வியாழன், 27 ஜூலை, 2017

பலதேவன் பலராமன் உழவு பனை மேய்த்தல் மூன்று தொழில் புராணங்கள் திருமால் அண்ணன்

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
Kumarimainthan
பலதேவன் ஆகிய பலராமன் ஏறுதழுவி காளைகளை வசக்கி முல்லை நிலத்தை நாகரிகம்
கொண்டதாக மாற்றிய கண்ணனுக்கு அண்ணனாகத் தொன்மங்களால் கூறப்படுபவன்.
அவனுக்குக் கொடி பனைமரம். அவன் ஆயுதம் கலப்பை. அவன் பெரும் கள்
குடியனாகக் கூறப்படுகிறான். தன் கலப்பையால் தொழுனை(யமுனை) ஆற்றினைத் தன்
பக்கம் இழுத்து அதில் பெண்களுடன் இனபக் களியாட்டம் நடத்தியவனாகக்
கூறப்படுகிறான். இது எதைக் காட்டுகிறது? மேய்த்தல், பனையேறுதல், உழவு
மூன்று தொழில்களும் ஒரே இடத்தில் ஒரே மக்களிடத்தில் இருந்து பிரிந்து
சென்றதைக் காட்டவில்லையா? இன்றும் வேளாண்மை வீழ்ந்து நிலங்கள்
தரிசாககிடக்கும் நிலையில் ஏழைகள், குறிப்பாக முதியோர் ஆடுகளை மேய்த்துப்
பொழுது போக்குவதுடம் தம் பங்குக்குக் குடும்பச் சுமையாய்f இருப்பதைத்
தவிர்க்க முயல்வதை நாம் பார்க்கவில்லையா? எனவே இன்னும் சாதி சார்ந்த
பெருமை பேசாமல் வருங்காலத் தமிழக மக்கள் அனைவருக்கும் அரசை எதிர்பாராமல்
வெலைவாய்ப்புகளைப் பெருக்கும் வழிகளை வகுக்குமாறு இளைய தலைமுறையினரைக்
கேட்டுக்கொள்கிறேன்.

புராணம் மெய்யியல் வைணவம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக