வியாழன், 27 ஜூலை, 2017

இந்திரவிழா சித்திரை முழுநிலவு ஒன்றே புத்தாண்டு கார்த்திகை வானியல் நாட்காட்டி நவீன்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 11
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் நவீனன் , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — சபரிநாதன்
பூசுரன் மற்றும் 57 பேர் உடன்.
இந்திர விழா!! சித்திரை முழுநிலவு!!
=================================
சித்திரை நாள்மீன் முழுநிலவுடன் சேரும் திங்களே சித்திரை திங்கள்.
அதன்படி இன்று(11.04.2017) சித்திரை நாள்மீன் முழுநிலவுடன்
சேர்ந்திருக்கிறது. ஆனால் பஞ்சாங்களில் பங்குனி மாதம் என்று
போட்டுள்ளதே???? இதைத்தான் இரண்டு வருடமாக கூறி வருகிறேன்... சூரியமான
நாள்காட்டிக்கு சந்திரமான பெயர்களை வைக்காதீர்கள் என்று...
பண்டைய தமிழர் மரபுப்படி ஒரு திங்கள் என்பது முழுமதியிலேயே தொடங்கும்..
அதன்படி இன்று சித்திரை திங்கள் பிறந்துவிட்டது... ஏப்ரல் 14 அன்று
பிறப்பது மேழம்/வருடை. சூரிய மாதங்களையும், சந்திர மாதங்களை வெவ்வேறு
என்று எப்போது தமிழன் அறிகிறானோ, அப்போதே அவனுக்கு விடுதலை கிட்டும்...
இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், மேழம் புத்தாண்டா சுறவம் புத்தாண்டா
என்று அடித்துக்கொள்ளாமல், சித்திரை புத்தாண்டா, தை புத்தாண்டா என்று
அடித்துக்கொள்கிறார்கள்... சந்திர மாதங்களுக்கு சித்திரையும் புத்தாண்டு
இல்லை.. தையும் புத்தாண்டு இல்லை... # கார்த்திகையே புத்தாண்டு...
சித்திரை முழுநிலவில் மருத நில இறைவன் இந்திரனுக்கு பொங்கல் வைப்போம்...
அவன் அருள் புரியட்டும்... உழவர் துயர் இனி தீரட்டும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக