திங்கள், 24 ஏப்ரல், 2017

சங்ககால நூல்களில் பார்ப்பனர் அகநானூறு ஐங்குறுநூறு ஆசாரக்கோவை சிலம்பு மணிமேகலை பார்ப்பான் சொல் பார்ப்பினி இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

5/8/15
பெறுநர்: எனக்கு
பார்ப்பனர், பார்ப்பான் என்பது மரியாதைக் குறைவான சொல் அன்று, நல்ல
தமிழ்ச்சொல், இலக்கியத்தில் ஆளப்பட்டுள்ள தூய தமிழ்ச் சொல்
என்பதையெல்லாம் விளக்கினேன். திருக்குறள், சிலப்பதிகாரம், குறுந்தொகை
ஆகியவற்றின் வரிகளை எடுத்துக்காட்டிப் பதில் இறுத்தேன். அந்தத்
தோழருக்குத் திருப்தி இல்லை போலும், துணைக் கேள்வி எழுப்பினார்.
இங்கிலீஷ் ஏட்டின் ஆசிரியர் பார்ப்பனர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர் போன்ற
நல்லவர்களே உங்கள் கண்களில் படவில்லையா எனப் படபடத்தார். நான் விளக்கம்
கூறிப் பேசினேன். (விவரம் நாகரிகம் கருதித் தவிர்க்கப்பட்டது).
பார்ப்பனர் என்று திராவிடர் கழகத்தினரும் தீவிர பெரியாரியவாதிகளும்
மட்டுமே விளிக்கின்றனர். மற்றையோர் பிராமணர் எனப் பயன்படுத்துகின்றனர்.
பெரியார் சொன்னார், அவரைப் பிராமணன் என்று சொன்னால் நம்மைச் சூத்திரன்
என்று ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அந்தச் சொல்லுக்கு எதிர்ச் சொல்
இதுதானே! சூத்திரன் என அழைத்துக் கொண்டால், தாசி மகன் உள்பட ஏழு
பெயர்களில் ஒன்றை ஏற்றுக் கொண்டதாகி விடுமே! எனவே தவிர்க்கிறோம். ஆனாலும்
அதனை வசைச் சொல் எனக் கருதிச் சிலர் கோபப்பட்டனர். இன்னமும்
கோபப்படுகின்றனர். சில நாள்களுக்கு முன் சீரங்கத்தில்கூட 23 பேர் கொண்ட
மாபெரும் மக்கள் திரள் முன்பு நின்று பேசிய பேச்சாளர் கூடப் பேசினாராம்.
சீரங்கம் அல்லவா? பேச்சு தடை இல்லாமல் அவர்கள் பேசலாமே! அதனால்!
ஆனால் உண்மை என்ன?
கற்றோய்த் துடுத்துப் படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப
நிற்போர் எனப் பாடுகிறது முல்லைப் பாட்டு.
அறுவகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும் என விளக்குகிறது தொல்காப்பியம்.
ஆறுவகையான பார்ப்பனர் யார் என்பதை விளக்குகிறது நம்பியகப் பொருள் (பாடல்
213) தலைவன், தலைவி, பார்ப்பான், பாங்கன், பாங்கி, செவிலியென்றீங்
கிங்கறுவரும் சாற்றிய களவில் கூற்றிற் குரியர் என்கிறது பாடல் வரிகள்.
ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல் (தனக்காக), வேள்வி செய்தல்(பிறர்க்காக)
ஈதல், ஏற்றல் எனும் ஆறு செயல்களைப் புரிவோர் இவர்கள் எனப் பதிற்றுப்
பத்து கூறுகிறது.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கின் நன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
என்று குறுந்தொகை (பாடல் 156) பாடுகிறது.
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்
அருமறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
நெருநல் வேள்வி நீ செயல் வேண்டும்
என்று ஒலிக்கிறது சிலப்பதிகாரம்.
பார்ப்பினி எனப் பார்ப்பனப் பெண்ணைஅழைப்பதை பாசண்டன் யான் பார்ப்பினி
தன்மேல் என்று சிலப்பதிகாரமே காட்டுகிறது.
மாபெரும் பாத்திரம் பார்ப்பினி சாவி
கப்புடைக் கழித்து வருவோன் என்று இரட்டைக் காப்பியத்தில் மற்றொன்றான
மணிமேகலை கூறுகிறது.
பார்ப்பார் தவறே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தோர் இளையார் பசுப்பெண்டிர்
என்று ஆசாரக்கோவை பலவீனமானவர்களைப் பட்டியல் போடுகிறது.
பார்ப்பார் மறை ஓதுக என்றும் பார்ப்பனக் குறுமகன் போலத்தாமும் என்றும்
அய்ங்குறுநூறு கூறுகிறது.
வேள்விப் பாகம் உண்ட பைங்கப் பார்ப்பான் என்று அவிர்பாகம் உண்ட அய்யரைக்
குறிப்பது பரிபாடல்.
திருந்துகேளாய் முழுதிர்தமுது பார்ப்பான் அஞ்சின முதுபார்ப்பான் என்று
கலித்தொகை வருணிக்கிறது.
நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்கார் என்று நைச்சியமாகப்
பார்ப்பான் பேசியதைப் புறநானூறு (பாடல் 43) காட்டுகிறது.
வேளாப் பார்ப்பான் வாவரந்துமித்த என அகநானூறு பேசுகிறது.
மாலதியும் பார்ப்பானொடு, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, பார்ப்பன
வாகை குடியேற்புற என்பனவெல்லாம் சிலம்புப் பரல்கள். படுபொருள் வவ்விய
பார்ப்பான் இவன் என இடுசிறை கோட்டத்து இட்டார் என்று கூறுவதும்
சிலப்பதிகாரம் தான்!
இலக்கியச் சான்றுகளை இன்னும் ஏராளம் காட்டலாம். என்றாலும், அவாள்
திட்டுகிறோம் என்றே நினைத்து நடந்து கொள்கிறார்கள். இதற்காகவே சிலர்,
பிராமணர் என்று சொல்லாமல் பிராமின் என்று இங்கிலீசில் சொல்லி… அவர்கள்
மனம் நோகாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்!
இலக்கிய அறிவும் ஆய்வுப் பட்டறிவும் நிரம்பப் பெற்ற பேராசிரியர்கள்
பலரின் கருத்து, சங்ககாலம் தொடங்கி இன்றுவரை பொருள் மாறாமல் நின்று
நிலவிடும் சொற்கள் பரதவர் என்பதும் பார்ப்பனர் என்பதும் மட்டுமே
என்கின்றனர். கடலோரத்தில் வாழ்ந்துகொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு
வருவோர் பரதவர் என்றே இன்றுவரை குறிக்கப் பெறுவதைப் போலவே பார்ப்பனர்
என்பதும் ஈராயிரம் ஆண்டாக நிலைபெற்றுள்ளது என்பதே பெருமைக்குரியதாக
அல்லவா கருதப்பட வேண்டும்! பார்ப்பனரின் வாதூல கோத்ரம் வாதூளி என்றும்
பாரத்வாஜ கோத்ரம் நெடும்பாரதாயன் எனும் பெயராலும் கவுண்டில்ய கோத்ரம்
கவுணியன் எனும் பெயராலும் கவுதம கோத்ரம் கோதமன் என்ற பெயராலும்
இலக்கியங்களில் காணப்படுகிறதே!
பசுமாடுகளைக் கயிற்றால் பிணைத்து ஓரணியில் கட்டப்பட்ட நிலைக்குக் கோத்ரம்
என்று வடமொழியில் கூறுவர். பசுக்களை மேய்த்துக் கொண்டு இங்கே
நுழைந்தவர்கள் இன்றளவும் அதையே தங்களுக்கான அடையாளமாக _ இனக் குழுப்
பெயர்களாக வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அதைத் தமிழ் இலக்கியம் பொத்தி
வைத்துத் தருகிறது. அவை மட்டும் இனிக்கின்றன, பார்ப்பான் மட்டும்
கசக்கிறது என்றால்… ஏன் இந்த இரட்டை நிலை?
வேள்வி செய்யாத பார்ப்பனர்களும் இருந்ததை வேளாப் பார்ப்பான் எனும் சொல்
பிரித்துக் காட்டுகிறது. இன்றளவும் அண்ணாவிப் பார்ப்பனர்கள் என்ற பெயரில்
வேதமே படிக்கக் கூடாத பார்ப்பனர்களும் இருக்கிறார்களே! கந்துவட்டித்
தொழில் மட்டுமே செய்யக்கூடிய, செய்ய வேண்டிய கல்லிடைக் குறிச்சிப்
பார்ப்பனர்கள் இருக்கிறார்களே! வேளாப் பார்ப்பான் வாள் அரந்துமிய எனும்
அகநானூற்று வரிகள் (பாடல் 94) சங்கறுத்துப் பிழைத்த பார்ப்பனர்களைக்
குறிப்பிடுகிறதே! சண்டையிடும் அரசர்க்கிடையே தூது சென்ற
பார்ப்பனர்களையும், காதல் வயப்பட்ட தலைவன் தலைவியிடையே தூதுபோன
பார்ப்பனர்களையும் தூதொய் பார்ப்பான் என்று அகநானூறு (பாடல் 337)
அறிமுகப்படுத்துகிறதே! (படிக்க: பண்பாட்டு அசைவுகள் -_ பேரா.தொ.பரமசிவன்)
வேதத்தைப் பார்ப்பதால், பார்ப்பான் என வந்தது எனச் சில பேராசிரியர்களின்
கூற்று. பார்ப்பும் பறழும் பறப்பவற்றில் இளமை என்கிறது தொல்காப்பியம்.
எனவே பார்ப்பார் எனும் சொல்லுக்கு இளையர் என்பதே பொருள் என்கிறார் பேரா.
தொ.பரமசிவன்.
அவரே எழுப்புகிறார், பார்ப்பார் யாருக்கு இளையர்? அவருக்கு மூத்தவர் யார்?
விடையை இலக்கியத்தில் தேட இயலாது. கள ஆய்வுதான் விடைகாண துணை செய்யும்
என்கிறார், அவரே! தென் மாவட்டங்களில் வழங்கும் சொல்லடையைச் சுட்டிக்
காட்டுகிறார்: பார்ப்பானுக்கு மூப்பு பறையன், கேட்பார் இல்லாமல்
கீழ்ச்சாதி ஆனான் எனும் சொல்லடை ஒரு காலத்தில் பறையர் பெற்றிருந்த சமூக
உயர்வுக்கான சான்றாகும் என்கிறார். (அதே நூல் பக்கம் 180) பறை எனும்
இசைக்கருவியை இசைத்ததால் பறையர் எனும் பெயரைப் பெற்ற மக்கள்
பார்ப்பனர்க்கு மூத்தவராக இருந்த நிலை மாறி, இன்றைக்கு இழி நிலைக்குத்
தள்ளப்பட்டது எவ்வாறு?
வரலாறு எங்காவது இதுபற்றிப் பேசுகிறதா? சிறு குறிப்பாவது உள்ளதா? வரலாறு
என்பதே, ஆள்வோரின் வரலாறாக, அரசுகளின் வரலாறாக, அரசர்களின் வரலாறாக
மட்டும் தானே உள்ளது? சாம்ராஜ்யங்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்தான்
வரலாறாக உள்ளது என்பதுதான் மேலைநாட்டுப் பேராசிரியர்களின் கருத்து.
எல்லாமே வர்க்கப் போராட்டங்களின் வரலாறு எனக் கூறிவிட்டார் கார்ல்
மார்க்ஸ்.
அப்படியானால் சாமான்யர்களின் வரலாறு எங்கே தெரியும்? அவர்களின்
நினைவுகளில் தங்கி, தேங்கி சடங்குகளாக, கதைகளாக, புராணங்களாக,
இதிகாசங்களாகத் தெரிய வருகின்றன. புராண, இதிகாசங்கள் என்பவை யெல்லாமே
புனைவுகளாகவும் புளுகுகளாகவும் உள்ளன. தன்னல ஆதிக்கச் சக்திகள் இவற்றை
ஆக்ரமித்துத் தங்களின் வக்கிரத்தைத் திணித்துப் புகுத்திப் பரப்பி வெற்றி
பெற்றன. அவற்றை வரலாறு என்று மதவாதிகள் கூறிக் கொண்டிருக்கின்றனர்
இந்தியாவில்!
இலியது, ஒடிசி போன்ற மேலைநாட்டு இதிகாசங்கள் வரலாறு எனும் அந்தஸ்தைப்
பெறவில்லை. அந்நாட்டில் அறிவுள்ளோர் அதிகம். அதனால், நேர்மாறான நிலை
இங்கு. ராமன் பெயரால் அரசியலே நடக்கிறது 100 ஆண்டாக. கிருஷ்ணன் ஆண்ட
துவாரகா எங்கே என்று கடலுக்குள் போய் ஆய்வு நடத்த குஜராத் அரசு திட்டம்
போடுகிறது. சரசுவதி நதி எங்கே என, கோடிக்கணக்கில் கொட்டி வீணாக்கிய
வாஜ்பேயி போல! இதிகாசம் என்றால், நடந்த வரலாறு என்று அரும்பத உரை
தருகிறது பாபநாசத்துப் பத்தாம் வகுப்புப் பெயில் பார்ப்பனன் சிறீ சிறீ
ரவிசங்கர் எனும் பார்ப்பனர்!
மக்கள் சமூகத்தின் கடந்தகால வாழ்வு அனுபவம், முரண்கள், சிந்தனைப் போக்கு,
போன்ற பலவற்றைத் தொன்மங்களில்தான் (MYTH) கட்டி வைத்துள்ளது. உலகச்
சமுதாயம் முழுமையுமே இம்மாதிரித் தொன்மங்களைக் கொண்டுள்ளது. பிரளயம்,
உலகம் அழிவு, மீளவும் உயிர்ப்பு ஏற்பட்டமை பற்றிய யூத, கிறித்துவ
இனத்தாரின் தொன்மங்கள் போலவே (இந்திய) இந்து இனத்தாரின் தொன்மங்களும்
அமைந்துள்ளதை ஒப்பு நோக்கலாம்.
அப்படிப்பட்ட தொன்மங்கள், பார்ப்பனர் (பிரமனின்) படைப்புக் கடவுளின்
வாயிலிருந்து வந்ததாகக் கூறும். அத்தோடு நிறுத்தி அந்தச் சமூக உயர்வைக்
கூறிப் பெருமைப்படுவதோடு நில்லாமல், பிற சமூகத்தவரைக் கீழ்ப்படியில்
நிறுத்திக் கீழானவர்களாக்கும் தீய எண்ணத் தொன்மமாகவும் அமைந்துள்ளது நேர்
மாறாக கேரளாவில் உள்ள அடித்தள மக்களின் தொன்மம், பறையர்களை மூத்த
பிராமணன் என்று கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக