|
31/8/15
| |||
Kathir Nilavan
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள்
30.8.1957
காந்தியத் தொண்டர் சசிபெருமாள் மரணத்திற்குப் பிறகு மதுவிற்கு எதிரான
கிளர்ச்சி தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. ஆனால் அதற்கு வலு சேர்க்கும்
வகையில் மதுவிற்கு எதிரான சிந்தனைகளை பரப்ப தமிழ்த் திரையுலகம் தயாராக
இல்லை.
தற்காலத் திரைப்படங்களில் கர்ணனோடு பிறந்த கவச குண்டலம் போல கதாநாயகர்கள்
எப்போதும் மது போத்தல்களோடு தான் அலைந்து திரிந்து கும்மாளம்
கொட்டுகின்றனர். அக்காலத்தில் மதுவை எதிர்த்து திரையுலகில் பரப்புரை
செய்தவர் என்.எஸ்.கிருஷ்ண
ன். அவரைப் போல் இன்று பரப்புரை செய்ய திரையுலகில் ஒருவரும் இல்லை என்பது
வேதனைக்குரியது.
இந்திய விடுதலைப் போரில் மதுவிற்கு எதிரான போராட்டத்தை காந்தியார்
முன்னெடுத்தார். அவரின் மதுவிலக்கு கொள்கையில் தீவிரப்பற்று கொண்டவராக
விளங்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன். மதுவிலக்கு கொள்கையை தான் நேசித்த
கலைத்துறையிலும் புகுத்த விரும்பினார்.
1930களில் 'தேசபக்தி' எனும் நாடகம் மூலம் மதுவின் தீமைகளை எடுத்துரைத்தார்.
1938ஆம் ஆண்டு சென்னை மாகாண முதல்வராக இருந்த இராசாசி மதுவிலக்கை கொண்டு
வந்த போதிலும், அதனை சென்னை மாகாணம் முழுவதும் கொண்டு வந்தவர் ஓமந்தூர்
இராமசாமி ரெட்டியார் ஆவார். 1948ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று முழு
மதுவிலக்கு கொள்கை நடைமுறைக்கு வந்தது. அப்போதே முதல்வர் ஓமந்தூரர்
முன்னிலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதுவிலக்கு குறித்து நகைச்சுவை
ததும்ப பாடல்களைப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்
என்.எஸ்.கிருஷ்ணன்.
அண்ணாவின் படைப்பில் உருவான 'நல்ல தம்பி' திரைப்படத்தில் மதுவிலக்கு
கொள்கையை மதுரம் அவர்களோடு நகைச்சுவை பாடல் மூலமாக வெளிப்படுத்திய போது,
அப்பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பரவின.
கணவன்மார்கள் மது குடித்து குடித்து குடும்பத்தைச் சீரழித்த கதையை மதுரம்
விளக்கும் பாடல் வரிகள் இதோ:
குடி கெடுத்த குடியொழிஞ்சது
அடிதடி சண்டையதுங் கொறஞ்சது
ஆணும் பெண்ணும் புத்தி யறிஞ்சது -எங்க நாட்டிலே
அக்டோபர் ரெண்டுக்கு மேலே-
தாலிக் கயிறு தனியாயிருக்கும். தங்கமிருக்காது- அதிலே தங்கமிருக்காது
தண்ணி குடிக்கத் தகரக் கொவளை சொம்புமிருக்காது- வீட்டிலே சொம்புமிருக்காது!
பாலு வாங்கக் கொழந்தப் பசிக்குப் பணமிருக்காது -கையிலே பணமிருக்காது!
பாழுங்கள்ளைக் குடிப்பது மட்டும் நாளுந்தப்பாது- எந்த நாளுந் தப்பாது
கூலிக்காசில் சோளம் வாங்கிக் கூழுகாச்சி வச்சிருப்பா!
ஆள சந்த ஆம்பிளைதான் அதையும் வித்துக் குடிச்சிடுவான் கடைக்குப்
போவான்.... கள்ளக் குடிப்பான் காரியமில்லாமே சண்டைக்குப் போவான் வடைய
ரெண்டை வாங்கிக்குவான் வழிநெடுகப் பேசிக்குக்குவான்
வந்து கதவைத் தட்டுவான்
வாயில் வந்ததைத் திட்டுவான்!
வாழ்வின் சுகத்தை விரும்பும் பெண்ணை வஞ்சக்காரியென்ற
ு ஒதப்பான்; அவன் வாரிசுக்காகக் கருவைத் தாங்கும் வயித்திலே யெட்டி மிதிப்பான்
-அப்பப்பா இந்தக் கள்ளுக்குடியை நம்ம நாட்டை விட்டு ஒழிச்ச அந்த நல்ல
மனுசன் காலுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கும்பிடு!
மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்ட கணவனாக என்.எஸ்.கிருஷ்ணன் பாடும் வரிகள் இதோ:
மனுசனாகிப் போனேன்- இப்ப நான் மனுசனாகிப் போனேன்
பனைமரப் பாலு பட்டை பிராந்தி
பக்கம் வந்தா எடுக்குறேன் வாந்தி-
இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வருவதற்கு முன்னே
எங்கண்ணுக்குள்ள இரண்டாளாகத் தெரிஞ்சுது பெண்ணே சுருண்டு சுருண்டு நான்
சும்மா படுப்பேன்
சுதியை விட்டுக் கூடப் பாட்டுகள் படிப்பேன் வரண்ட காரவடை வாத்து முட்டை
கருவாட்டைத் தின்னவாய் நாத்தம் நீங்கி நான்
மனுசனாகிப் போனேன்!
பிறிதொரு பாட்டினில் மதுவிற்கு மாற்றாக எவற்றையெல்லாம் குடித்துப் பழக
வேண்டும் என்பதைப் பட்டியல் போடுவார். அது பின்வருமாறு:
என்.எஸ்.கே. : குடிச்சுப் பழகணும்
குடிச்சுப் பழகணும் படிச்சுப் படிச்சுப் சொல்லுறாங்கோ பாழுங்கள்ளை நீக்கி
பாலை குடிச்சுப் பழகணும்.
மதுரம்: பாலு வாங்கப் பணமில்லே
என்.எஸ்.கே. : டீயைக் குடிச்சுக்கோ!
மதுரம்: டீயும் கெடுதலுன்னு தெரிஞ்சா
என்.எஸ்.கே. : மோரைக் குடிச்சுக்கோ!
மதுரம்: மோரும் நமக்குக் கிடைக்கல்லே?
என்.எஸ்.கே. : நீராகாரம் இருக்கவே இருக்கு குடிச்சுப் பழகணும்
மனிதன் குடிப்பதற்காக சிறை வைத்த மரங்களுக்கும் விடுதலை தரவும் அவர் தயங்க வில்லை.
விடுதலை! விடுதலை! விடுதலை!!!
உடலை வாட்டும் நோய்களுக்கும் தலைவலிக்கும் இன்று முதல் விடுதலை! பகலும்
இரவும் தொங்கிக் கிடந்த பல்லாக் களுக்கும் விடுதலை! பயந்து பயந்து ஏறி
இறங்கும் பாட்டாளிக்கும் விடுதலை!
ஜெகத்தை வெறுக்கச் செய்யும் கஞ்சா சிலும்பிகளுக்கும் விடுதலை!
முகத்தை மூடிக் குடிக்கும் கள்ளு மொத்தை களுக்கும் விடுதலை!
பனை மரத்துக்கும் விடுதலை!
தென்னை மரத்துக்கும் விடுதலை!
பனை மரத்துக்கும் தென்னை மரத்துக்கும் ஈச்ச மரத்துக்கும் விடுதலை!
விடுதலை! விடுதலை! விடுதலை!!!
என்.எஸ்.கே.வால் விடுதலை செய்யப்பட்ட மரங்களும் இன்றில்லை.
அவற்றிலிருந்து இறக்கப்பட்ட கள்ளும் இன்றில்லை. ஆனால் போதையிலிருந்து
மட்டும் தமிழன் விடுபடவில்லை. அயல்நாட்டு மதுபானம் என்ற பெயருக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கிறான்.
அண்ணாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., செயலலிதா
ஆகியோர் தமிழர்களை குடிக்க வைத்து தமிழச்சி தாலிகளை அறுத்துக்
கொண்டிருக்கின்றனர். மதுரம் பாடிய காலத்தில் தங்கம் இல்லாவிட்டாலும்
தாலியாவது மிச்சமிருந்தது. இப்போது அதுவுமில்லை. தற்போது மனைவி,
குழந்தைகளை பரிதவிக்க விட்டு இறக்கும் குடியானவர்கள் எண்ணிக்கை பெருகி
விட்டது.
அக்டோபர் 2க்குப் பிறகு மனுசனாகிப் போனேன் என்று என்.எஸ்.கிருஷ்ணன் பாடிய
பாடல் இன்று வெறுங் கனவாகி விட்டது. வருகின்ற அக்டோபர் 2இல் ஆவது அவரின்
கனவு மெய்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி என்.எஸ்.கிருஷ்ணன்
நினைவு நாளில் உறுதியேற்போம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக