வியாழன், 27 ஜூலை, 2017

ஈ.வே.ரா பெண்ணுரிமை உளறல் பாப் கட்டிங் லுங்கி கருப்பை

aathi tamil aathi1956@gmail.com

ஏப். 2
பெறுநர்: எனக்கு
நிலா. வேங்கடவன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Gabriel
Arulandu மற்றும் 5 பேர் உடன்.
{தமிழர் நினைக்கவேண்டிய தலைவர்யார்?
வினா: "இன்றைக்குத் தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட, ஆனால் கட்டாயம் நினைவில்
வைத்திருக்க வேண்டிய தலைவர் என்று யாரைக்குறிப்பிடுவீர்கள்?"
விடை: நிச்சயமாக ஈ.வெ.ராமசாமி(பெரியார்)தான். .....
ஈ.வெ.ரா. வின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு.ஒன்று சாதிஒழிப்பு,மற்றொன்று
பெண்உரிமை.இவற்றிற்கு எவையெல்லாம் தடையாக இருந்தனவோ அவற்றை யெல்லாம்
எதிர்த்தார்.சாதியைஎதிர்த்தார். சாதியைஎதிர்த்தார். அதை மதம் காப்பாற்று
கிறது என்றார்கள்; மதத்தை எதிர்த்தார்.மதம் தன் கொள்கைகளை
வேதத்திலிருந்து எடுத்துக்கொள்கிறது என்றார்கள்;வேதத்தை
எதிர்த்தார்.அதுதான் சாத்திரம் என்றார்கள். அந்த சாத்திரத்தை யார்
உருவாக்கியது என்று கேட்டார்.கடவுள் என்றார்கள்.சாதி
யை உருவாக்குகிற, மக்களைப் பிளவுபடுத்துகிற கடவுளும் இருக்க முடியுமா
என்றார். அப்போதுதான் அந்தக் கடவுளை எதிர்த்தார்.
.ஆண் பெண் வித்தியாசமின்றி வளர்க்க வேண்டும் என்றார். பெண்கள் யாரெல்லாம்
பாப் கட்டிங் செய்கிறீர்களோ அவர்களுக்கு ஐந்து ரூபாய் தருகிறேன்
என்றார்.பெண்களும் லுங்கிஅணியலாம் என்றார்...
- ப.திருமாவேலன் (நேர்காணல்) _ தமிழர் நினைக்கவேண்டிய தலைவர்யார்? -
செந்தலை கவுதமன் 13 March முகநூல் பதிவு.}
துதிபாடிகள் சொல்வது :‘ஈ.வெ.ரா. வின் அடிப்படைக் கொள்கைகள் இரண்டு.ஒன்று
சாதிஒழிப்பு,மற்
றொன்று பெண்உரிமை. சாதி ஒழிப்பை எந்த அளவிற்குப் புரிந்து
கொண்டிருந்தார்; எந்த அளவிற்கு நேர்மையாக இருந்தார் என்பது ஒன்று.
எதெல்லாம் பெண்ணிற்கான உரிமையாக எடுத்துக் கொண்டார், பெண் உரிமையை
எவ்வாறு புரிந்து கொண்டார்? ஆண் பண்ணுவதையெல்லாம் பெண்ணும் பண்ணவேண்டும்
என்று புரிந்து கொண்டாரா!என்பது அடுத்தது.
பெருஞ்சித்திரனாரே சொல்லுகிறார் :‘ பெண்ணுக்கும் ஆணுக்கும் சமம் (சம
உரிமை) என்று சொல்லுவதே அரைகுறை அறிவுத்தனம்’ என்று. சமம் எப்படி ஆக
முடியும்? ஆணும் பெண்ணும் மனத்தை உடையவர்கள். மனத்தன் >மனிதன்; மனத்தி
>மனதி-மனுசி. இந்தப் பொதுத்தன்மை தவிர ஆண் வேறு, பெண் வேறுதான். இரண்டும்
சமம் என்று எப்படிச் சொல்லுவது? தனித்தன்மை என்பதைப் புரிந்து
ஏற்கவேண்டும். இரண்டுக்குமே சில தனித்தன்மைகள் இருக்கின்றன; தனிச்
சிறப்பும் இருக்கிறது!பற்பல வேறுபாடுகள் இருக்கின்றன. அ = (சமம்) ஆ வன்னா
என்று எப்படிச் சொல்ல முடியும்?
இன்னொன்று தீர்வு: அவர் (ஈ.வெ.ரா) தீர்வு சொல்லுகிறார் - பெண்களின்
கருப்பையை எடுத்துவிட்டாலே பெண்ணின் சிக்கலுக்கு தீர்வு வரும் என்று! அது
எவ்வளவு பெரிய முட்டாள்தனமான தீர்வு.
அதே மாதிரி, சாதியை ஒழிப்பதற்கு என்னடா தீர்வு என்றால் ‘சாதிவாரி
ஒதுக்கீடு’ தீர்வு என்கிறார்! இது என்ன அறிவுகெட்ட தீர்வு. நீ சாதியை
ஒழிக்க வேண்டுமென்கிறாய், அப்புறம் சாதி வாரி ஒதுக்கீடு தான் தீர்வு
என்கிறாய்! உலகத்திலேயே கேடுகெட்ட முட்டாள், வடிகட்டின முட்டாள் இவரை
மாதிரி கிடையாது.
இப்படிப்பட்ட முட்டாளைத் தூக்கிக்கொண்டு இந்த முட்டாள்கள் ஆடுகிறார்கள்.
அதற்கு ஒரு பொதுமைக் கருத்தியலை (General Theory) வேறு மானங்கெட்ட தனமாக
சொல்லிக்கொள்வது:’பெண்களுக்கு சம உரிமை -“யாரெல்லாம் பாப் கட்டிங்
செய்கிறீர்களோ அவர்களுக்கு ஐந்து ரூபாய் தருகிறேன் என்றார்.பெண்களும்
லுங்கிஅணியலாம் என்றார். ”-
மற்றது சாதியை ஒழித்திடப் பார்த்தார்...! இது, Don Quixote போல யாருமே
இல்லாத இடத்தில் வாளைச் சுழற்றுவது போல் என்க.
இயற்கையிலேயே இருக்கின்ற தனித்தன்மை - அதை எதிர்த்துப் போராடுவது
எதற்கு?! இயற்கையின் தனித் தன்மைகளை ஏற்றுக் கொண்டு, அதற்கு இசைவோடு
வாழவேண்டும், அவ்வளவுதான்! அதுபோல, மனிதர்கள் வாழ்கின்ற போக்கிலே தனித்
தனிக் குழுவாக அமைவது இயற்கை! மலையில் வாழ்வதால் அவன் குன்றனாக
(கவுண்டன்) இருப்பான்; இந்தப் பக்கம் ஆயனாக இருப்பான். ஆயர் என்றாலே
‘மந்தை, குழு ‘ என்றுதானே பொருள்! ஆயம் > கூட்டம். முல்லை நிலத்திலே
மனிதர்களாக இருந்தாலும் சரி, ஆடு மாடுகளாக இருந்தாலும் சரி முழுக்க
முழுக்க மந்தைகளாக, கூட்டங்களாக இருப்பது!
இவன் ஒரு குழு, அவன் ஒரு குழுவாக இருப்பது இயற்கை. மனித வாழ்க்கை
அமைகின்ற வரைக்கும் குழு அமைதல், தனித்தனிக் குழுக்கள் அமைவது
என்பதெல்லாம் இயற்கைப் போக்கு. இந்த இயற்கைப் போக்கைப் பயன்படுத்திக்
கொண்டுதான் , பொருள் உருவாக்கத்தை செழுமையாக்குவதற்காகவே 'Team
Management' என்ற கருத்தியல், நடப்புக் கால மேலாண்மையில்
இடம்பெற்றுள்ளது. மனிதன் இயற்கையாகவே குழுவாக வாழ்பவன் என்பதைக்
கண்டறிந்து, குழுவாக இருந்தால்தான் வேகமாக வேலை செய்கிறான் என்பதறிந்து
குழு உணர்வோடு (Team Spirit) செயல்படவேண்டும் என்கிறான்.
இயற்கையாகவே நாம் வாழ்கின்ற , வாழ்வியல் ‘நிலம்-பொருள்-காலம்’ ஆகிய
செயல்களின் ஊடாக - நம் வாழ்வியலின் ஊடாக அமைகின்ற குழுக்களை ஒழிக்க
வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம்!
நமது பார்வை: ‘குழுக்கள் அமைவது இயற்கை. பிறப்பு வழி உயர்வு-தாழ்வுகளை
இயல்பாக இருக்கின்ற குழுக்களின் மேல் ஏற்றி நிறுத்துகிற அரசியல், குமுக
சதிகளைத்தான் நாம் எதிர்க்கிறோம். அந்த நிலைப்பாட்டில்தான் பழந்தமிழர்
குமுகத்திலிருந்து இதுவரை வாழ்கின்ற நல்ல தமிழர்கள் இருக்கிறார்கள்.
இந்த இரண்டையும் ஒழிக்கிறேன் பேர்வழி என்று ஈ.வெ.ரா.
கிளம்பியதற்கப்புறம், அதற்குத் தடையா மதம் இருந்தது, மதத்திற்கு வேதம்,
வேதத்திற்கு சாத்திரங்கள், சாத்திரத்தை உருவாக்கிய கடவுள் ...இப்படி
படிப்படியாக தடையாக இருந்தவற்றையெல்லாம் எதிர்த்தார் ஈ.வெ.ராமசாமி
என்கிறார் ப.திருமாவேலன் ! சரி, இந்த இரண்டையும் ஒழிக்க , ‘தமிழ்’ எங்கடா
தடையாக இருந்தது? இந்த இரண்டையும் எதிர்க்கத் ‘தமிழன்’ மட்டுமே பகை என்று
எப்படியடா கண்டறிந்தாய், நீ? இந்த இரண்டு பேயும் பிடித்தவன் தமிழன்
மட்டுந்தானா? ஏன் தெலுங்கன் கிட்டே இல்லையா? மலையாளி கிட்டே இல்லையா?
கன்னடன் கிட்டே இல்லையா? நீ, என்றைக்காவது ஒரு தெலுங்கனைத் ‘தேவடியா
மகன்’என்று திட்டியிருக்கிறாயா?
தமிழன் மட்டும்தான் பெண்ணுரிமைக்கும் சாதிக்கும் எதிராக இருந்தவனா?
தமிழைக் காட்டுமிராண்டி மொழி, வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசு
என்றெல்லாம் கூறி தமிழை ஒழிக்கக் கிளம்பினாயே, தமிழ்தான் இந்த
இரண்டுக்கும் தடையாக இருந்ததா? இந்த இரண்டையும் ஒழிப்பதற்கு தேவிகுளம்,
பீர்மேடு, சித்தூர், நெல்லூர் எல்லாம் தடையாக இருந்தனவா? எங்கடா
கதைவிடுறே நீ! இந்த இரண்டைத் தாண்டி, தமிழ் என்ற தளத்தில் ஒழிக்கவேண்டும்
என்றும் தமிழன் என்ற அடையாளத்தை ஒழிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு
என்பதைச் சிதக்க வேண்டும் என்றும் நீ செயல்பட்டது எதிலிருந்து வருகிறது?!
இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளுக்கும் தான் போராடினார்-எதிர்த்தார்
என்று அவருடைய துதிபாடிகள் அவரை அப்படியே காப்பாற்றிக் கொண்டுபோய், அவர்
செய்த தமிழர் இனப்பகை வேலைகளையெல்லாம் மறைத்துக் கொண்டு, மறுத்துக்கொண்டு
அலைவது என்னவொரு அயோக்கியத்தனம்!
தமிழருடைய சங்ககால விழுமியங்கள் பெண் அடிமைத்தனம் சார்ந்தவையா? இல்லை
பெண்ணை உயர்ந்த இடத்தில் வைப்பனவா? உலகத்திலே எங்குவேண்டுமென்
றாலும் ஒப்பீட்டளவில் பார்த்தால், ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னாடி, ஒரு ஐநூறு பேர் கொண்ட அவையில் இருநூறு பேர் பெண்பாற்புலவர்க
ளாக இருந்திருக்கிறார்கள். உலக வரலாற்றில் எங்காவது இப்படி ஒரு சமன்மை
நிலையைக் காட்ட முடியுமா?
இப்பொழுது, நடப்புக் காலத்தில் - அதாவது இந்த வருண மனுவாதிகளும்
திராவிடர்களும் வந்ததற்கப்புறம் வேண்டுமானால் அந்நிலை இல்லாமலிருக்கலாம்;
இப்பவும் கூட நுட்பமாகப் பார்த்தால், தமிழர் இல்லங்களில் மகளிர்
அரசாட்சிதான்!
திருக்குறளை ஏன் திரித்துப் பொருள் சொன்னே! திருக்குறளை பெண்ணடிமை நூல்
என்று பிரச்சாரம் செய்தாயே, அது எதற்கு? தமிழ், தமிழர் இனம்,தமிழர்
பண்பாடு இவை ஏதும், சாதிக்கும் பெண்ணடிமை நீக்கத்திற்கும் தடையாக
இருந்தனவா? இல்லையே! பிறப்புவழி உயர்வு தாழ்வை மறுத்த மொழி ‘தமிழ்’ ;
மறுத்த இனம் ‘தமிழினம்’ ; மறுத்த பண்பாடு ‘தமிழ்ப் பண்பாடு’!
பெண்ணடிமைத்தனத்
திற்கு தொடர்பே இல்லாத மொழி-தொடர்பே இல்லாத இனம்- தொடர்பே இல்லாத
மெய்யியல் நம்முடையது.
ஆனால், ஈ.வெ.ராமசாமி அடிப்படையிலேயே தமிழர் இன எதிரி. இதை மறைப்பதற்காக
அவரது எடுபிடி நாய்கள் , காட்டிக்கொடுக்கிற பொறுக்கி நாய்கள் , அவரை ஏன்
மீண்டும் மீண்டும் இட்டுக்கட்டி பெருமைப்படுத்திக் கொண்டு, அவரது
பிணத்தைத் தூக்கி ஆட்டிக்கொண்டு போகின்றன என்பதே நம் ஆதங்கம்.
வள்ளலார் பெண்களை எப்படி மதித்துப் போற்றுகிறார் பாரு! திரு.வி.க. எப்படி
நம் பெண்களை தெய்வமாக மதித்துப் போற்றுகிறார் பாரு! பக்தி மார்க்கத்தில்
இருக்கிற அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற மதவாதிகள் எல்லாம்
பெண்களை எப்படி பேசினார்கள், மதித்தார்கள் என்று பாரு! இதைத் தாண்டி,
மதமற்ற காலத்திலுள்ள சங்க இலக்கியங்களைப் பாரு!
அதையெல்லாம் தவிர்த்துவிட்டு, ‘தமிழர் கட்டாயம் நினைவில் வைத்திருக்க
வேண்டிய தலைவர் ’என்று ஈ.வெ.ராமசாமியை ஒருவர் குறிப்பிடவும் பாலுக்கும்
காவல் பூனைக்கும் தோழன் கதைநாயகன் அதை அப்படியே தன்பதிவில் பதிந்து
எம்மவரை ஏய்த்தலும்...! அப்ப, எவ்வளவு குறும்புத்தனம் இருக்க வேண்டும்.
எவ்வளவு மேலோட்டமாக ஏமாற்றப் பார்க்கிறார்கள், இந்தக் காட்டிக்
கொடுக்கின்ற கங்காணிப்பயல்கள்!
(தொடரும்)
-அருள்நிலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக