ஞாயிறு, 23 ஜூலை, 2017

பாம்பு எனும் சொல் இலக்கியம் நாகமணி

aathi tamil aathi1956@gmail.com

மார். 26
பெறுநர்: எனக்கு
மேய்மணி யிழந்த பாம்பின் நீநனி
தேம்பினை வாழியென் நெஞ்சே வேந்தர்

பரணர்.
அகநானூறு 372

நெஞ்சே!
பாழி நகரில் முதுவேளிர் குடியினர் பாதுகாக்கும் செல்வம் போல உன் காதலி பெற முடியாத பண்பை உடையவள் என்று நினைந்து வருந்துகிறாய். 

என்றாலும் நீ அவளிடம் சென்று பெறாமல் திரும்புகிறாய். பனை மரத்தில் கட்டிய பலரும் ஆடும் ஊஞ்சல் முன்னும் பின்னும் செல்வது போலச் சென்று திரும்பி வருந்துகிறாய்.

குதிரைமலை அரசன் அஞ்சியை அலைக்கழித்த வெற்றியாளரின் துடியில் கட்டியிருக்கும் வார்க்கயிறு துடியின் இரண்டு பக்கத்தையும் அடிப்பது போலச் சென்று திரும்புகிறாய். 

நஞ்சு மணியை இழந்த பாம்பு போல் வருந்துகிறாய்.
மலை மேல் இருக்கும் கோட்டை போல் அவள் பெற முடியாதவள் என்பது உனக்குத் தெரியவில்லையா?
  • பாழி – தண்டிக்கும் கடவுள் காக்கும் ஊர். தேன் கூடுகள் தொங்கும் பாறைகளைக் கொண்டது. பெண்தெய்வம் அணங்கு வாழுமிடம். முதுவேளிர் மக்கள் தங்களின் அரிய செல்வங்களைப் பாதுகாப்பாக வைக்கும் அகன்ற நகரம்.
  • குதிரை – நீண்ட பாதை கொண்டது குதிரை மலை. அதியமான் நெடுமான் அஞ்சி அதன் அரசன். அஞ்சி கூர்மையான வேலைக் கொண்டவன். கொடிய வில்லினை உடைய ஆண்கள் சிலர் போர் முனையில் தாக்கினர். அலைக்கழித்தனர். அஞ்சியை வென்று துடி முழக்கத்திடன் ஆடினர். துடியில் வார் கட்டப்பட்டிருக்கும் அந்த வாரின் நுனியில் இருக்கும் அரக்கு துடியின் இருமுகத் தோலிலும் அடிக்கும். அந்த வார் போல நெஞ்சே, நீ என் காதலியிடம் போவதும் வருவதுமாக இருக்கிறாய்.
  • பாம்பு – மணியை உமிழ்ந்து அதன் வெளிச்சத்தில் இரை தேடி மேயும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த மணியை இழந்த பாம்பு போல் நீ உன் காதலியைப் பெற முடியாமல் வாடுகிறாய்.
  • அணங்கியோள் – அழகால் வருத்திய காதலி. பெறுதற்கு அரியவள். காப்புடன் மலைமேல் இருக்கும் வேந்தனின் கோட்டை போல் பெறுவதற்கு அரியவள்.

 
துடி
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை  குறிஞ்சி

அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப,
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை,
அணங்குடை வரைப்பின்பாழி ஆங்கண்,
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, 5
வருந்தினம் மாதோ எனினும்அஃது ஒல்லாய்,
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல்,
ஊர்ந்து இழி கயிற்றின்செல வர வருந்தி,
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் 10
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும்,
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா,
மேய் மணி இழந்த பாம்பின்நீ நனி
தேம்பினை வாழிஎன் நெஞ்சேவேந்தர்
கோடணி எயிலின் காப்புச் சிறந்து,        15
ஈண்டு அருங்குரையள்நம் அணங்கியோளே.

அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பரணர் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

http://vaiyan.blogspot.com/2016/10/agananuru-372.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக