வியாழன், 27 ஜூலை, 2017

பெண்ணடிமை நூல் 1885 இராஜகோபாலப்பிள்ளை புத்தகம்

aathi tamil aathi1956@gmail.com

மார். 30
பெறுநர்: எனக்கு
பொ வேல்சாமி , 8 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
பெண்ணடிமைத்தனத்தைச் கூச்சமின்றி ”மாதர் ஒழுக்க இலக்கணம்” என்று
பாராட்டும் 1886 இல் வந்த ஓரு நூல்.
நண்பர்களே….
வரலாற்றுக் காலம் முழுமையும் பெண்களை அடிமைகளாக கருதி வாழ்ந்து வருகின்ற
சமூகம் நம்முடைய தமிழ்ச் சமூகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய
அடிமைத்தனத்தை வெளிபடுத்தும் ஏராளமான சான்றுகளை சங்க காலத்திலிருந்தே
நாம் பெற்றுள்ளோம். அந்த மரபில் 1886 இல் வந்த ஒரு நூல் கூறும்
கூற்றுக்களில் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்.
இந்நூலில் மொத்தம் 98 அறிவுரைகள் (…?..!) உள்ளன. அவற்றுள் சிலவற்றை
இப்பதிவில் தருகின்றேன். இந்த நூலை பார்வையிட்டு வெளியிடுவதற்கு
தகுதியுடையது என்று கருத்துரைத்தவர் தொல்காப்பியம் – சேனாவரையத்தை 1868
இல் பதிப்பித்தவரும் நாலடியார் நளவெண்பா ஏலாதி போன்ற பல சிறந்த தமிழ்
நூல்களுக்கு உரை எழுதியவருமான பெரும்புலவர் ”கோ.இராஜகோபாலபிள்ளை” என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நூலில் உள்ள செய்திகளில் சில…..
ஒரு நல்ல பெண்ணிற்கு அழகு என்பது தன்னுடைய கணவன் எதை செய்தாலும் எதை
சொன்னாலும் மறுக்காமல் உடன்படுவது. அதாவது கணவன் அடித்தால் திருப்பி
அடிக்கக் கூடாது. கணவன் வைப்பாட்டி வீட்டிற்கு சென்றால் பதற்றமடையக்
கூடாது. பக்குவமாகப் பேச வேண்டும். கணவன் விபச்சாரம் செய்ய சொன்னாலும்
முதலில் கணவனுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் கணவன் தன் கருத்தில் உறுதியாக
இருந்தால் அதற்கு உடன்பட வேண்டும். இப்படியான பல்வேறு கொடூரமான பல
தகவல்களைக் கொண்டுள்ள இந்நூலை நீங்களும் பாருங்கள்.
2 மணிநேரம் · நண்பர்கள்
பெண்ணுரிமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக