செவ்வாய், 4 ஜூலை, 2017

எழுத்து சீர்திருத்தம் தமிழரே தொடங்கியது 1930 முருகப்பா

aathi tamil aathi1956@gmail.com

3/10/14
பெறுநர்: எனக்கு
மக்களே 20 நூற்றாண்டில் நம் தமிழில் எழுத்துச்
சீர்மை நடந்த பட்டியல்!
திருத்திய தமிழரிச்சுவடி*.
1930காரைக்குடியில்இருந்து வெளிவந்த குமரன்
இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா,
ணை, ளை, னை என்ற வரி வடிவங்களைப்
பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர்
கருத்தை வரவேற்றார்.
*.1933திசம்பர் 23, 24 நாட்களில்சென்னை
பச்சையப்பன்கல்லூரியில்நடந்த தமிழன்பர்
மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச்
சீர்திருத்தத் தீர்மானம் நிறைவேறியது.
*.1933-ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற
தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி.
சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர்
கட்டுரை எழுதினார்.
*.1935குடியரசு இதழில்பெரியார்எ
ழுத்து என்று தற்போது கூறப்படும்
திருந்தியவரிவடிவத்தைப் புகுத்தித்
தொடந்து குடியரசிலும்,விடுதலையிலும்பயன்
படுத்தினர்.
(அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ,
னொ, னோ, றொ, றோ)
*.1941சனவரி 18, 19 நாட்களில்மதுரைய
ில்நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்”
எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
*.1948பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில்
நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச்
சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
துடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும்
அமைக்கப்பட்டது.
*.1950-ல்தி. சு. அவிநாசிலிங்கம்
செட்டியார்கல்வி அமைச்சராக இருந்த
பொழுது எழுத்துச் சீர்திருத்தக்
குழுவை அமைத்தார்.
*.உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின்சார்பில்
நடந்தஒவ்வொரு மாநாட்டிலும்எழுத்துச்
சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்
பெற்றன.
*.1975பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர்
குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச்
சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது.
(இப்பொழுது தமிழக்ப் புலவர்
குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது.
குழு உறுப்பினர்களில் எழுத்துச்
சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)
*.1977ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல்அறிக்கையில்
அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில்
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக
உறுதியளித்தது.
*.1978-79 ல் பெரியார்
நூற்றாண்டு விழாவையொட்டித்தமிழ்நாடு அரசு,
முதற்கட்டமாகப் பெரியார் 1935முதல்
பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர
மற்றவற்றைச் செயற்படுத்தியது.
*.1983ல்சிங்கப்பூர்அரசு இச்சீர்திருத்தத
்தை ஏற்றது.1984தைத் திங்கள் முதல்
செயற்படுத்தியது.
இதில் கூத்து என்னனா முதலில்
வந்தவருக்கு முன்னுரிமை அளிக்காமல், தீராவிடம்
அதிகாரத்தில் இருந்தபடியால்,
நம்மவரை புறந்தள்ளி விட்டு, எழுத்துச்
சீர்மையை நடைமுறைப் படுத்தியவர் பெரியார் தான்
என்று அரசாணையை வெளியிட்டது,
ஆனால் இதற்க்கு முதலில் வித்திட்டவர் நம்மவரே,
அதை மறைத்து,
இன்று பெரியார் இல்லைனா நீங்கள்
கணினி பயன்பாட்டை தொட்டிருக்க முடியாது என
உளவியல் ரீதியாக நம்மை அடிமைப்
படுத்துகிறது தீராவிடம்,
இது எப்படி என்றால், அன்று பெரியாரிடம் நீங்கள்
கன்னடர், தமிழுக்கும், தமிழர்களுக்காக நீங்கள் ஏன்
போராட வேண்டும் என வினவியபோது,
தமிழன் எவனும் போராடவில்லை, அதனால் நான்
போராடுகிறேன் என்றுச் சொல்லி,
தமிழின விடுதலைக்காக போராடிய பல நல்
உள்ளங்களின் அர்ப்பணிப்பை மறைத்து,
தீராவிடமும் தீராவிடர்களும் இல்லையென்றால்
தமிழர்கள் இல்லையென்று,
ஒரு மாயை உருவாக்கி தமிழர்களை உளவியல்
ரீதியாக அடிமைப்படுத்த தீட்டப்பட்ட
திட்டத்தை இன்றளவும் விதைத்து வருகின்றனர்!
வியாழன் · பொது Kathir Nilavan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக