சனி, 15 ஏப்ரல், 2017

இளவட்டக்கல் தூக்கும் முறை திருமணம்

இளவட்டக்கல்

Post by singai on Tue Aug 02, 2016 1:31 am


சென்ற நூற்றாண்டுகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில், குறிப்பாகப் பாண்டி நாட்டில் இந்த இளவட்டக் கல்லை தூக்கிச்சுமக்கும் வீரவிளையாட்டு நடப்பதுண்டு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே தம் பெண்ணை மணமுடித்துத் தருவதாக மறவர் குலத்தில் ஒரு வழக்கமுண்டு. இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்துபோய் விட்டாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லைச் சுமக்கும் போட்டி நடத்தப்படுகிறது. வென்றவர்களுக்குப் பரிசுகள் உண்டு. (பெண் கொடுப்பதில்லை)

இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 100 கிலோ எடைகொண்டதாகவும். முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக் கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இளவட்டக்கல்வைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு.
முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து இலேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி, பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி, பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் அடுத்துக் கல்லோடு கோயிலை வலம்வருவது குளத்தை வலம்வருவது எனச் சாதனைகளைத் தொடரலாம்.

புதுமாப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டிப் பணியாரம் செய்துகொடுத்து அவரை இளவட்டக்கல்லைத் தூக்கச் சொல்லும் பழக்கம் முன்னர் நடைமுறையில் இருந்ததாம். தமிழரின் உடல்பலத்திற்கும் வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை நாம் காணலாம்.
நன்றி- முனைவர் இளங்கோ.



singai
பண்பாளர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 119

View user profile

Re: இளவட்டக்கல்

Post by யினியவன் on Tue Aug 02, 2016 12:48 pm
காணாமல் போனதற்கு வருந்துவதா? இல்லை மகிழ்வதா?

இன்னிக்கு இது இருந்தா நாங்கல்லாம் கல்யாணம் ஆகாமலே முதுமைக்கல்லா உக்காந்திருப்போமே புன்னகை


யினியவன்
தலைமை நடத்துனர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8363

View user profile

Re: இளவட்டக்கல்

Post by பாலாஜி on Tue Aug 02, 2016 12:59 pm
அப்பொழுது தமிழனது உணவும் சுற்றமும் இயற்கை யால் ஆனது ஆதனால் அவன் இளவட்டக்கல்லை தூக்கும் வலிமை பெற்று இருந்தான் .. ஆனால் இப்போ


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
தலைமை நடத்துனர்


avatar

இணையாநிலை

பதிவுகள் : 19700
மதிப்பீடுகள் : 3887

View user profile http://varththagam.lifeme.net/

Re: இளவட்டக்கல்

Post by ayyasamy ram on Tue Aug 02, 2016 2:09 pm

-
"கல்லைத் தூக்கு கருப்பட்டி தாறேன்'...
இந்த பாடல் நினைவிருக்கிறதா? சிறுவயதில் தட்டானைப்
பிடித்து அதன் வாலில் நூலை கட்டி, தரையில் சிறு கல்லை
வைத்து, "கல்லைத் தூக்கு கருப்பட்டி தாறேன்' என
பாடியிருப்போம்.

தட்டானும் கல்லைத் தூக்கும். ஆனால் யாரும் கருப்பட்டி
தரமாட்டார்கள். "ஏய் சொன்னேன்ல...' என, உற்சாகமாக
துள்ளி மகிழ்ந்தனர், அந்தக்கால சிறுவர்கள்.
--
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


avatar

நிகழ்நிலை

பதிவுகள் : 27865
மதிப்பீடுகள் : 7105

View user profile

Re: இளவட்டக்கல்

Post by ayyasamy ram on Tue Aug 02, 2016 2:18 pm
எப்படித் தூக்குவது.. ?

1. முதலில் குத்த வைத்தது போல் கல்லோடு சேர்ந்து
உட்கார்ந்து கொண்டு அதனைச் சுற்றி மாலையாகப் பிடித்து
உங்கள் கைகளுக்குள் வைத்து உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டும்.

2.கைகளைக் கல்லைச் சுற்றி அணைத்தபடியே அப்படியே
எழுவதற்கு முயற்சி செய்து , உடல் நிமிர்ந்தவுடன்
ஒ.கே..ஸ்டார்ட்..

3. இப்போது கல்லை மெல்ல தூக்கி வந்து முழங்காலில்
வைத்து சிறிது கால இடைவெளி கிடைக்கும். (ரொம்பக் கவனமா கல் வழுக்கிடாம விரல்கள்ள இருந்து உங்க முழங்கைகள் வரை கல்லை அணைச்சிருக்கணும்.கொஞ்சம் கல் வழுக்கியதுன்னாலும் கை சிராய்ப்பாகிவிடும்.)

4. இப்போது மேலும் மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு சற்றே
வளைந்திருக்கும் உடம்பை மெல்ல நிமிர்த்தி கல்லை உங்கள்
நெஞ்சினில் வைத்து உருட்டி அங்குலம் அங்குலமாக மேலேற்ற
வேண்டும்.( இப்போதைய நிலைதான் படத்திலுள்ளது!)

5. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அந்தப் பக்கம் (இடது
அல்லது வலதுபுறம்) கல்லை உருட்டி ஏற்றி..(நெஞ்செலும்புகள்
மடமடவென்று லேசான சத்தத்தை ஏற்படுத்தக்கூடும்...முதல்
முறையென்றால்)
-
நன்றி- இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக