|
மார். 26
| |||
அகநானூறு – அரிய செய்தி -87
முதைபடு பசுங்காட்டு அரில்பவர் மயக்கி
பகடுபல பூண்ட உழவுறு செஞ்செய்
இடுமுறை நிரம்பி ஆகுவினைக் கலித்து
பாசிலை அமன்ற பயறுஆ புக்கென
வாய்மொழித் தந்தையைக் கண்களைந்து அருளாது
ஊர்முது கோசர் நவைத்த சிறுமையின்
கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள்
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்
மறம்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்
செரு இயல் நல்மான் திதியற்கு உரைத்து அவர்
இன்னுயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னி மிஞிலி .........
பரணர்.அகம் 262 : 1 – 12
பழமையான பசிய காட்டில் – எருதுகள் பூட்டிய பலஏர்கள் உழுது போட்ட சிவந்த புன்செய் நிலம்- எரு இட்டு – களை பறித்து – நீர் பாய்ச்சி – தழைத்து வளர்ந்த பயற்றங்கொல்லையில் பசு ஒன்று மேந்தது. பழமையான அவ்வூரில் இருந்த கோசர்கள் அப்பசு தன் பசு என்ற உண்மையை மறையாது உரைத்த தன் தந்தையின் கண்களை இரக்கமின்றிப் பிடுங்கித் துன்புறுத்திய கொடுமையினை அன்னிமிஞிலி அறிந்தள்- பொங்கிச் சினந்தவள் அக்கொடியாரை ஒறுக்கும்வரைக் கலத்திலிட்டு உணவு உண்ணேன் ; உடலில் தூய ஆடையினை உடுத்திக்கொள்ளேன் என விரதம் பூண்டாள்.வீரம் செறிந்த குறும்பியன் போர்த்திறன் கொண்ட திதியன் இருவரிடமும் தன் நோன்பை கூறினாள் அன்னி. இருவரும் படையுடன் சென்று கோசரைக் கொன்றனர். அன்னி மிஞிலி சினம் ஒழிந்து மகிழ்ந்தாள்.
அகநானூறு
களப்பாள் இணையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக