
தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை
எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.
1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).
1952- பெரியகுளம்
மூக்கையாத்தேவர் - 36,515
என்.ஆர். தியாகராஜன் - 31, 188
1957- உசிலம்பட்டி
மூக்கையாத் தேவர் - 31,631
பி.வி.ராஜ் - 11, 459
1962- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 47,069
தினகரசாமித்தேவர் - 22,992
1967- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 44,714
நல்லதம்பித்தேவர் - 16 ,225
1971 - உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 42 , 292
ஆண்டித்தேவர் - 16, 909
1977- உசிலம்பட்டி
மூக்கையாத்தேவர் - 35,361
பொன்னையா - 1 1,422
இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
பெறுகிறார்.
1971 - இராமநாதபுரம் - எம்.பி. தேர்தல்
மூக்கையாத்தேவர் - 2, 08,431
பாலகிருஷ்ணன் - 1 , 39, 276
மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும்
பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற
பெருமை அய்யா மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு.
1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து
வைத்தவர் அய்யா மூக்கையாத்தேவர் அவர்களே.
கச்சத்தீவிற்காக நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல் மிக
முக்கியமானது. அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி.யாக இருந்தார்.
1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில்
போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார்.
இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார்.
அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். " நீண்ட காலம் பொது
வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா மூக்கையாத்தேவர் அவர்கள்
அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்ப்பட்ட தலைவரை
எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை" என்று வாபஸ் பெற வைத்தார்.
மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான்
வசித்து வந்தார். சாகும் போது 60000 கடன் சுமையோடுதான் இறந்தார்.
எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம்
தவறிவிட்டோம்.

மூக்கையாத்தேவர் மண்மீட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக