சனி, 15 ஏப்ரல், 2017

மொரக்கோ ஆப்பிரிக்கர் ஈழத்தில் வாழ்ந்துள்ளனர் யாழ் வன்னி போர்த்துகேயர் சங்கிலி பண்டார வன்னியன் போர்த்துகீசியர் ஈழம் இனக்கலப்பு புலிகள்

aathi tamil aathi1956@gmail.com

3/9/15
பெறுநர்: எனக்கு
தமிழீழப் போராட்டத்திற்க்கான வரலாற்றுப் பின்னணி
நல்லூரைத் தலைநகராகக் கொண்ட யாழ்ப்பாண இராச்சியம் போத்துக்கேயரின்
வருகையோடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியம் யாழ்
குடாநாடு முழுவதையும் வன்னியின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது.
யாழ் மன்னர்களிடம் கடற்படையும், வட ஆபிரிக்கக் கூலிப்படையினர் அடங்கிய
தரைப்படையும் இருந்தது. மொறக்கோ என்ற வட ஆபிரிக்க நாட்டுக்
கூலிப்படையினர் யாழ் மன்னனின் சேவையில் இருந்தனர். இவர்கள் பாப்பரவர்
என்று அழைக்கப்பட்டனர்.
பாப்பரவர்கள் இன்று யாழ் மக்களுடன் கலந்து வாழ்கின்றனர். அவர்கள் தமிழ்
பேசுகின்றனர். பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்து மீன்பிடியில்
ஈடுபடுகின்றனர். யாழ்ப்பாண இராச்சியத்தைப் பற்றிய வரலாற்றைக் கூறும்
வையாபாடல் பாப்பரவர் பற்றிக் குறிப்பிடுகிறது.
வஸ்கொட காமா இந்தியாவுக்கான கடற் பாதையைக் கண்டுபிடித்தார். இதனால்
ஐரோப்பியர்கள் ஆசியாவுக்கு வரத் தொடங்கினார்கள். வஸ்கொட காமா போத்துக்
கேயரான படியால் ஆசியாவுக்கு வந்த முதலாவது ஜரோப்பியர்கள் போத்துக்
கேயர்கள் என்பது வரலாறு.
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு போத்துக்கேயர்களின் வருகையால்
முடிவுக்கு வந்தது. பிரகன்சா என்ற போத்துக்கேயத் தளபதி யாழ்ப்பாண
இராச்சியத்தை கைப்பற்றினார். யாழ்ப்பாணத்தை கடைசியாக ஆண்ட மன்னன் பெயர்
சங்கிலி. இவர் போத்துக்கேயர்களுடன் போரிட்டு மடிந்தார்.
போத்துக்கேயர்கள் ஆட்சி 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி 1659ம்
ஆண்டில் முடிவுக்கு வந்தது. போத்துக்கேயர்களைத் தோற்கடித்த ஒல்லாந்தர்கள்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.
போத்தக்கேயர்கள் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த போது போத்துக்கேய மொழிச்
சொற்கள் தமிழ் மொழியுடன் கலந்தன. அலவாங்கு, அலுமாரி, யன்னல், குசினி என்ற
சொற்கள் சில உதாரணங்கள். அலவாங்கு என்பது கடப்பாறையை குறிப்பிடும் சொல்.
கத்தோலிக்க மதம் யாழ் குடா நாட்டில் போத்துக்கேயர்களால் பரப்பப்பட்டது.
முதன் முறையாக ஒரு அந்நிய மதம் யாழ் குடா நாட்டில் அறிமுகமாகியது.
இன்றும் கத்தோலிக்க மதம் யாழ்ப்பாணத் தமிழரின் சமூக வரலாற்றில் முக்கிய
பங்கு வகிக்கிறது.
ஊர்காவற்துறைத் தீவுக்கு கயிற்ஸ் என்று பெயர் வைத்தவர்கள்
போத்துக்கேயர்கள். புராதன காலந் தொட்டு ஊர்காவற்துறை யாழ் குடாவின் பழம்
பெரும் துறைமுகத் தீவு. இங்கு ஜரோப்பிய நாட்டுக் கப்பல்களும் ஆசியாவின்
சீன மற்றும் இந்தியக் கப்பல்களும் வந்து சென்றன.
போத்துக்கேய மொழியில் கயிஸ் (Cais) என்றால் துறைமுகம் என்று பொருள். யாழ்
மன்னனின் இன்னொரு துறைமுகம் யாழ் நகரின் கிழக்கில் உள்ள நாவாந்துறை.
இங்கிருந்து யாழ்ப்பாணப் படகுகள் மாலைதீவு, வங்காள விரிகுடா போன்ற
பகுதிகளுக்குச் சென்றன.
யாழ் மன்னர்களின் கொடி நந்திக் கொடி. அவர்களுடைய இலச்சினை சங்கு சக்கரம்.
யாழ் மன்னர்கள் சொந்தமாக நாணயங்கள் வைத்திருந்தனர். அவர்கள் தமிழகம்,
கண்டி இராச்சியம் ஆகியவற்றுடன் திருமண உறவுகளை ஏற்படுத்திப் பலம் வாய்ந்த
நிலையில் இருந்தனர்.
ஓல்லாந்தர் (ர்ழடடயனெநசள) ஆட்சி 1969ல் தொடங்கி பிரிட்டிசார் வருகையுடன்
முடிவுக்கு வந்தது. பிரிட்டிஷ் ஆட்சி 1805ம் ஆண்டுடன் தொடங்கியது.
பிரிட்டிஷ் ஆட்சி ஈழத் தமிழர் வரலாற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
போத்துக்கேயர்களும் ஒல்லாந்தர்களும் தமிழர் வாழ்விடங்களையும் சிங்களவர்
வாழ்விடங்களையும் ஒன்றுபடுத்தாமல் வௌ;வேறாக ஆட்சி செய்தனர். ஆனால்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தமது நிர்வாக நலனுக்காக 1833ல் மேற்கூறிய
வேறுபாட்டைக் களைந்து ழுழுத் தீவையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு
வந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியில் தமிழர்கள் தமது தனித்துவத்தையும் தாயகத்தையும்
இழந்தனர். தமிழீழத்திற்கான போராட்டம் இந்த இழப்பைச் சரி செய்வதற்காகவும்
ஒன்றிணைக்கப்பட்ட தாயகத்தை மீட்டெடுப்பதற்காகவும் நடத்தப்படுகிறது.
தமிழீழப் போராளிகள் பரிவினைவாதிகள் அல்ல, அவர்கள் இழந்ததை மீளப்பெறப்
போராடுகிறார்கள்.
பண்டார வன்னியன்: வன்னி பெருநிலப்பரப்பு கிளிநொச்சி, முல்லைத்தீவு,
மன்னார், திருகோணமலை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது. இந்தத்
தரைப்பரப்பில் குறுநில மன்னர்கள் ஆட்சி நடைபெற்றது. அவர்கள் பிறிதொரு
மன்னர்களுக்கும் தலை வணங்காது சுதந்திரமாக ஆட்சி செய்தனர். இவர்களில்;
ஒருவன் பிரிட்டிஷ்சாரோடு போரிட்டு மடிந்த பண்டார வன்னியன் ஆவன்.
போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சி காலத்திலும் வன்னிக் குறு நில மன்னர்
ஆட்சி தொடர்ந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வன்னிபங்கள் என்று
அழைக்கப்பட்ட குறு நில மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தது.
வன்னி மன்னர்களில் முக்கியமானவன் பண்டார வன்னியன். இவனுக்கு எதிராகப்
பிரிட்டிஷ் நடத்திய முதலாவது போரில் பிரிட்டிஷ் படைகள் தோல்வி அடைந்தன.
அதன் பின் பிரிட்டிஷ் அதிகாரிகள் பண்டார வன்னியனுக்கு எதிராகச்
சூழ்ச்சியில் இறங்கினார்கள்.
பண்டார வன்னியனுக்கு எதிராகப் பிற வன்னிபங்களைத் தூண்டி விட்டார்கள்.
இந்தக் குறு நில மன்னர்கள் பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தார்கள்.
அதன் காரணமாக கப்டன் டிரிபேக் (ஊயிவயin னுசநைடிநசப) என்ற கூலிப்படைத்
தலைவன் பண்டார வன்னியனைப் போரில் வென்றான்.
கப்டன் டிரிபேக் நாட்டிய நினைவுக் கல் முல்லைத்தீவு மாவட்டத்தில்
காணப்படுகிறது. தனது வெற்றியைப் பறைசாற்ற டிரிபேக் நாட்டிய நினைவுக் கல்
நிற்கும் இடம் கற்சிலைமடு என்ற கிராமத்தில் காணப்படுகிறது. விடுதலைப்
புலிகள் பண்டார வன்னியனுக்கு நினைவுச் சின்னம் எழுப்பினார்கள். அதைச்
சிங்கள இராணுவம் 2009ல் அழித்து விட்டது.
அன்புச் செல்வன் (த-வி-பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக