|
மார். 26
| |||
எறி புனக் குறவன் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள் அழல்
குறுகினும் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க …
கரிய புறத்தை உடைய விறகுகள் அதியமானின் உடல் மீது அடுக்கப்பட்டிருந்தன.இனி அந்த ஈமத்தீயானது அவன் உடலைச் சுடாமல் அணைந்தாலும் அணையட்டும் அல்லது வானத்தைத் தொடுமாறு அத்தீயானது மேல் எழுந்தாலும் எழட்டும்.
மேலும் காண்க : கவி செந்தாழி.புறநா.238., ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது, உரிமை மகளிரும் உடன் மாய்ந்தனர்,240. கவிக்கும் கண் அகன் தாழி,228.
யாமும் எம் தலைவனோடு இறக்கவிருக்கின்றோமாதலின் இடம் அகன்ற பெரியதொரு தாழி செய்ய வேண்டுதல், 256.
தமிழர் வழக்கம் பிணத்தை எரித்தலா புதைத்தலா ? எரித்தல் புகுந்தமையும் புதைத்தல் ஒழிந்தமையும் குறித்து ஆய்க. உடன் மாய்தலோடும் ( எரி மூழ்குதல்)ஒப்பிடலாம்.
புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் ஈமக்கடன் பெண்ணுரிமை காதல் பெண்ணடிமை பெண்கள் நிலை சங்ககாலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக