வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கலைச்சொல்லாக்கம் கலைச்சொல் கலைச்சொற்கள் நவீன தமிழாக்கம்

கலைச் சொல்லாக்கம் தளத்தில் பார்த்தது
Post by ராஜு சரவணன் on Fri Jun 14, 2013 7:29 pm
கலைச் சொல்லாக்கம் செய்யும் போது அந்நியச் சொல்லை அப்படியே மொழிபெயர்க்காமல் அதன் பொருளுடன் இயைந்து வரும் தமிழ் சொற்களைக் கையாளுதல் சிறப்பு.

இரண்டாவது, கலைச்சொற்கள் எளிமையாகவும், சின்னதாகவும் இருந்தால் நிற்கும்.

உதாரணமாக, கணினிப் பயன்பாட்டிற்கு வந்த சமயம் சுஜாதா எழுதினார் "கணிப்பொறி". இது ஏதோ 'எலிப்பொறி' என்று மிரளவேண்டாம் என்றும் அவருக்கேயுரிய எள்ளலுடன் அறிமுகப்படுத்தினார். ஆனால், நண்பர் பழனியப்பன் எடுத்துக்காட்டியவாறு, தமிழ்.நெட்டில் புழகத்திற்கு வந்த கணினி என்ற சொல் இன்று நின்று விட்டது.

World Wide Web, Internet..இதை எப்படி எளிதாக தமிழில் சொல்வது என்று நாங்கள் ஆலோசித்த காலங்களில் மலேசிய நண்பர் ராஜ்குமார் அறிமுகப்படுத்திய "இணையம்" என்ற சொல் பயனுக்கு வந்தது. அப்போது தமிழ்.வலை எல்லோரையும் இணைத்துக் கொண்டு இருந்தது!! எனவே பாலாப்பிள்ளை தமிழ்.வலை என்பதை "தமிழ் இணையம்" என்று குறிப்பிட்டு வந்தார். அதுவே இன்று இண்டர்நெட் என்பதற்கான தமிழ் சொல்லாகப் பயன்படுகிறது. உண்மையில் யோசித்தால் இண்டர்=உள், நெட்=வலை எனவே அது உள்வலை (ஏதோ எலிவலை என யோசிக்க வேண்டாம். வாழ்க சுஜாதா :-) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். நல்ல வேளை அப்படி நடக்கவில்லை.

இதே சாஃப்ட்வேர் என்பதை மெல்லியம் என்றும் ஹார்டுவேர் என்பதை வல்லியம் என்றும் அழைகின்றனர். இன்றளவும் இவ்வார்த்தைகள்தான் எனக்கு ருசிக்கின்றன.

நம்மவர், வெள்ளையன் மவுஸ் என்றால் உடனே 'எலி' என்று பொழிபெயர்க்கின்றனர். எலியைக் கையில் பிடித்து நகர்த்துவது தமிழ் அழகியலுக்கு ஏற்றுவராதது. ஆயின் எலி 'சுட்டி'யான பிராணி. அது ஒத்துவரும் :-)

அதைக் 'கிளிக்' செய், இதை 'கிளிக்' செய் என்கிறார்கள். ரொம்ப நேரம் கிளிக் செய்தால் கையைச் சொடுக்க வேண்டியிருக்கிறது :-)

கலைச்சொல்லை ஒரு குழு செந்தரமாக்குவதால் மட்டும் அச்சொல் நிற்பதில்லை. இணையம் என்ற சொல்லை உத்தமம் செந்தரமாக்கவில்லை. ஆயின் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.

ஒரு சொல் எவ்வளவிற்கு எவ்வளவு கண்ணில் படுகிறதோ அப்போது நிற்கிறது. அச்சொல், எளிமையாக, ஈர்ப்புடையதாக, சொல்லத்தக்கதாக (பலருக்கு கணிப்பொறி என்று சொல்வது எளிது, ஆயின் கணினி எனும் போது கணிணி என்றே சொல்கின்றனர். பத்மா என்பதை பலர் Badma என்று பலுப்பது போல) இருப்பது நலம்.

நன்றி கூகிள்

http://kalaisol.blogspot.in/2013/11/blog-post.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக