தமிழ்நாடு 1-11-1956
இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றோடு 56 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்நாடும் அப்போது தான் பிற பகுதிகளில் இருந்து மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் சில பகுதிகள் கேரளாவிற்கும் ஆந்திராவிற்கும் கொடுக்கப்பட்டது . அதே போல் கன்னியாகுமரி, சென்னை போன்ற பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சென்னை பட்டினமாக இருந்த தமிழ் நாடு பின்னர் தான் தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணா நிலை போராட்டத்திற்கு பின் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதே தமிழ்நாடு என்ற பெயர் சூட்டுவதற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது. எனினும் சங்கரலிங்கனாரின் உண்ணா நிலைப் போராட்டம் நடக்கவில்லை எனில் தமிழ்நாட்டிற்கு இப்பெயர் வந்திருக்காது. இந்நாளில் தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்தல் அவசியமாகும்.
தியாகி சங்கரலிங்கனார் :
1956ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி, தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி தன்னுடைய உண்ணாவிரதத்தை தொடங்கினார் தியாகி சங்கரலிங்கனார்.
76 நாட்கள் தொடர்ந்த அந்தப் போராட்டம் அக்டோபர் 13ம் தேதி அவருடைய மரணத்தோடு முடிவுக்கு வந்தது. முன்னாள் காங்கிரசுக்காரரான தியாகி சங்கரலிங்கனார் காங்கிரசை கடுமையாக விமர்சித்தார், அவருடைய உண்ணாவிரதத்திற்கு காங்கிரசுக் கட்சி ஆதரவளிக்கவில்லை, மேலும் அவருடைய உண்ணாவிரத பந்தலருகே பிரியாணி தின்ற எலும்புகளை காங்கிரசுக்காரகள் போட்டார்கள்.
ம.பொ.சி, அண்ணாத்துரை, காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்கள் அவரை உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியிருக்கிறார்கள், ஆனால் அவர் போராட்டத்தில் உறுதியாக இருந்து இறுதியில் உயிர்நீத்தார்.
1968ம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாக கொண்டாடப்பட்ட போது தியாகி சங்கரலிங்கனாரை நினைவு கூர்ந்து நன்றியும் வணக்கமும் தெரிவிக்கப்பட்டதாம், ஆனால் அதற்குப் பிறகு சில தமிழ் தேசிய இயக்கங்களைத் தாண்டி தியாகி சங்கரலிங்கனாரை பற்றி வேறு எந்த கட்சியும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை.
ஆந்திரம் தனி மாநிலமாக உருவெடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட 'பொட்டி ஸ்ரீ ராமுலு'வுக்கு நினைவகம் அமைத்து ஆந்திர அரசாங்கம் பராமரித்துவருகிறதாம், ஆனால் தியாகி சங்கரலிங்கனாருக்கு இங்கு அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை
கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை கர்நாடக மாநிலத்தில் கன்னட நாளாக அனுசரிக்கப்படுகிறது . அரசு விடுமுறையும் கூட. பள்ளிகள் கல்லூரிகள் கன்னட கொடி ஏற்றி கொண்டாடுகிறார்கள். கன்னட நாடு எங்கும் கன்னட கொடி ஏற்றி இந்நாளை நினைவு கூறுகின்றனர் கன்னடர்கள். தங்கள் மொழிக்கான மாநிலம் உருவானதை பெருமையாக கன்னடர்கள் கொண்டாடும் இந்நாளில் , தமிழகத்தில் யாரும் இதை பற்றி பேசுவது கூட இல்லை. தமிழகம் பிறந்த நாளையும் , தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணமான சங்கரலிங்கனார் பற்றியும் தமிழகத்தில் பெரிதும் கவலைப் படுவதாக தெரியவில்லை. தமிழக அரசும் இதை பற்றி ஒரு அறிக்கை கூட வெளியிடுவதில்லை . இனியாகிலும் தமிழ் தேசிய கட்சிகள் இந்நாளை பெரிதாக கொண்டாட முன்வரவேண்டும் . தமிழ் நாட்டிற்கு தமிழ் மொழிக்கான கொடி உருவாகுதல் . வேண்டும் . இந்த நாளில் அனைவரது இல்லங்களிலும் அக்கொடி பறக்க வேண்டும் .
நன்றி
ராஜ்குமார் பழனிசாமி
செயலாளர்
தமிழர் பண்பாட்டு மையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக