வியாழன், 27 ஜூலை, 2017

வெள்ளைநாடார் காரணவன் குமரி கல்வெட்டு வெள்ளைநாடான் நாடார்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
Rachinn Rachinn Rachinn
திருவிதாங்கூர் அரசியலில் சாதிக்களுக்கிடையிலான போராட்டங்கள் குறித்து
அடிப்படை அறிவே இல்லாமல் எழுதுகின்றவர்கள் கவனிக்க வேண்டும்.அல்லது
இதுபோன்ற போக்குகளை வாசிக்கவாவது செய்வது நல்லது.
// கி.பி.1380 ஆம் ஆண்டில் வேள் நாட்டுச் சமூக அ மைப்பில் பெருங்குழப்பம்
ஏற்பட்டது. வேளாளர்கள் கூடி, வெள்ளை நாடர் எனப்பட்ட சாதியினர்,
காரியஞ்செய்தல், கணக்கெழுதுதல், வேணாட்டுச் சமுக அமைப்புக்கு
காரணப்படுத்தல், தமிழ்பாகத்தில் பெண்கட்டுதல், பெண்டிரைக் கையாளுதல்
போன்றவற்றை முன்புபோலக் கடைபிடித்து வரக்கூடாது என ஆணையிடுகின்றனர்.
இந்த ஆணையை வெள்ளைநாடர்சிலர் தொடர்ந்து மீறி வந்தனர். இப்போக்கு அடுத்த
தலைமுறையினரிடையிலும் தொடர்ந்ததால் கி.பி.1406ஆம் ஆண்டில் மீண்டும்
வேளாளர்கள்கூடி, தங்கள் ஆணையை மீறி நடந்த கணக்கு கோளரி அய்யப்பன் உள்பட
வெள்ளை நாடர் மூவர்க்கு கொலைத்தண்டனை வழங்குகின்றனர். அதன் பிறகும்
இத்தகைய போக்கு தொடர்ந்தது.
அடுத்த தலைமுறையைச்சேர்ந்த வேளாளர்கள்1452ஆம் ஆண்டில் கூடி இறுதியாக ஒர்
ஆணையை வழங்கி நிறைவேற்றினர். இந்த இறுதி ஆணையை கல்லில் பொறித்து
வைத்தனர்.
கொல்லம் ஆண்டு 628 சித்திரைமாதம் 9ஆம் நாள் (கி.பி.1452)பொறிக்கப்பட்ட
மேற்குறித்த வேளாளர் ஆணைக் கல்வெட்டுகள்,தி
ருவிதாங்கோட்டின்(பின்னாளைய வேணாட்டின் அரசின் கோநகர்)
ஒன்றும், நெல்லை மாவட்டத்திலுள்ள கல்லிடைச்குறிச்சியில் ஒன்றும் உள்ளன.
இரண்டு கல்வெட்டுகளும் ஒரே செய்தியைக் குறிப்பிட்டாலும்,
கல்லிடைக்குறிச்சி கல்வெட்டு சற்று விரிவாக உள்ளது. தமிழ் எழுத்துகளில்
பொறிக்கப்பட்டுள
்ளது. பாண்டியநாட்டு மக்கள் வாசித்துப் புரிந்து கொள்வதற்கேற்ற வகையில்
அக்கல்வெட்டு தமிழில் எழுதப்பட்டதென புரிந்துகொள்ள முடிகிறது.
திருவிதாங்கோட்ட
ு கல்வெட்டு வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிற 'காரியஞ்செய்தல்', 'கணக்கெழுதுதல் '
என்பவை செயலர் பதவி, கணக்கர் பதவிக்குரிய செயல்பாடுகள் ஆகும்.
'காரணப்படுதல்' என்பது 'காரணப்பாடு' என்ற கூட்டுக்குடும்பத் தலைமைப்
பதவிக்குரிய செயல்பாடு ஆகும்.
'காரணப்பாடு' அல்லது 'காரணவன்' என்ற பதவிப்பெயர் ஆழ்ந்த
பொருளுடையது.உடலின் ஐம்புலன்களைக் காரணங்கள் என்பர்.கரணங்களை இயக்குகிற
உயிரே காரணவன் ஆகும்.'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' என்பது
புறநானூறு.(பா.186) வகுக்கும் இலக்கணம்.
எனவே ,மன்னனைக் காரணவன்எனக் குறிப்பிடுவதுண்டு. கி.பி.1175 ஆம்
ஆண்டுக்குரிய இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் திருவாலங்காட்டுக் கல்வெட்டு
மதுரைக்கு காரணவரான பராக்ரம பாண்டியர் எனக்குறிப்பிடுக
ிறது.- //-எஸ்.ராமசந்திரன்
(தமிழினி, ஆகஸ்ட் 2011)
'தாமிரவருணி சமூக பொருளாதார குறித்து எழுதிய பொறிஞர் கோமதி நாயகம்
(பழ.நெடுமாறனை சகோதரர்) எங்கிருந்தோ வந்து தேரிக்காட்டில் குடியேறிய
''வெள்ளை நாடான்கள்'' என்பதாக எழுதியிருப்பார். அந்த வெள்ளை நாடான்கள்
வந்த கதை இதுதான். தேரிக்காடுகள் இல்லாமல் தமிழகத்தின் மூவேந்தர் வரலாறு
முழுமையடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக