டெசோ மாநாட்டு தீர்மான அறிக்கை மன்மோகன் சிங்கிடம் .
பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று புது டெல்லியில் சந்தித்த திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தனர்.
தி.மு.க. பாராளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்களான எஸ். எஸ். பழனிமாணிக்கம்,செ.காந்திசெல்வன், திருச்சி சிவா, கனிமொழி, தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன், ஆதி.சங்கர், இ.ஜி.சுகவனம், எஸ்.ஆர். ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன், அப்துல் ரஹ்மான், டி.எம்.செல்வகணபதி, வசந்தி ஸ்டேன்லி, ச. தங்கவேலு, ஆகியோர், கடந்த 12.8.2012 டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் – தீர்மானங்களையும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
பிரதமர், இக்கடிதத்தை படித்துவிட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதி அளித்தார். அதோடு, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது என்பதை நினைவுகூர்ந்த பிரதமர், இக்கடிதம் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினார். மேலும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்சினையில், இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், கருணாநிதி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களும், வெளியில் வாழும் தமிழர்களும், அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். பல குடும்பங்கள் மரத்துக்கு அடியில் வாழ்கின்றனர். தமிழர்கள் வேலை வாய்ப்பின்றி அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொள்ள இயலாமல் தவிக்கின்றனர். அங்குள்ள சலூன் கடைகள் கூட இராணுவ வசமாகியுள்ளது. தமிழர்கள் வைத்திருந்த பெட்டிக் கடைகள் கூட தற்போது ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளையும், வீடுகளையும் பெரும்பாலும் இராணுவ வீரர்கள் ஆக்ரமித்துவிட்டனர். அவற்றை தமிழர்கள் கேட்டாலும் அதனை விட்டு வெளியேற இராணுவத்தினர் மறுக்கின்றனர்.
முகாம்களில் இருந்து வெளியே வந்துள்ள தமிழ் மக்கள், கிராமத்துக்குள்ளேயும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளனர். எனவே இதுபோன்ற அவலநிலைக் குள்ளாகியிருக்கும் தமிழர்களை காக்க வேண்டியது நமது கடமையாகிறது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.நன்றி_ தென்றல் காற்று

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக