வியாழன், 27 ஜூலை, 2017

சோமாலியா விவசாயநாடாக இருந்தது மீத்தேன் பேரழிவு திட்டம் மண்ணழிப்பு விவசாயம்

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 9
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம்
*சோமாலியாவின் கதை…*
சோமாலியா ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில், ஏமன் வளைகுடாவை ஒட்டி
அமைந்துள்ள நாடு.
இதன் மேற்கு எல்லையில் எத்தியோப்பியாவும்,. தெற்கே கென்யாவும், வடக்கே
டிபோட்டியும் அமைந்துள்ளன.
*சோமாலியாவில் இரண்டு பெரிய நதிகள் இருந்தன. அவற்றின் பெயர்கள், செபெல்லே
மற்றும் ஜூபா இவை
தவிர, சற்றேரக்குறைய, நாற்பத்து ஒன்பது (49) துணை நதிகளும்
விரவிக்கிடந்தன இவை மலையில் உற்பத்தியாகி மத்திய தரைக் கடலிலும்,
இந்தியப் பெருங்கடலிலும் கலக்கும் நதிகள்.
இவற்றில் புகழ்வாய்ந்த நைல் நதியும் அடங்கும்.*
நைல் நதியின் கிளைகளான வெள்ளை நைல்
சூடானுக்கும் நீல நைல் எத்தியோப்பியாவுக்கும் பாய்கின்றன.
எத்தியோப்பியாவில் “தானே” என்று அழைக்கப்படும் இயற்கையாய் சமைந்த
மாபெரும் ஏரியில் இந்த நீல நைல் கலக்கிறது.
“தானே” ஏரியின் உபரி நீர் சோமாலியா வழியே பாய்ந்து இந்தியப் பெருங்கடலில்
கலக்கிறது.
_*விவசாயம் இவர்களது முக்கியமான தொழில்.*_
_*விவசாயத்துக்கு அடுத்தபடியாக, மீன் பிடித்தல் முக்கிய தொழிலாக
விளங்கியது.*_ மக்கள் வளமாக செழிப்பாக வாழ்ந்தனர்.
1839-ஆம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் இங்கே கால் பதித்தனர். சோமாலியாவின்
அழிவும் அன்றே ஆரம்பமானது.
பிரிட்டிஷ் – பிரஞ்ச் – இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையே சோமாலியா
பந்தாடப்பட்டது. இந்த போட்டிக்குக் காரணம் – நிலக்கரி.
1862-ஆம் ஆண்டு, பிரஞ்சுக்காரர்கள் சோமாலியாவில் நிலக்கரி இருப்பதைக்
கண்டுபிடித்து, சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர்.
நிலத்தடி நீர் வற்றி நாடே காய்ந்து போனது.
போதாக்குறைக்கு, எகிப்து நைல் நதியில் ஒரு பெரிய அணையைக் கட்டி,
எத்தியோபியாவுக்குச் செல்லும் நீரைத் தடுத்தது. பிரான்சு நாட்டு
ஒத்துழைப்புடன் கட்டப்பட்ட அணை அது…. (தண்ணீர் இருந்தால் சுரங்கம் தோண்ட
முடியாது என்பது மைனிங் டெக்னாலஜியில் ஆத்திச்சூடி)
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. உள் நாட்டு புரட்சிக்குழுக்கள்
போராட்டத்தைத் துவக்கின. காலனி அரசுகள் ராணுவத்தை ஏவி கலங்கங்களை
ஒடுக்கியது.
1992-ஆம் ஆண்டு பட்டினியால் மூன்று லட்சம் மக்கள் மடிந்தனர்.
இப்பொழுதே அமெரிக்கா உள்ளே நுழைந்தது. பட்டினியால் வாடும் மக்களுக்கு
உணவளிக்கப் போவதாகச் சொன்ன அமெரிக்கா, உணவுப் பொட்டலங்களுடன், சுமார்
25,000 ராணுவ வீரர்களையும் அனுப்பியது. ஐ.நா சபையின் சார்பில் சுமார்
15,000 ராணுவ வீரர்களைக் கொண்ட படையும் கூடுதலாகச் சென்றது.
கலகம் செய்யும் கூட்டத்தினர் கண்மூடித்தனமாக சுடப்பட்டனர். கலகம்,
போராட்டம், புரட்சி எல்லாம் அடங்கியது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாயின. சோமாலியாவில் பட்டினிச் சாவுகள் அன்றாட நிகழ்வு.
2012-வது ஆண்டு கணக்குப்படி 9 மில்லியன் மக்கள் இருந்தனர். 2016-ஆம்
ஆண்டு கணக்குப்படி 8.4 மில்லியன் மக்களே இருக்கின்றனர் என்று ஒரு
புள்ளிவிபரம் சொல்லுகிறது.
*ஆனால், இன்றும் நிலக்கரி உற்பத்தி அமோகமாக நடைபெறுகிறது.*
[தமிழ் நாட்டில் இன்று நிகழ்வதற்கும் இந்த வரலாற்றுக்கும் என்ன தொடர்பு
என்று ஒருவர் ஈன சுரத்தில் கேட்பது என் காதில் லேசாக விழுகிறது…
அப்படியெல்லாம் பேசக்கூடாது தேச துரோகிகளே...]
SenthilKumar Selvaraj ஹைட்ரோகார்பன் ஹைட்ரோ கார்பன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக