சனி, 15 ஏப்ரல், 2017

எள் எண்ணெய் சிறப்பு மருத்துவம் அறிவியல் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

2/9/15
பெறுநர்: எனக்கு
சந்தோஷ் வீரத்தமிழன்
மொதல்ல நம்மளோட நல்லெண்ணெய் - தேங்காய் எண்ணெய் எல்லாம் கொழுப்புனு சொன்னாங்க.
அப்புறம் ரீஃபைண்டு பண்ண ஆயில் நல்லதுன்னு சொன்னாங்க.
அடுத்து, சன்ஃப்ளவர் ஆயிலுக்கு மாறச் சொன்னாங்க. அப்புறம், தவிட்டு எண்ணெய்.
இப்போ ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில். எது டாக்டர் சரியான
எண்ணெய்?'' - இந்தக் கேள்வியைக் கேட்காதவர்கள் இல்லை.
தொல்காப்பியக் காலம் முதல் நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய் வித்து எள்.
'கன்னலின் இலட்டுவத்தோடு காரெள்ளின் உண்டை’ எனக் குழந்தைக்கு உணவாகப்
பெரியாழ்வார் சொன்னதைத்தான், 'இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு’ என்று சொன்னது
சித்த மருத்துவம்.
அந்த எள்ளில் இருந்து பிரித்தெடுத்த நல்லெண்ணெய்தான், ரொம்பக் காலமாக
நாம் பயன்படுத்திய சமையல் எண்ணெய். கிட்டத்தட்ட 47 சதவிகிதம் பாலி
அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்கொண்ட இந்த நல்லெண்ணெய், வெறும் எண்ணெய்
அல்ல நண்பரே... மருந்து!
நல்லெண்ணெய், கருப்பைக்கு மட்டும் அல்ல. உடலுக்கும் உறுதி தரும்; உறக்கம்
தரும்; ஊக்கம் தரும்; நோய் எதிர்ப்பாற்றல் தரும். அதில் உள்ள கனிமங்களும்
செசாமின், லிக்னைன் முதலான நுண்பொருட்களும், கிருமியில் இருந்து
புற்றுநோய் வரை விரட்டும் என்கின்றன இன்றைய ஆய்வுகள்.
# ஆனால் , கசக்கிப் பிழியாமல், 'ஹெக்சேன்’ எனும் பெட்ரோ கெமிக்கல்
வஸ்துவில் கரைத்து, எண்ணெயைப் பிரித்து, அதன் இயல்பான மணம், நிறம்,
அடர்த்தி அத்தனையையும், கிட்டத்தட்ட 450 டிகிரிக்கும் மேலான சூட்டில்
பல்வேறு இயந்திரங்களில் பயணிக்க வைத்து புண்ணாகி வரும் 'மங்குனி எண்ணெய்
வகையறாக்கள்’ ஆன ரீஃபைண்டு ஆயில் வகையறாக்கள் விற்பனையில் பின்னி
எடுக்கின்றன
நன்றி: அன்பு செல்வி — Kathir Nilavan,
Arul Natesan, Arutchelvan Thiru, Raja Krish,
Charles Raja, Natesan Tamil Arul , Suresh Uma , Shanmugam Karthi, Arun
Raj, Aathi Prakash Savetamilpeople (நீக்கு),
Karuppanaswamy Yoganathan, Aham Saba ,
Suresh Kumar , Che Ka , Malathi Rathinam,
Arun Ponting , Dhanush Bala , Maharajan Yathavaraj Mba Bl , Paramesh
Waran மற்றும்
Ragul Gunasekaran உடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக