வியாழன், 13 ஏப்ரல், 2017

வ.உ.சி புகழ் பரப்பி மபொசி

aathi tamil aathi1956@gmail.com

6/9/15
பெறுநர்: எனக்கு
https://m.facebook.com/photo.php?fbid=832551190193096&id=100003146695085&set=a.120522324729323.22331.100003146695085&refid=17&_ft_=top_level_post_id.607650312671959%3Athid.100002809860739%3A306061129499414%3A4%3A0%3A1443682799%3A5822666380100213236
Kathir Nilavan
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள்
5.9.1872
இந்திய விடுதலைப் போரில் திலகருக்குப் பின் தலைமையேற்றவர் காந்தியார்.
அவர் காலத்தில் மறக்கடிக்கடிக்கப்பட்ட ஒரு தலைவர் தான் வ.உ.சிதம்பரனார்.
பேராயக்கட்சி வரலாறு எழுதிய தெலுங்குப் பிராமணர் பட்டாபி சீதாராமையா
வ.உ.சி.யின் பெயரை இருட்டடிப்பு செய்தார். தமிழ்நாடு பேராயக்கட்சியும்
கூட வ.உ.சி.க்கு இரண்டகமே செய்தது. அப்போதைய தமிழ்நாடு பேராயக்கட்சித்
தலைவர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரும், சென்னை மாவட்டத் தலைவர் சத்திய
மூர்த்தி அய்யரும் வ.உ.சி.க்கு சிலை எழுப்பும் ம.பொ.சி.யின் முயற்சிக்கு
தடைக்கல்லாக நின்றனர்.
வெறும் "தேசப்பக்தர் சிதம்பரம் பிள்ளை" என்று அறியப்பட்ட ஒரு தலைவரை
"கப்பலோட்டிய தமிழன்" என்று தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அறிமுகம்
செய்து எல்லாத் தமிழர்களின் உள்ளங்களிலும் நீக்கமற நிறையச் செய்தவர்
'சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம் ஆவார்.
சிதம்பரனார் குறித்து முதன் முதலாக "கப்பலோட்டிய தமிழன்" என்ற பெயரில்
நூலோன்றை எழுதி வெளியிட்டவர் ம.பொ.சி. அந்த நூலின் முன்னுரையில் ம.பொ.சி.
கூறியவற்றை பின்வருமாறு அறியத் தருகிறோம்.
"வல்லாளன் சிதம்பரனார் சிறையிற்பட்ட வருத்தமெலாம் விரித்துரைக்கில் வாய்விட்டேங்கி
கல்லான மனத்தவரும் கண்ணீர் கொட்டக் கனல்பட்ட வெண்ணெயெனக் கரைவார் இன்றும்"
-என நாமக்கல் கவிஞர் வருணித்திருப்பது மிகையன்று. சிதம்பரனார் பிறவித்
தலைவர். மதி படைத்த தலைவர் பலருண்டு இந்த நாளில் ஆனால், அவரெல்லாம்
மற்றவர் இன்னல் கண்டு உருகும் மனம் படைத்தாரில்லை. சிதம்பரனாரோ மதியும்
மனமும் ஒருங்கே படைத்த மாபெருந்தலைவர். எனினும் சிதம்பரனார் செய்த
புரட்சிச் செயல் நம் நாட்டவரால் நன்கு போற்றப்பட வில்லை.
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு அனுமதியுடன் டாக்டர் பட்டாபி
வெளியிட்டுள்ள காங்கிரஸ் வரலாற்றில் செளரிசாரா சத்தியாக்கிரகம்,
நாகபுரிக் கொடிப்போர், பர்டோலி வரிகொடா இயக்கம் ஆகிய சிறு சிறு
இயக்கங்களைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக வரையப்பட்டுள்ளன; ஆனால்,
சிதம்பரனாரின் சீரிய புரட்சியைப் பற்றி ஒரு வரி கூட இல்லை; ஏன் ஒரு
வார்த்தை கூட இல்லை.
சிதம்பரனாரின் புகழ்மிக்க வரலாறு முற்றும் மறைந்து விடுமோ என்று நான்
அஞ்சிய காலமும் ஒன்றுண்டு. அவர் இறந்த செய்தி கேட்டு, தூத்துக்குடி தவிர
வேறு எங்கும் மக்கள் துக்கம் கொண்டாட வில்லை. சிதம்பரனார் மறைந்து நான்கு
ஆண்டுகள் வரை நாட்டில் அவருக்கு எத்தகைய ஞாபகார்த்த விழாக்களும் நடைபெற
வில்லை.
சிதம்பரனாருக்கு சிலையெடுத்து வணங்குவது பற்றியும் தேசபக்தர்கள்
சிந்திக்க வில்லை. காரணம், வஞ்சம் அல்ல; வ.உ.சி.யின் வரலாற்றை அறியாததே
யாகும்.
சிதம்பரனார், 1936ஆம் ஆண்டுவரை வாழ்ந்திருந்தார் என்றாலும், அவர் நடத்திய
அரசியல் புரட்சி -ஏகாதிபத்திய கப்பலுக்கு எதிர்க்கப்பலோட்டிய செயல்-
1906ல் தொடங்கி 1908க்குள் முடிந்து விட்டது.
1908ல் சிறைபுகுந்து 1912ல் வ.உ.சிதம்பரனார் விடுதலையானார். பின்னர் அவர்
தொழிலாளர் இயக்கங்களில் பங்கு கொள்ளலானார். அதற்குள் காந்திய சகாப்தம்
தோன்றி விட்டது. வ.உ.சிக்கு காந்தியத்தில் நம்பிக்கை இல்லை.
எனவே, 1920ஆம் ஆண்டில் அவ்வீரர் காங்கிரசிலிருந்து விலகிக் கொண்டு
விட்டார். அது முதற்கொண்டு 1936இல் இறக்கும் வரை அதாவது 17 ஆண்டுகள்
அப்பெரியார் அரசியல் இயக்கங்களில் ஈடுபடாது இருந்தார். ஆகவே, 1920க்குப்
பிறகு அரசியலில் ஈடுபட்ட எவரும் வ.உ.சி.யின் வீரப்புரட்சியை, கப்பலோட்டிய
விழுமிய செயலை அறிந்து கொள்ள வழி இல்லை.
வ.உ.சி. பல ஆண்டுகள் தொடர்ந்து மேடைகளில் தோன்றாதிருந்த காரணத்தால் அவரது
வீரத் திருவுருவத்தைக் கூட மிகப் பெரும்பாலான அரசியல்வாதிகளும்
பொதுமக்களும் பார்த்து மகிழ வாய்ப்பில்லை. இவை தான் மக்கள் வ.உ.சி.யை.
மறந்ததற்கான காரணங்கள்.
இந்நிலையில் சிதம்பரனாரின் வீரப்புரட்சியை நாட்டில் பரப்ப வேண்டுமென்று
யான் எண்ணினேன். 1937ம் ஆண்டு நான் சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு
செயலாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது சிதம்பரனாரைப் பற்றி என்
சிந்தையில் இருந்த திட்டத்தை செயலாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. சென்னை
ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் பெயரால் இராயப் பேட்டை காங்கிரஸ் நிலத்தில்
1939ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி சிதம்பரனாருக்கு சிலை நாட்டு
விழாவை நடத்தி வைத்தேன்.
சென்னையில் நடந்த சிலை எடுப்பு விழா தேசிய வட்டாரத்தை கண் விழிக்கச்
செய்தது. விழாவையொட்டி தேசியப் பத்திரிக்கைகள் பலவும் வ.உ.சி.யின்
சேவையைப் பாராட்டி எழுதின. ஆனால் சிதம்பரனாரை மறந்த மக்களுக்கு அவருடைய
பெயரை நினைவூட்டு மளவுக்குத்தான் சிலை எடுப்பு விழா பயன்பட்டது.
மற்றபடி அவரது வரலாற்றை அறியச் செய்ய வசதியில்லை. ஏனெனில், அந்நாள் வரை
அவரது வரலாறு நூல் வடிவில் வெளிவர வில்லை. எனவே சிதம்பரனாருக்கு
சிலையெடுத்ததோடு நில்லாமல், அவரது புரட்சி வரலாற்றை புத்தக வடிவில்
வெளியிடுவதையும் எனது கடமையாகக் கொண்டேன். ஆனால் அப்போதைக்கு 30
ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தூத்துக்குடி புரட்சியைப் பற்றிய விபரங்கள்
கிடைப்பது அரிதாக இருந்தது.
சிதம்பரனார் இயற்றிய தனிப்பாடல் திரட்டு, எனது அரசியற் பெருஞ்சொல் முதலிய
நூல்களில் பல சுவையான குறிப்புகள் கிடைத்தன. மற்றும் சிதம்பரனார்
துவக்கிய கப்பல் கம்பெனியின் அமைப்பு, கப்பல்களின் பெயர், அவற்றை வாங்கிய
விதம் வெள்ளைக் கம்பெனியுடன் சுதேசிக் கம்பெனியார் நடத்தியப் போராட்டம்,
வ.உ.சி. மீது நடைபெற்ற இராஜ துரோக சிந்தனை வழக்கு ஆகியவைப் பற்றிய
விபரங்களை 1906 முதல் 1908 வரை வெளிவந்த தினப் பத்திரிகைகளிலிருந்து
சேகரித்துக் கொண்டேன்.
அவையனைத்தையும் தொகுத்து 1944ல் "கப்பலோட்டிய தமிழன்" என்ற பெயரில்
இந்நூலின் முதற் பதிப்பை வெளியிட்டேன். இந்நூல் வெளி வருவதற்கு முன்னர்
வ.உ.சி.யை, "தேசப்பக்தர் சிதம்பரம் பிள்ளை" என்றே அழைப்பது வழக்கம்.
இன்றோ "கப்பலோட்டிய தமிழன்" என்பதே அவருக்கு சிறப்புப் பேராகி விட்டது."
இராசேந்திர சோழனுக்குப் பிறகு கடலில் தமிழர் வீரம் காட்டிப் போர் புரிந்த
வ.உ.சிக்கு வீர வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக