மர்மமான அரச மானியம்!
by soplangi on Tue Jun 24, 2014 12:42 pm
ஒரு புத்த விஹாரத்தை நல்ல முறையில் பராமரிக்க, சோழ சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த மன்னர் ஒருவர் மானியங்களையும் நிதி ஆதாரங்களையும் அளித்து ஆணையிட்டதை, நெதர்லாந்து (ஹாலந்து டச்சு) நாட்டின் லீடன் பல்கலைக்கழகம் பாதுகாத்து வரும் செப்பேடு அற்புதமாக விவரிக்கிறது. மலாய் பகுதியைச் சேர்ந்த மன்னன் நிர்மாணித்த அந்த புத்த விஹாரம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு.
மன்னர் பிறப்பித்த ஆணையின் சட்ட அம்சங்கள் என்ன, அதை நிறைவேற்றுவதற்கான நிதிப் பொறுப்புகள் எப்படிப்பட்டவை, அரசு நிர்வாகம் அதை எப்படி அமலுக்குக் கொண்டுவந்தது என்பதையெல்லாம் இந்தச் செப்பேடு தெளிவாக விவரிக்கிறது. 11-வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஆணையின்படியான ஒப்பந்தம் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பது நம்முடைய கவனத்தைக் கவருகிறது.
மன்னரின் ஆணைகளையும் கட்டளைகளையும் ஆலயங்களிலும் நினைவுச் சின்னங்களிலும் முதலில் கல்லில் செதுக்கினார்கள். பிறகு பனை ஓலைச் சுவடிகளில் எழுதிவைத்தார்கள். கி.பி. முதலாவது நூற்றாண்டிலிருந்து செப்புத் தகடுகளிலும் பொறிக்கும் வழக்கம் ஏற்பட்டது என்று நம்பப்படுகிறது. ஆனால் பல்லவர் காலத்தில் கி.பி. 4-வது நூற்றாண்டில் இயற்றப்பட்ட செப்பேடுகள்தான் அதிகாரப்பூர்வமாகக் கிடைத்த ஆரம்பகால ஆதாரங்களாகும். வட இந்தியாவிலும் செப்பேடுகள் விரிவாக பயன்படுத்தப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில் கிடைத்த செப்பேடுகள் வரலாற்றைக் கணிக்கவும் விளக்கவும் பெரிதும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இந்த மரபையொட்டி முதலாம் ராஜராஜ சோழன் இந்த மானியத்தை வழங்கியிருக்கிறார். 9-வது நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த தேவபாலா என்ற வங்க மன்னன், சைலேந்திரன் என்ற மன்னன் நாளந்தாவில் கட்டிய புத்த விஹாரத்தைப் பராமரிக்க 5 கிராமங்களிலிருந்து கிடைத்த வருவாயைச் சாசனமாக எழுதிவைத்து பரிபாலித்தார். நாகப்பட்டினத்திலும் ‘சூளாமணிவர்மன்' என்ற பட்டப் பெயரைக் கொண்ட மற்றொரு மன்னர் சைலேந்திரர், புத்த விஹாரத்தைக் கட்டியிருக்கிறார். அதனால் அதை சூளாமணி விஹாரம் என்றே அழைத்தனர்.
யுவான் சுவாங், யீஜிங் போன்ற சீன அறிஞர்களின் பயணக் குறிப்புகளிலும் நினைவுக் குறிப்புகளிலும் இடம் பெறும் சைலேந்திர மன்னர்கள் மலாயா, ஜாவா, சுமத்திரா மற்றும் அதையொட்டிய நீரிணைப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள். அவர்களுடைய முன்னோர்கள் வெகு காலத்துக்கு முன்னரே இந்தியப் பகுதிகளிலிருந்து கடல்கடந்து படை நடத்திச் சென்றவர்கள். கடாரத்தின் மீது (தற்போதைய மலேசியாவின் கெடா) கி.பி. 8-வது நூற்றாண்டிலேயே ஆதிக்கம் செலுத்தியவர்கள். தூரக் கிழக்கு நாடுகளில் அவர்கள்தான் ஸ்ரீ விஜய அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர்கள்.
இந்தோனேசியாவின் போராபுதூர் என்ற இடத்தில் உள்ள அற்புதமான கோயில் இந்த மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான். இந்துக் கோயில்களாகக் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் இறுதியில் புத்த விஹாரங்களானது போல இந்த மன்னர்களும் தொடக்க காலத்தில் இந்துக்களாக இருந்து பிறகு பௌத்தத்தைத் தழுவினர். இவ்வாறாக ஸ்ரீ விஜய பௌத்தர்கள், நாளந்தா பிக்குகள், காஞ்சிபுர சித்தாந்திகள், நாகப்பட்டின சங்கத்தார் ஆகியோரால் பரஸ்பரம் புத்தமதக் கருத்துகளும் பழக்கவழக்கங்களும் மெருகேற்றம் பெற்றன.
லெய்டன் பல்கலைக்கழக செப்பேடுகளில் இவை பற்றிய குறிப்புகளைக் காணலாம். விஜய மன்னர்களும் கடாரம் வென்றவர்களும் மகரம் என்ற விசித்திரமான பிராணியுடன் தொடர்புள்ளவர்கள். மீனின் உடலும் யானையின் தலையும் கொண்ட மகரம் இந்த மன்னர்களின் இலச்சினையாக இருக்கிறது. ஜாவாவின் கட்டிடங்கள் பலவற்றில் இச் சின்னத்தை இன்றும் காணலாம்.
................ 2
- soplangiஇளையநிலா
இணையாநிலை
பதிவுகள் : 979
மதிப்பீடுகள் : 285
விருப்பம்1 விருப்பம்
Re: மர்மமான அரச மானியம்!
by soplangi on Tue Jun 24, 2014 12:44 pm
--- 2 ---
செப்பேடுகள்:
லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள செப்பேடுகளில் 21 பெரியவை, 3 சிறியவை. பெரிய செப்பேடுகள் ராஜேந்திர சோழனால் எழுதப்பெற்றவை. அவற்றில் 5 சம்ஸ்கிருதத்திலும் 16 தமிழிலும் எழுதப்பட்டவை. ராஜராஜ சோழன் வாய்மொழியாக இட்ட உத்தரவுகளை ராஜேந்திர சோழன் நிறைவேற்றியது குறித்து அவற்றில் எழுதப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனால் எழுதப்பட்டவை தமிழ் செப்பேடுகள். நாகப்பட்டினத்தில் உள்ள புத்த விஹாரத்துக்குக் கூடுதல் மானியம் வழங்கப்பட்டது குறித்து அதில் எழுதப்பட்டிருக்கிறது. சிறிய செப்பேடுகளில் ராஜராஜபெரும்பள்ளி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பௌத்தர்களும் ஜைனர்களும் கூடும் இடங்கள் பள்ளி என்று அழைக்கப்படும்.
சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்ட செப்பேடுகளில் மொத்தம் 111 வரிகள் உள்ளன. நல்ல கற்பனை வளத்துடனும் சந்தங்கள், யாப்பிலக்கணங்களுடன் எழுதப்பட்டுள்ள அவை சோழ மன்னர்களின் வம்சப் பெருமைகளையும் போரில் அவர்கள் பெற்ற வெற்றிகளையும், அவர்கள் மேற்கொண்ட படையெடுப்புகளையும் விவரிக்கின்றன.
அன்பில் என்ற இடத்தில் கிடைத்த சுந்தரசோழனின் வம்சம், திருவாலங்காட்டில் கிடைத்த உத்தம சோழன் வம்சம் குறித்த தகவல்களை வரலாற்று மாணவர்கள் ஒப்புநோக்கி ஆராய்ந்துள்ளனர். இந்தச் செப்பேடுகளும் கன்னியாகுமரியில் உள்ள வீரராஜேந்திரர் பற்றிய குறிப்புகளும், லெய்டன் பல்கலைக்கழகச் செப்பேடுகளும் தரும் தகவல்கள் சோழர்காலத்தைப் பற்றித் தெளிவாக அறிய உதவுகின்றன.
கலிங்கத்துப் பரணியும் சோழர்களின் வம்சம் குறித்துப் பேசுகிறது. கோயமுத்தூரைச் சேர்ந்த கே.வி. சுப்பிரமண்யா 1930-களின் மத்தியில் இந்தச் செப்பேடுகள் குறித்த தனது ஆராய்ச்சி முடிவுகளைப் பதிப்பித் திருக்கிறார். அவருடைய நூலிலிருந்து நாம் பல அரிய தகவல்களைப் பெற முடிகிறது.
21 செப்பேடுகளும் வட்டமான செப்பு வளையத்துக்குள் கோக்கப்பட்டு ராஜமுத்திரை இடப்பட்டிருக்கிறது. சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், சம்ஸ்கிருத உரை ஆகியவை அந்த முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழில் 332 வரிகளில் அந்த மானியத்தின் முழு விளக்கமும் வியப்பூட்டும் வகையில் தரப்பட்டிருக்கிறது. 97 வேலி நிலங்களிலிருந்து கிடைக்கும் நெல்லில் 8,943 கலம், 2 துனி, 1 குருணி, 1 நலி இந்த மானியம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. ஆனைமங்கலத்தையொட்டிய 26 கிராமங்களின் பெயர்களையும், அவற்றைக் கணக்கெடுத்த அதிகாரிகளின் பெயர்களையும், மானியம் வழங்கப்பட்டதற்கு சாட்சியாகக் கையெழுத்திட்ட அதிகாரிகளின் கையெழுத்துகளையும் பற்றி செப்பேடு பேசுகிறது. இந்த கிராமங்களிலிருந்து கிடைக்கும் வரி வருவாய் அரசருக்குத்தான் செல்ல வேண்டும் என்றாலும் அரசர் பிறப்பித்த சாசனம் காரணமாக இந்த விஹாரத்துக்கும் பௌத்த மடாலயத்துக்கும் தரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
வரி இனங்கள் பற்றிய பட்டியல் மலைக்க வைக்கிறது. தண்ணீர் வரி, திருமணத்தின்போது செலுத்த வேண்டிய வரி, ஆட்டு மந்தைகளை வளர்ப்போர் செலுத்த வேண்டிய வரி, தறிகளில் நெய்யப்படும் ஆடைகளுக்கு வரி, துணி வெளுப்போர் பயன்படுத்தும் துவைக்கும் கற்களைப் பயன்படுத்துவதற்கான வரி, மட்பாண்டங்களுக்கு வரி என்று பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு வரிக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன. அதிகாரிகளின் பதவிப் பெயர்களும் அப்படியே.
அரசனின் ஆணைகளைத் தொகுத்து வெளியிடும் அதிகாரிக்கு ‘திருமந்திரவோலை நாயகம்' என்று பெயர். வரிபத்தாயம் என்பது வரி விவரங்கள் எழுதப்பட்ட பதிவேடுகள். ஆனைமங்கலத்தைச் சுற்றி நிலங்களைக் கணக்கெடுக்க 2 ஆண்டுகள் 72 நாள்கள் ஆகியுள்ளன. விஹாரத்தைக் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆயின!
யாரெல்லாம் இந்த மானியத்தால் பயன்பெற வேண்டும் என்பதும் தீர்மானமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாசன வசதிகளைச் செய்து தருதல், வாய்க்கால்களைப் பராமரிப்பது, கிணறுகளை வெட்டுவது, மானியக் கிராமங்களிலிருந்து பிற கிராமங்களுக்குத் தண்ணீரைப் பாய்ச்சுவது தொடர்பாகத் தெளிவாக வழிகாட்டல்கள் உள்ளன. மரங்களை நடுவது, தோப்புகளை வளர்ப்பது, எண்ணெய் செக்குகளை நாட்டுவது, சுட்ட செங்கற்களைக் கட்டடம் கட்ட பயன்படுத்துவது, கட்டுமானத்தில் தரத்தைப் பயன்படுத்துவது பற்றியெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன. மடாலயத்தின் பக்கத்தில் வாழும் மக்களால் ஏற்படும் ஓசைகளை மற்றவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதுகூட கூறப்பட்டிருக்கிறது!
தஞ்சாவூரில் மிகப்பெரிய சிவாலயத்தைக் கட்டிய மன்னன் நாகப்பட்டினம் அருகில் இந்த புத்த விஹாரத்தைக் கட்ட உதவியிருக்கிறார். பிற்காலத்தில் புரவலர் இன்றி சூளாமணிவிஹாரம் பாழாகிவிட்டது.
19-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த புத்த விஹாரம் முற்றாக அடையாளமின்றி அழிக்கப்பட்டது. இதை சர் டபிள்யூ. எலியட் பதிவு செய்திருக்கிறார்.
“நாகப்பட்டினத்துக்கு வடக்கில் ஒன்றாவது மைலிலிருந்து இரண்டாவது மைலுக்குள் உயரமான கோபுரம் இருக்கிறது. அது கடலில் செல்வோருக்கு அடையாளச் சின்னமாகத் திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏசு சபையினர் இந்த இடத்துக்கு அருகில் குடியேறினர். அந்த கோபுரம் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அதை இடித்துத் தள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மனுச் செய்தனர்.
சிலகால இழுத்தடிப்புக்குப் பிறகு 1867 ஆகஸ்ட் 28-ம் தேதி அந்த கோபுரத்தை இடித்துத்தள்ள பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அனுமதி தந்தனர். அந்தக் கட்டிடம் இடிக்கப்பட்ட சில காலத்துக்குப் பிறகு வெண்கலத்தாலான புத்தர் சிலை அங்கே கிடைத்தது. அதை லார்டு நேப்பியருக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். இவ்வாறாக பௌத்த விஹாரத்தின் கடைசி அடையாளமும் தொலைந்தது.
லெய்டன் செப்பேடுகள் சில கேள்விகளை எழுப்புகின்றன. எங்கோ ஒரு நாட்டைச் சேர்ந்த சைலேந்திர மன்னனின் வேண்டுகோளை ஏற்று நாகப்பட்டினத்தில் புத்த விஹாரத்தை ஏன் சோழச் சக்ரவர்த்தி ஏற்படுத்தினார்? பிற மதங்களையும் மதிக்கவேண்டும் என்பதாலா? சைலேந்திரர்களுடன் நட்புறவு கொள்வதற்காகவா? அல்லது இரண்டும் சேர்ந்தா? அல்லது வேறு காரணம் இருக்குமா? வரலாற்று ஆய்வு மாணவர்கள் இந்தப் புதிர்களுக்கு விடை காண வேண்டும்.
-- ஏ. ரங்கராஜன் --- தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக