|
மார். 26
| |||
போர் முரசு
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப் புலத்து இரங்க
காளை, மண்ணைக் குத்துவதால் உண்டான கோடுகளோடு
கூடிய கூரிய கொம்புகளை உடையது. இவற்றில் பெருமை மிக்க நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முள் சண்டையிடச் செய்வர், அவற்றில் வென்ற காளையினுடைய தோலை மயிர் சீவாது போர்த்தி உறுதியாய்க் கட்டப்பட்ட போர் முரசைச் செய்வர். இத்தகைய முரசு போர்க்களத்தின் நடு இடத்தில் முழங்கும்.
பசும் பொன் மண்டை – பசிய பொன்னால் செய்யப்பட்ட கள் பெய்த கலம்-
புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக