|
மார். 26
| |||
கைம்பெண்டிர் – கூந்தல் கழித்தல்
சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
மாறோக் கத்து நப்பசலையார்,புறநா.280:13-15
சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் ,அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம் – எனத் தலைவி வருந்துகிறாள்.
மகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு. கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவி (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க. மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். (225) எனவும் குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும் சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் எனவே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழித்தல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். ஒளவை சு.து.உரை.
புறநானூறு சங்ககால இலக்கியம் குறிப்பு
களப்பாள் இணையம் பெண்ணுரிமை பெண்ணடிமை பெண்கள் நிலை சங்ககால திருமணம் இல்லறம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக