இத்தொடர் கட்டுரை பல மொழியியல் ஆராய்ச்சி அறிஞர்களின் தொகுப்பு. அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையின் முடிவில் அவர்களது பெயர்களை வெளியிடுகிறேன். நன்றி!
சமஸ்கிருதத்தின் தாய்மொழி தமிழே!
உலகில் இரண்டே மொழிகள்தாம்....
என்ன வியப்பாய் உள்ளதா?
ஆம் இரண்டே மொழிகள்தான்.
ஒன்று தமிழ்!
மற்றொன்று திரிந்த தமிழ்!
இந்த திரிந்த தமிழில் ஒன்றான சமஸ்கிருதத்தைப்பற்றி சிந்திப்போம்.
முதலில் சமஸ்கிருதம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். அதன் பொருள் என்ன என்று தெரியுமா? நன்றாகச் செய்யப்பட்டது என்று பொருள். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த சமஸ்கிருதம், அதாவது நன்றாகச் செய்யப்பட்டது என்ற மொழியானது, வேறு மொழியை நன்கு ஒத்திட்டுப் பார்த்து நன்றாக செம்மை செய்யப்பட்டது எனப்புரியும்.
செம்மை செய்வதற்கு முன்னால் இந்த மொழிக்கு ஒரு செம்மை செய்யப்படாத மொழி ஒன்று இருக்கவேண்டுமே, அப்போதுதானே செம்மை செய்யமுடியும் என ஒரு கேள்வி நம்மனதில் எழும்.
அந்த மொழிக்குப் 'பிராகிருதம்' என்று பெயர்.
இதன் பொருள் என்ன தெரியுமா?
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக