சனி, 15 ஏப்ரல், 2017

சமணர் கழுவேற்றம் பொய் 240 பக்க நூல்

aathi tamil aathi1956@gmail.com

2/9/15
பெறுநர்: எனக்கு
கோ.செங்குட்டுவன்
“எண்ணாயிரம் சமணர் கழுவேற்றப்பட்டனர்.”
காலங் காலமாகச் சொல்லப்பட்டு வரும் விசயம்.
சொல்லப்பட்டு வருகிறது என்பதாலேயே, அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது
பகுத்தறிவுக்கு முரணானதாயிற்றே?
தேடலில் இறங்கினேன்.
சமணர் கழுவேற்றம் கற்பனையா? வரலாறா?
இதுதொடர்பான விவாதம் அருட்பிரகாச வள்ளலாரிடமிருந்
துத் தொடங்கியது. இன்று வரை தொடர்கிறது.
1867இல் வெளியிடப்பட்ட நான்காம் திருமுறை தொடங்கி,
2014 மே 14 தி இந்து (தமிழ்) வரையிலான விவாதங்கள் ஓரளவுத் தொகுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் ஊடாக முடிவினைத் தேடும் ஒரு முயற்சி.
மதுரை, காஞ்சிபுரம், சென்னை, திருவதிகை என பல்வேறு இடங்களில் கள ஆய்வுகள்.
மேல்சித்தாமூர் சமண மடாதிபதி ஸ்ரீலட்சுமிசேன பட்டாரகரின் நேர்காணல்.
தேவையான இடங்களில் புகைப்படங்கள்.
80க்கும் மேற்பட்ட நூல்கள் ஆய்வுக்குப் பயன்பட்டன.
சுமார் இரண்டு ஆண்டுகால உழைப்பு.
240 பக்கங்களில் நூலாக உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே,
விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள், நந்தன் கால்வாய், வரலாற்றில்
விழுப்புரம் மாவட்ட ஊர்கள்,
இந்த வரிசையில் “எண்ணாயிரம் சமணர் கழுவேற்றம் கற்பனையே” - எனது நான்காவது படைப்பு.
வழக்கம்போல் என் சொந்த வெளியீடாக, இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதத்
தொடக்கத்தில் வெளியிடத் திட்டம்.
உங்களின் ஆதரவுடன்..
https://m.facebook.com/photo.php?fbid=1481067208883982&id=100009421526859&set=a.1441627889494581.1073741829.100009421526859&refid=12&__tn__=E

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக