வியாழன், 27 ஜூலை, 2017

திருவள்ளுவர் தினம் வைகாசி அனுசம் மாட்டுப்பொங்கல் கு மாற்றம் கருணாநிதி

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 13
பெறுநர்: எனக்கு
கத்திவாக்கம் நவீனன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Nakkeeran
Balasubramanyam மற்றும் 69 பேர் உடன்.
ஐயன் வள்ளுவர் திருநாளும் ஆட்டு மந்தை கூட்டமும்!!!
==============================
=======================
தெய்வப்புலவன் ஐயன் வள்ளுவரின் திருநாளை பன்னெடுங்காலமாக வைகாசி
முழுநிலவுக்கு அடுத்த நாளான அனுசம் நாளில் கொண்டாடி வந்தனர். அதனை உலகம்
முழுவதும் கொண்டு சேர்க்கும் வண்ணம் 1935ஆம் ஆண்டு தமிழ்க்கடல் மறைமலை
அடிகளார் தலைமையில் எண்ணற்ற தமிழ்ப்புலவர் ஒன்று கூடி, இனி வைகாசி அனுசம்
நாளை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடுவது என்று முடுவு செய்தனர்...
பிறகு அப்போதைய முதல் அமைச்சர் பக்தவச்சலம் வைகாசி அனுசம் நாளை அரசு
விடுமுறையாக அறிவித்தார்... இதனை எதிர்க்கட்சி தலைவர் அண்ணா துரையும்
வரவேற்றார். மயிலையில் திருவள்ளுவர் கோவிலை வைகாசி அனுசத்தில் அப்போதைய
குடியரசு தலைவர் இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்...
பக்தவச்சலம்,அண்ணாதுரைக்கு பின்னர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார்...
வைகாசி அனுசத்தில் இருந்த திருவள்ளுவர் திருநாளுக்கான விடுமுறையை ரத்து
செய்துவிட்டு, ஏற்கனவே விடுமுறை தினமாக இருந்த மாட்டுப்பொங்கல் அன்று
மாற்றி வைத்தார்..... மக்களும் ஆட்டு மந்தைகளாய் மாட்டுப்பொங்கல்
கொண்டாட்டங்களில் வள்ளுவரை மறந்தனர்..
எனவே, இனி வரும் காலங்களில் தமிழக அரசிதழில் உள்ளதுப்போல், தமிழ்க்கடல்
மறைமலை அடிகளார் கொண்டாடியது போல், வைகாசி அனுசதன்று தனையொரு நாளில் ஐயன்
திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவோம்!!!
ஆதாரம்: செந்தமிழ் செல்வி இதழ், 1935 ( 1921 என்பது வெறும் கட்டுக்கதை)
வள்ளுவம் போற்றுவோம்!!!
திருக்குறள் குறள் பொங்கல் விடுமுறை நவீன் நாட்காட்டி பண்டிகை விழா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக