வெள்ளி, 21 ஏப்ரல், 2017

தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்? தமிழ் என்பதன் பொருள் சொல் வார்த்தை வேர்ச்சொல் சொல்லாய்வு

தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?
Post by சாமி on Sat Jun 08, 2013 6:12 pm
ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பாராட்டிப் போற்றி வளர்க்கும் உரிமையும் ஆவலும் உடைய தாய்தகப்பன்மார் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள். அந்தப் பெயர் சம்பிரதாயத் துக்காக வைத்த நீண்ட பெயராக இருந்தால், குறுகலான பெயர் ஒன்றை வைத்துத் தாயோ, பாட்டியோ அழைக்கிறாள்.அந்தப் பெயரே ஊரெல்லாம் பரவிப் போகிறது. சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தாலும், வழக்கத்தில் மணி யென்றும் சுப்பு என்றும் அது குறுகிப் போவதைப் பார்க்கிறோம்.

எனவே, குழந்தைக்கு வீட்டில் என்ன பெயர் வழங்குகிறதோ அதுவே நாட்டிலும் வழங்கும். இது தான் இயற்கை. இதை விட்டுவிட்டு, "ஊரில் உள்ளவர்கள் இவனுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அதைத்தான் வீட்டில் வழங்குகிறார்கள்" என்று சொன்னால் அது அவ்வளவு பொருத்தமாகத் தோன்ற வில்லை.

"தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?" என்றால், "தமிழர்கள்" என்றுதானே சொல்லவேண்டும்? "இல்லை இல்லை, வெளியார்கள் வைத்த பேர் மாறி அப்படி ஆகிவிட்டது" என்று சில ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். திராவிடம் என்ற பேரே மாறித் தமிழ் என்று ஆயிற்றாம்!

வடமொழி நூல்களிலும் வேறுமொழி நூல்களிலும் தமிழைத் திராவிடமென்று குறித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு ஆராய்ச்சிக்காரர்கள் யோசித்தார்கள். இந்த ஆராய்ச்சியிலே முதலில் ஈடுபட்டவர்கள் வெள்ளைக்காரர்கள். அநேகமாக இத்தகைய ஆராய்ச்சியில், மரபு தெரியாமல் அவர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைக் குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டு அதன்மேல் கட்டிடங்களைக் கட்டி நிலைநிறுத்தப் பார்ப்பவர்கள் பலர். திராவிடமென்னும் சொல்தான் தமிழ் என்று ஆகியிருக்க வேண்டுமென்று முன்னால் தீர்மானித்துக் கொண்டார்கள். வடமொழி யில் சில இடங்க்ளில் ள என்ற எழுத்தும் ட என்ற எழுத்தும் ஒன்றுக்குப் பதில் ஒன்று வரும். த்ராவிடம் என்பது த்ராவிள்ம் என்று மாறிற்றாம். வ என்பது ம ஆக மாறுவதும் உண்டு. த்ராவிளம் த்ரவிளம் ஆகிப் பிறகு த்ரமிளம் ஆகி, அதன் பிறகு தமிளம் ஆகிவிட்டது. அது பிறகு தமிள் என்றும், அப்பால் தமிழ் என்றும் மாறி வந்து விட்டதாம்!

(கி. வா. ஜகந்நாதன் எழுதியது.)
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்


avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2382
மதிப்பீடுகள் : 1241

View user profile http://arundhtamil.blogspot.in
Back to top Go down


Re: தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?

Post by யினியவன் on Sat Jun 08, 2013 6:28 pm
எவ்வளவு பூ தான் சுத்துவாங்க தமிழர்களின் காதில்?


யினியவன்
தலைமை நடத்துனர்


avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile
Back to top Go down

Re: தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?

Post by மாணிக்கம் நடேசன் on Sat Jun 08, 2013 6:59 pm
எது எப்படியோ, ஆனா தமிழுக்கு நான் பெயர் வக்கிலிங்க, யாரு வச்சதுன்னும் எனக்கு தெரியாது.
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்



மாணிக்கம் நடேசன்

கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4218
மதிப்பீடுகள் : 1217

View user profile
Back to top Go down

Re: தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?

Post by சாமி on Sun Jun 09, 2013 7:39 am
இங்கிலீஷ்காரன் 'ஒற்றைக் கல் மன்று' என்ற பெயர் வாயில் நுழையாமல் 'ஊட்டக்கமந்த்' என்று பேசினான். அப்படியே வழங்கினான். அது பின்னும் மாறி 'உதகமண்டலம்' ஆகிவிட்டது. இது எப்படி வந்தது என்று வெறும் வார்த்தையைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப் புகுந்தார் ஒருவர். "மேகங்க்ள் தவழ்ந்து நீர் நிறைந்த பரப்பு ஆகையால் உதகமண்டலம் என்ற பெயர் வந்தது" என்று முடிவு கட்டினார். இதற்கும் ஒற்றைக்கல் மன்றுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையுணர்ந்தோருக்குத் தெரியும். இதுமாதிரித்தான் இருக்கிறது தமிழென்னும் பெயராராய்ச்சியும்.

"அப்படியானால் தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?" என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்றப் பாஷைகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள்.

பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து.

தமிழ் என்ற பெயர் முதல் முதலில் தமிழ் நாட் டுக்கு வழங்கி யிருக்க வேண்டு மென்று தோன்றுகிறது. பிறகு அங்கே வழங்கும் மொழிக்கும் ஆயிற்று. முதலில் நாட்டுக்குப்பெயர் வைத்து அதைக்கொண்டு மொழிக்கும் பெயர் வைக்கும் மரபை மற்ற நாடுகளில் காண்கிறோம்.மூன்று லிங்கங்களைத் தன்பாற் கொண்டமையால் ஆந்திரதேசத்தைத் திரிலிங்க மென்றார்கள். அது பிறகு தெலுங்கம் ஆயிற்று. அதிலிருந்து அந்நாட்டில் வழங்கும் பாஷைக்குத் தெலுங்கு என்ற பெயர் வந்தது. தமிழ் என்ற சொல்லுக்கே தமிழ் நாடு என்ற பொருள் உண்டு. பழைய நூல்களில் அந்தப் பொருளில் புலவர்கள் வழங்கியிருக்கிறார்கள எப்படி ஆனாலும், தமிழ் என்னும் பெயரைத் தமிழ் நாட்டினரே வைத்து வழங்கி யிருக்கவேண்டுமே யன்றிப் பிறர் சொல்ல, அதையே தமிழர் வழங்கினரென்று சொல்வது முறையன்று.
(தொடரும்)
சாமி
சிறப்புப் பதிவாளர்


avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2382
மதிப்பீடுகள் : 1241

View user profile http://arundhtamil.blogspot.in
Back to top Go down

Re: தமிழென்னும் குழந்தைக்குப் பெயர் வைத்தவர்கள் யார்?

Post by சாமி on Tue Jun 11, 2013 11:03 am
தமிழ் என்ற சொல்லைத் தமிழர்கள் ஆண்டு வந்தார்கள். தமிழ் மொழியில் அவர்களுக்கிருந்த அன்பு அளவற்றது. தங்கள் மொழி இனியது என்று எண் ணிப் பாராட்டி இன்புற்றார்கள். நாளடைவில் தமிழ் என்ற சொல்லுக்கே இனிமை என்ற பொருள் உண்டாயிற்று. "இனிமையும் நீர்மையும் தமிழ்எனல் ஆகும்" என்று பிங்கல நிகண்டில் வருகிறது. இனிமை, ஒழுங்கான இயல்பு இரண்டையும் தமிழ் என்ற சொல் லால் குறிக்கும் வழக்கம் ஏற்பட்டது. பெண்களின் வருணனை வரும் ஓர் இடத்தில் சீவக சிந்தாமணியின் ஆசிரியர், "தமிழ் தழீஇய சாயலவர்" என்று சொல்லுகிறார்."இனிமை பொருந்திய சாயலையுடைய மகளிர்" என்பது அதன்பொருள். கம்பரும் இனிமையென்னும் பொருளில் தமிழ் என்னும் சொல்லை வழங்கியிருக்கிறார்.

இப்படி அருமையாகப் போற்றும் அந்தச் சொல் தமிழர் வைத்த பெயர்தான். தமிழ் என்ற சொல்லில் வரும் ழகரம் மற்றவர்களுக்கு உச்சரிக்க வருவதில்லை. ஆகவே தமிழ் தமிளாகி, த்ரமிளம், த்ரவிடம் என்று பல அவதாரங்களை எடுத்தது என்று சொல்வதுதான் பொருத்தம். கமுகு என்ற தமிழ்ச் சொல் வட மொழியில் ரகரம் பெற்று 'க்ரமுகம்' என்று வழங்கு கிறது. மீனை மீனம் என்றும், தாமரையைத் தாமரஸ மென்றும் வழங்குவதுபோல அம் என்ற பகுதியைப் பின்னே சேர்த்துக் கொண்டார்கள். முன்னும் பின்னும் கூட்டிய இந்த அலங்காரங்களோடு தமிழ், த்ரமிளம் ஆனது வியப்பல்ல.

தொல்காப்பியப் பாயிரத்தில் அதன் ஆசிரியர் தமிழ் நாட்டை, "தமிழ் கூறும் நல்லுலகம்" என்று சொல்கிறார். அப்படிப் பாடியவர் தொல்காப்பியருடைய தோழராகிய பனம்பாரனார் என்பவர். மேலும், "செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்" என்றும் சொல்லுகிறார்.

தொல்காப்பியத்தில் ஒரு வார்த்தையும் மற்றொரு வார்த்தையும் சேர்ந்தால் என்ன என்ன மாறுபாடுகள் உண்டாகும் என்ற செய்தி எழுத்ததிகாரத்தில் வருகிறது. தமிழ் என்னும் சொல்லோடு வேறு சொற்கள் வந்து சேர்ந்தால் எவ்வாறு நிற்கும் என்பதைப் பற்றி ஒரு சூத்திரம் சொல்கிறது.

"தமிழ் என் கிளவியும் அதனோ ரற்றே" என்பது அந்தச் சூத்திரம். தமிழ் என்ற சொல்லுக்குப் பிறகு கூத்து என்ற சொல் வந்தால் தமிழ்க் கூத்து என்று ஆகும். இதற்குரிய விதி இந்தச் சூத்திரம். தமிழர்கள் பேச்சிலும் நூலிலும் வழங்கும் பாஷைக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர். தமிழ் என்ற சொல் மற்ற வார்த்தையோடு சேர்ந்து வழங்கும்போது இப்படி ஆகும் என்று சொல்வதனால், அப்படி ஒரு சொல் அவர் காலத்திலே வழங்கியது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

தொல்காப்பியத்தில் சொல்லைப் பற்றி ஆராயும் பகுதிக்குச் சொல்லதிகாரம் என்று பெயர். இயற்கையாக யாவருக்கும் விளங்கும்படி உள்ள சொற்களை இயற்சொல் என்று அங்கே பிரிக்கிறார். 'இயல்பாகவே விளங்கும் சொல்' என்று சொன்னால், 'யாருக்கு விளங்குவது?' என்ற கேள்வி வரும் அல்லவா? தமிழ் நாட்டில் தமிழ் வழங்கினாலும் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரி தமிழ் வழங்குவதில்லை. சென்னைப் பக்கத்துத் தமிழுக்கும் திருநெல்வேலித் தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும் மதுரைத் தமிழுக்கும் வேறுபாடு உண்டு. சில சொற்கள் யாழ்ப்பாணத்தாருக்கு எளிதில் விளங்கும்; மற்ற நாட்டாருக்கு விளங்கா. 'தெண்டித்தல்' என்ற சொல்லை யாழ்ப்பாணத்துப் பேச்சில் சர்வ சாதாரண மாக வழங்குகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதற்குத் 'தண்டனை தருதல்' என்ற அர்த்தத்தையே கொள்வார்கள். 'முயலுதல்' என்ற பொருளில் அதை யாழ்ப்பாணத்தார் வழங்குகிறார்கள். ஆகையால், எளிய சொல் என்பது இடத்தைப் பொறுத்தது என்று தெரியவரும்.

இதைத் தொல்காப்பியர் உணர்ந்தவர். இயல்பாக விளங்கும் சொல்லாகிய இயற்சொல் இன்னதென்று சொல்ல வருபவர், இன்ன பகுதியில் இயல்பாக வழங்கும் சொல் என்று குறிப்பிடுகிறார். 'இயற் சொற்கள் என்பன, செந்தமிழ் நிலத்தார் வழங்கும் வழக்கத்துக்குப் பொருந்தித் தம் பொருளிலிருந்து மாறாமல் நடப்பவை' என்று சொல்லுகிறார். அங்கே தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய செந்தமிழ் நிலத்தைக் குறிக்கிறார். மதுரையை நடுவாகக் கொண்ட பாண்டி நாட்டுப் பகுதியைச் செந்தமிழ் நாடென்று முன்பு வழங்கி வந்தனர். "செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி" என்று வருகிறது சூத்திரம். அங்கே தமிழ் என்ற வார்த்தையை ஆண்டிருக்கிறார்.

தொல்காப்பியருக்குப் பின் எழுந்த நூல்களில் தமிழ் என்ற பெயர் வந்ததற்குக் கணக்கே இல்லை. இப்படி நூல்களில் தமிழ் என்ற சொல்லாட்சி பல விடங்களில் வரும்போது "தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே" என்று சொல்வதுதானே நியாயம்?

(கி.வா.ஜ எழுதியக் கட்டுரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக