சனி, 15 ஏப்ரல், 2017

ஈவேரா மண்மீட்பு நக்கல் எதிர்ப்பு 1956

aathi tamil aathi1956@gmail.com

2/9/15
பெறுநர்: எனக்கு
தமிழ்ச் செல்வன் தமிழ்
மங்கலங்கிழார் நினைவுநாளையொட்ட
ி இப்பதிவு
தமிழ் மாமுனிவர் மங்கலங்ழார் அவர்களால் அவர்களால் தொகுக்கப்பட்ட
தமிழ்நாட்டின் வடக்கு என்ற நூல் சித்தூர் சில்லா புத்தூர் வடவெல்லை
அறநெறி சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறையன விலைக் கொண்ட நூலில்
இருந்து சிறு பகுதியும் அன்று தமிழினத்தின் பகையாக இருந்த ஈ.வெ.ரா.வின்
வடவெல்லை குறித்த செய்தி சிறுபகுதியும் இங்கே பதிவிடப்டுகிறது:-
சித்தூர் சில்லாவானது 1.4.1911ம் தேதி உண்டாயிற்று, அரசாங்கத்தாரின்
ஆட்சி வசதியின்பொருட்டு மதுரை,
கோதாவரி சில்லாக்களை இரண்டிரண்டாகப் பிரித்திருப்பதை
ப்போல், வடார்க் காடு சில்லாவையும் இரண்டாகப் பிரித்து, அதன் வடபகுதியோடு
கடப்பை சில்லாவைச் சேர்த்து சித்தூர்சில்லா என்று பெயர்வைத்தனர்.
அவ்வளவேயாகும்.
இந்தச் சில்லாவை ஆந்திர நாட்டோடு சேர்த்து விட்டனர் என்று, ஆந்திரர்
கூறுவது ஏமாற்றுப்பேச்சாகும். தமிழ் நாட்டினின்றும் பிரித்த பகுதி, தமிழ்
நாட்டிற்கே சொந்தமாகும் என்பது சிறுகுழந்தையும் அறிந்ததே.
(தமிழ்நாட்டின் வடக்குபக்கம்5)
அக்காலத்தில் வடவெல்லைக் குறித்து ஈ.வெ.ரா.வின் கருத்து இதோ!
எல்லைப்போராட்டத்தின்போது ஈ.வெ.ரா. எல்லை போராட்டத்திற்கு எதிராக பேசித்
தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்தார்.
“ஆந்திரா-தமிழ்நாடு பிரிவினை என்பது 1921 இலேயே முடிந்து விட்டது.
அதனுடைய எல்லைகளும் அப்போதே தீர்ந்துபோய்விட்டன.
இன்றைக்கு 30வருடங்களாக அனுபோக பாத்தியதைகளும் ஏற்பட்டுவிட்டன. இந்த 30
வருடங்களாக எல்லையிலேயே தமிழனோ தெலுங்கனோ காங்கிரசு அனுபோகத்தை
எதிர்த்தவர்களும் இல்லை. யாராவது எதிர்த்தார்கள் என்றால் காரியம்
நடப்பதற்கு முட்டுக்கட்டை போடவேண்டும் எனபவர்கள் எதிர்த்தார்களே தவிர
மாற்ற வேண்டும் என்பவர்கள் எதிர்க்கவே இல்லை. தமிழர்களில்தான் ஆகட்டும்.
இன்றைய தினம் தமிழ்நாடு எல்லைக்குப் போராடுகிறோம் என்று வருகிறார்களே,
வீரர்கள், இவர்கள் இந்த 20,30 வருடங்களாக என்ன செய்தார்கள்? இன்றைய தினம்
சிலர் தங்கள் விளம்பரத்திற்காக-பிழைப்புக்காகத்-தவிர, “குமரி முதல்
வேங்கடம் வரை” என்கிற அறிவு இன்றைக்கு வருவானேன்?” (பெரியார் ஈ.வெ.ரா.
சிந்தனைகள், தொகுதி-2, பக்கம் 723, 724)
காங்கிரசுக் கட்சி தனது நிருவாக வசதிக்காகப் பிரித்த பகுதிகளை வைத்தே
எல்லைப் பிரிவினை முடிந்துபோனதாக ஈ.வெ.ரா. கூறுகிறார் வடக்கெல்லைப்
போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து சித்தூர் மாவட்டத்தை ஆந்திரத்திற்கு
விட்டுக்கொடக்கவ
ே ஈ.வெ.ரா. இவ்வாறு குதர்க்கம் பேசினார்.
இந்தியத் துணைக்கண்டம் 1947இல் விடுதலை அடைந்த்து. அதுவரை எந்த ஒரு
மாநிலமும் மொழிவழியாகப் பிரிக்கப்படவில்
லை. அதுவரையில் எந்த மொழியினமும் எல்லைப் பிரிவினையைப் பற்றிய
போராட்டத்தை முன்னெடுக்கவும் இல்லை.
இந்தியத் துணைக் கண்டம் விடுதலை அடைந்த பின்னர்தான் மொழிவழி மாநிலங்கள்
தோன்றின. அதனைத் தொடர்ந்தே எல்லைப் போராட்டங்கள் தொடங்கின.
இங்கே மாமுனிவர் மங்கலங்கிழார் மண் காத்த மாமனிதர் ஆகிறார். ஈ.வெ.ரா.
தமிழர் மண்ணை தெலுங்கருக்கு காட்டிக்கொடுத்த தமிழரின் பகை ஆகிறார். வாழ்க
மாமுனிவர் மங்கலங்கிழார் புகழ்!

வடக்கெல்லை தெலுங்கர் ஆந்திரா வந்தேறி கவேரா மபொசி ம.பொ.சி 
ஈ.வே.ரா மண்மீட்பில் உதவினாரா வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக