வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கப்பலோட்டிய தமிழன்

கப்பலோட்டிய தமிழன்
Post by கார்த்தி on Thu Jan 03, 2013 1:12 pm
கப்பலோட்டிய தமிழன். சிறந்த தமிழ் பற்றாளர் . வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞர், தமிழ் செய்யுள்கள் இயற்றியுள்ளார், கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் உள்ள அனேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும் எழுதியுள்ளார், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு இவர் அளித்த பங்கு அளப்பரியது . எவரும் செய்யத் துணியாத காரியத்தை இவர் செய்து முடித்தார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து நாமே வணிகம் செய்ய வேண்டி ஒரு கப்பலை வாங்க தீர்மானித்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி", இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார். அதன் படி கப்பல் வாங்கி பிரிட்டிஷ் கப்பல்களுக்கு மாற்றாக இதனை இயக்கினார் . வணிக ரீதியாக ஆங்கிலேயே கப்பலை தோற்கடித்தார் .

இவ்வாறு இந்தியத்தை நம்பி அளப்பரிய தொண்டாற்றி ஏமாந்த தமிழர்களுள் இவரும் ஒருவர். இன்று தமிழன் இந்தியத்தால் இழந்தது கொஞ்சம் நஞ்சமில்லை . இன்று அணு உலைப் போராளி உதயகுமாரின் மேல் இந்தியநாடு தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளது . அதே வழக்கு தான் சிதம்பரனார் மீதும் ஆங்கிலேய அரசு பதிவு செய்து அவரை இரட்டை ஆயுள் தண்டனைக்கு உட்படுத்தியது . சிறையில் வைத்து அவரை செக்கு இழுக்க வைத்தது. இன்று இந்தியாவிற்கு எதிராக செயல் பட்டதாக அணு உலை போராளிகள் பலர் மீதும் நாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டாக வழக்கு பதிவு செய்யப் பட்டு வருகிறது . ஆங்கிலேயே ஆட்சியில் நடந்த கொடுமை இன்று தமிழ் மக்களின் மேல் இந்திய நாடு நடத்துகிறது , இதற்கா சிதம்பரனார் போன்ற நல்லவர்கள் உழைத்தார்கள் என்று நினைக்கும் பொது நமக்கு வேதனை தான் மிஞ்சுகிறது . ஆங்கிலேயனை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரத்தை இன்று இந்தியர்களிடம் பறிகொடுத்து விட்டனர் தமிழர்கள். தமிழர்களின் ஒவ்வொரு உரிமைகளும் நாளுக்கு நாள் பறிபோய் கொண்டிருக்கிறது . இப்போது நமக்கு மீண்டும் ஒரு சிதம்பரனார் தேவை . அப்போது தான் தமிழனும் தமிழும் தலை நிமிர்த்து இந்நாட்டில் வாழ முடியும் . வாழ்க கப்பலோட்டிய தமிழனின் புகழ்.



நன்றி http://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472
கார்த்தி
பண்பாளர்


avatar
கார்த்தி
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 237
மதிப்பீடுகள் : 89

View user profile
Back to top Go down

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக