திங்கள், 24 ஏப்ரல், 2017

ஐயர் அந்தணர் பார்ப்பனர் ஒரே பொருள் சொல் பார்ப்பான் பார்ப்பார் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

5/8/15
பெறுநர்: எனக்கு
ஆவும் ஆனியற் *பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் (புறம்-9)

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்
*பார்ப்பார் ஒழிந்தார், படிவு
 'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று,
*அந்தணர் தோயலர், ஆறு
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'
*ஐயர், வாய்பூசுறார் ஆறு
( -பாரிபாடல்-திரட்டு 2:50-63)

 புறநானூறு 166 ல் பாடப்பட்டோன்
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் *பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் ஆவான்.

 ”அறு வகைப் பட்ட *பார்ப்பனப் பக்கமும்
ஐ வகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர்
பக்கமும்
மறு இல் செய்தி மூ வகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன்
தேயமும்
நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்
பால் அறி மரபின் பொருநர் கண்ணும்
அனை நிலை வகையொடு ஆங்கு
எழு வகையான்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்”
என்கிறார் தொல்காப்பியர்.
(புறத்திணை இயல் 74)

பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணம் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பின் *பார்ப்பான் முதலா
     முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத்
     தான்னெறி மரபின் கற்பிற்கு உரியர்.
(தொல்காப்பியம் செய்யுளியல் 182)

 பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி சீர்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவு இயல் மரபின் அறு வகையோரும் களவின் கிளவிக்கு உரியர் என்ப
( தொல்காப்பியம் செய்யுளியல் 189)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் *பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். (குறள் 134)

'ஈப் பாய் அடு நறாக் கொண்டது, இவ் யாறு' எனப்
*பார்ப்பார் ஒழிந்தார், படிவு
 'மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று' என்று,
*அந்தணர் தோயலர், ஆறு
'வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென'
*ஐயர், வாய்பூசுறார் ஆறு
( -பாரிபாடல்-திரட்டு 2:50-63)

மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் *பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – 30
(Paaaripādal, Chapter 5)

*பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.
(குறுந்தொகை 156)

மூன்று கடன்கழித்த *பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார்.
(திரிகடுகம் 34)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக