மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம், )
ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும் உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக