வியாழன், 27 ஜூலை, 2017

தமிழ் எழுத்து 30 மட்டுமே 247 அல்ல தொல்காப்பியம் சீர்திருத்தம் ஐ அய்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 8
பெறுநர்: எனக்கு
Saturday, March 06, 2010
சுப.நற்குணன்,மலேசியா. @ 11:16 PM
எழுத்துச் சீர்மை; தேவையற்ற வேலை: புலவர் இரா.இளங்குமரனார்
தமிழ்ப் பேரறிஞர், செந்தமிழ் அந்தணர், தமிழ்க்கடல் புலவர் ஐயா
இரா.இளங்குமரனார் தற்போது மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டுள்ளார். மலேசியா
முழுவதும் பல ஊர்களில் அவருடைய உரைப்பொழிவுகள்
நடைபெற்று வருகின்றன.
அந்த வரிசையில் 5-3-2010 வெள்ளிக்கிழமை பேரா மாநிலத்தில் உள்ள பாரிட்
புந்தார் எனும் ஊரில் புலவர் ஐயாவின் பேருரை நிகழ்ச்சி நடந்தது. பேரா
மாநிலத் தமிழியல் ஆய்வுக் களமும், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல்
இயக்கமும் கூட்டாக இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ‘தமிழினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்’
என்ற தலைப்பில் அருமைப் பேருரை நிகழ்த்திய புலவர் ஐயா, தமிழ் எழுத்துச்
சீர்த்திருத்தம் தொடர்பாகவும் ஆழமான செய்திகளைப் பேசினார். எழுத்துச்
சீர்மை பற்றி அவர் பேசியதாவது;
இப்போது தமிழ்நாட்டில் சிலர் எழுத்துச் சீர்த்திருத்தம் செய்யப்போவதாக
புறப்பட்டு உள்ளனர். அவர்கள் இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72
உயிர்மெய் எழுத்துகளில் சீர்மை தேவை என வலியுறுத்தி வருகிறார்கள்.
உண்மையில் சொல்ல வேண்டுமானால், இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசை மட்டுமல்ல
தமிழுக்கு எந்தச் சீர்த்திருத்தமும் தேவையில்லை. தமிழ் எழுத்துகள்
மிகவும் செப்பமாக இருக்கின்றன; படிக்கவும் எழுதவும் தட்டச்சவும்
கணினியில் பதியவும் எளிமையாக இருக்கின்றன.
“எழுத்தெனப் படுப
அகர முதல னகர இறுவாய்
முப்பஃது என்ப” என்று தொல்காப்பியம் சுட்டும்போது தமிழில் 247 எழுத்துகள்
என சொல்லுவது பேதமைத்தனம்.
தமிழ் எழுத்துகளை இப்படி விரித்துக் காட்டி மருட்டுபவர்கள் ஆங்கில ரோமன்
எழுத்துகளை உண்மையில் 26உடன் 4ஐ பெருக்கிக்கொள்ள வேண்டும். ரோமன்
எழுத்துகளை 26 என்று சுருக்கிக் காட்டிவிட்டு தமிழ் எழுத்துகளை
அதிகமாக்கிக் காட்டுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
எழுத்துரு தமிழி எழுத்து சீர்திருத்தம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக