ராஜராஜசோழ தேவரின் தேவி பஞ்சவன் மாதேவியாரின் அதிகாரிச்சி (பெண் அதிகாரி) ஸ்ரீமூத்த சோழ மாதேவி என்ற பெண், ஆயிரத்து நூற்று எழுபத்திரண்டு கழஞ்சு பொன் கொண்டு உமாசகிதர் பொன் திருமேனி ஒன்றினை, பீடம், பிரபை ஆகியவற்றோடு செய்து இடைமருதூர் கோயிலுக்கு அளித்தார் என ஒரு கல்வெட்டு கூறுகிறது. பஞ்சவன் மாதேவியாரின் அதிகாரிச்சி பற்றிய குறிப்பு இக்கோயிலிலும், ராஜராஜனின் பட்டத்தரசி லோக மாதேவியின் அதிகாரிச்சி பற்றிய குறிப்பு திருவையாறு கோயில் கல்வெட்டிலும் காணப்பெறுவது குறிப்பிடத்தக்கவை.
- See more at: http://m.dinakaran.com/adetail.asp?Nid=15715#sthash.wPZJG54y.dpuf
சோழர்கள் காலத்தில், பெரும்பாலான கோவில்களின் திருப்பணிகள் நடந்தன.செம்பியன்மாதேவி, திருப்பணி மேற்கொண்டதற்கு, பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. கோவில்களின் கட்டுமானத்தில், ஆண்கள், பெண்கள் என, அனைவரும் பயன்படுத்தப் பட்டனர். கோவில் கட்டுமானத்தை கண்காணிப்பதற்கு, "கண்காணி'யாக தனி அதிகாரியும் இருந்தனர் என, அறியமுடிகிறது.
"அதிகாரிச்சி'கள் பணிபுரிந்தனர்குறிப்பாக, பெண்கள், "அதிகாரிச்சி'யாகவும் பணிபுரிந்தனர்.
அதிகாரிச்சி சோமயன் அமித்திரவல்லி
அதிகாரிச்சி எருதன் குஞ்சரமல்லி
பெண்களுக்குச் சொத்துரிமை ஓரளவு இருந்துள்ளது. குந்தவையார், செம்பியன்மாதேவி போன்ற அரச குடும்பத்துப் பெண்கள் மட்டுமல்ல சில வணிகர், வேட்டுவர், வேளாளர் குலப் பெண்களும் கோயிலுக்குக் கொடுத்த கொடை பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. காவலன் குறும்பிள்ளரில் சொக்கன் மனைக்கிழத்தி, வேளாளரில் கண்ணன் மூவேந்தவேளான் மணவாட்டி பெருந்தேவி ஆகியோர் கோயிலுக்குக் கொடை கொடுத்தமை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசராசன் கூட “நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும்” ஆகிய பெண்கள் கொடைகளைத் தன் கல்வெட்டில் குறிக்கின்றான்.
சமுதாயத்தில் எல்லாப் பெண்களும் கணவன் இறந்த பின்னர் தீப்பாய்ந்தனர் என்று கொள்ள முடியாது. இவ்வழக்கம் மிக அருகியே காணப்பட்டது. பலர் கைம்மை நோன்பு நோற்றும் வாழ்ந்திருக்கக் கூடும். கண்டராதித்தன் திருத்தேவியரரான செம்பியன் மாதேவி தன் கணவன் இறந்தபின், பல ஆண்டுகள் மூன்று அரசர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து, பல இறைப்பணிகள் செய்துள்ளார்.
ஊர்ச்சபைகளை அமைத்து மக்கள் ஆட்சிக்கு அடிகோலினான்.
உடன்கூடத்து அதிகாரிச்சி என்ற பதவியைப் பெண்மக்களுக்குக்
கொடுத்து அவர்களும் அரசியலில் பங்குகொள்ள வகை செய்தான்.
சோழர் ஆட்சியில் அதாவது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அரசு அலுவலர்களாக இருந்துள்ளனர். இதோ அதற்கான சான்று இராஜராஜனின் பட்டத்தரசி உலகமாதேவியார் இவர் திருவையாற்றில் கட்டிய கோயில் ஒலோகமாதேவீச்சரம் எனவும் தற்போது வடகைலாசம் வழங்கப்படுகிறது. இக்கோயில் கல்வெட்டில்தான் ஒலோகமாதேவியரின் தனி அதிகாரிகளும் அதிகாரிச்சுயும் குறிப்பிடப்படுகின்றனர். அதில் அதிகாரிச்சியின் பெயர் எருதந் குஞ்சர மல்லிஎனக் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு
'உடன்கூட்டத்து அதிகாரம் செய்கின்ற
கோவாலூர் உடையான காடன்
நூற்றென்மரையும் அதிகாரிச்சி
எருதந் குஞ்சர மல்லியையும்' இதே கோயிலில் முதலாம் இராஜராஜன் காலத்திலும் ஒரு அதிகாரிச்சியின் பெயர் குறிப்பிடப்படுகிறாள். அவள் பெயர் அதிகாரிச்சி சோமயன் அமிர்தவல்லி என்பதாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக